பயனர்:Thiyagu Ganesh/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாவ்ரி இசைக்கருவி
Pavri.jpg
பாவ்ரி நாச் நடனத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய இசைக்கருவியான பாவ்ரி
வகைநாட்டுப்புற நடனம்
மூலம்மகாராஷ்டிரா, இந்தியா

பாவ்ரி நாச் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்கு கடற்கரை மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் கோக்னா பழங்குடி சமூகத்தினரால் ஆடப்படும் பழங்குடி நாட்டுப்புற நடனம் ஆகும். இந்த நடனம் விழாக்காலங்களில் ஆண்கள் மற்றும் பெண்களால் ஆடப்படும் குழு நடனம் ஆகும். இந்த நடனத்தின் பூர்விகம் மகாராஷ்டிரம் என்றாலும் அதனுடன் பூலோக ரீதியாக தொடர்பு கொண்டுள்ள குஜராத் மாநிலத்திலும் இந்த நடனம் ஆடப்படுகிறது.[1]

தோற்றம் மற்றும் பின்னணி[தொகு]

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மேற்குப்பகுதியின் மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் “கோக்னா” என்ற பழங்குடி சமூகத்திலிருந்து இந்த பழங்குடி நடனம் உருவானதாகக் கூறப்படுகிறது. இந்த நடன வடிவத்தை ஆண் மற்றும் பெண் இருவரும் நிகழ்த்துகின்றனா். மேலும் இது "டார்பா" என்று குறிப்பிடப்படும் உலர்ந்த குடுவைக் பழத்திலிருந்து தயாரிக்கப்படும் காற்றிசைக் கருவியால் இந்த நடனத்திற்கு “டார்பா நாச்” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இசைக்கருவியிலிருந்து வரும் இசை மாறுபட்ட ஒலியுடன் உள்ளது. இது இந்த நடனத்திற்கு கூடுதல் பலம் சோ்ப்பதாக உள்ளது.[2]

நடன நுட்பம் மற்றும் நிகழ்த்துமுறை[தொகு]

பொதுவாக பண்டிகை காலங்களில் ஆண்களும் பெண்களும் சோ்ந்து ஆடும் இந்த நடனம் நெருக்கமான உடல் உருவாக்கத்தில் நிகழ்த்தப்படும் ஆட்டமாகும். இதில் கலைஞர்கள் ஒருவருக்கொருவர் தங்களது இடுப்பை நெருக்கமாக வைத்துக் கொண்டு நடனத்தின் போது பல்வேறு சிக்கலான வடிவங்களை உருவாக்குகின்றனா். இந்த நடன முறையை ஆடுவதற்கு பங்கேற்பாளர்களின் சிறந்த திறன்கள், தனித்த ஆற்றல் மற்றும் செயல்திறன் போன்ற அம்சங்கள் மிக முக்கியத் தேவைகளாக உள்ளன. நடனத்தின் தோற்றச் செறிவு ஆடும் கலைஞர்களின் கால் அசைவுகளில் உள்ளது. கால்களை முன்னும் பின்னும் இரு அடி அல்லது ஒரு அடி எடுத்து வைத்து மிகவும் நோ்த்தியாகவும் ஒத்திசைவாகவும் ஆடுப்படுகிறது. இது ஒரு குழுவாக ஆடும் நடனம் மட்டுமல்ல சில வேளைகளில் தனி கலி நடன (அக்ரோபாட்டிக்) வடிவமும் ஆகும். பழங்குடியின ஆண்கள் பாவ்ரி நாச்சை ஒரு குழுவில் தனித்தனியாகவோ அல்லது தனி ஒருவராகவோ ஆடுகிறார்கள். ஆண்கள் ஒன்று சோ்ந்து ஒரு மனித பிரமிட்டை உருவாக்குவதையோ அல்லது ஒரு நடனக் கலைஞரை தடித்த கம்பத்தில் சுழற்றியும் ஆடப்படுகிறது.[3] இது “கோக்னா” எனப்படும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பழங்குடி நடன பாணி. ஆகையால் இந்த நடனத்திற்கென தனியாகப் பயிற்சி மையங்கள் எதுவும் இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ இல்லை.

உடை அலங்காரம்[தொகு]

இந்த நடனம் ஆண்களாலும் பெண்களாலும் நிகழ்த்தப்படலாம், எனவே அணியும் ஆடை அதற்கேற்ப மாறுபடும். அவை பின்வருமாறு:

ஆண்கள்[தொகு]

ஆண்கள் பயன்படுத்தப்படும் உடையில் ஒரு வெள்ளை சட்டை, ஒரு கருப்பு மேல் அங்கி, ஒரு வெள்ளை வேட்டி மற்றும் ஒரு வெள்ளை தலைக்கவசம் ஆகியவை அடங்கும்.

பெண்கள்[தொகு]

பெண்கள் பொதுவாக சேலைகளையே அனிந்து கொள்வா். இருப்பினும் உடுத்தும் முறையில் பழங்குடியின பாணி தென்படுகிறது.

மேற்கோள்கள்=[தொகு]