பயனர்:Thendralsuriya28/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருகுவில்லை[தொகு]

A collection of different types of eyepieces.

அருகுவில்லை அல்லது ஆகுலர் லென்ஸ் என்பது தொலைநோக்கிகள் மற்றும் நுண் ஆப்டிகல் சாதனங்கள் போன்ற பல்வேறு கருவிகளுடன் இணைக்கப்பட்டவை. இக்கருவிகளின் மூலம் ஒருவர் பார்க்கும் போது லென்ஸ் கண்ணுக்கு மிக அருகாமையில் இருப்பதால், இது இப்பெயர் பெற்றது. உருப்பெருக்கம் அளவு அருகுவில்லையின் குவி நீளத்தை சார்ந்துள்ளது. அருகுவில்லையின் ஒரு முனையில் 'பீப்பாய்' போன்ற அமைப்பும், உள்ளே பல 'லென்ஸ் கூறுகளையும்' கொண்டுள்ளது. பீப்பாய் அந்தக் கருவியில் பொருந்துமாறு சிறப்பாக வடிவமைக்கபட்டுள்ளது. அருகுவில்லையை நகர்த்தும் போது தெளிவற்ற படங்கள் தெளிவாகத் தெரியும். தொலைநோக்கியின் அருகுவில்லை தொலைநோக்கியிலையே நிரந்தரமாக பொருத்தப்பட்டுள்ளது. தொலைநோக்கிகளிலும் நுன்னோக்கிக்காகளிலும் அருகுவில்லைகள் இடம்மற்றிகொள்ளும் திறத்தை கொண்டுள்ளது.

உருவானவிதம்[தொகு]

ஒற்றை குவிவானவில்லை ஒரு அருகுவில்லையாக பயன்படுத்தும்போது ,கோள மற்றும் வண்ண பிறழ்ச்சி இருந்தும் மற்றொரு குறைபாடும் அதில் இருந்தது.கண்ணனுக்கு அருகில் கண் லென்ஸ் இருக்கும் போது,புறபகுதிகளில் இருந்து வெளிவரும் ஒரு பொருளின் கதிர்கள் கண் லென்ஸை தாண்ட முடியாததால் , கண்ணின் உள்ளே சென்றடைய தவறுகின்றன.இது காட்சியின் தெளிவை குறைக்கிறது.இந்த குறைபாடுகளை தவிர்க்கவே பீல்ட் லென்ஸ் எனப்படும் லென்ஸ் கண் லென்சுக்கு புற நிலைக்கும் நடுவில் வைக்கப்பட்டுள்ளது.அதனால் ,இது அச்சு நோக்கி வரும் குறு கதிர்களை திசைத்திருப்பி,பாரா அச்சு கதிர்களோடு இணைந்து ,கண் லென்ஸ் வழியே வந்தடையும்.இதனால் அதன் காட்சி அதிகமாகிறது.பீல்ட் லென்ஸ் மற்றும் கண் லென்ஸ் இரண்டையும் காம்ப்ளெக்ஸ் அருகுவில்லை என்பார்கள்.

ஹைஜென் அருகுவில்லை[தொகு]

Huygens eyepiece diagram

இது கிறிஸ்டியன் ஹைஜென்ஸ் என்பவரால் 1660 ஆம் ஆண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்படுள்ளது.இது தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள காம்பௌன்ட் லென்ஸ் ஆகும்.ஹைஜென் அருகுவில்லையில் இரு பலனோ குவிவுகள் உள்ளது.அந்த பலனோ குவிவுகளின் சமதளப் பரப்பானது இரு கற்று இடைவெளி அளவில் பிரிக்கப்பட்டுள்ளது. குவிய சமப்பரப்பனது இரு லென்சுகளுக்கு நடுவில் உள்ளது. ஹைஜென்ஸ், இரண்டு லென்சுகளுக்குள் இடையே காற்று செல்லும் அளவிற்கு உள்ள இடைவெளியானது , அருகுவில்லையை பூஜ்யம் குறுக்கு வண்ண பிறழ்ச்சியில் செயல்படவைக்கும். இப்பொழுது லென்சுகள் ஒரே ஒளிவிலகல் தன்மையை உடைய கண்ணாடிகளால் செய்யப்பட்டிருந்தால் ,பின் அதன் பிரிவினையை ,

மற்றும் ஆனது காம்போனென்ட் லென்ஸ்களின் குவியத்தூரம் ஆகும். இந்த அருகுவில்லை மிக நீண்ட குவிய நீளம் கொண்ட தொலைநோக்கிகளில் நன்றாக வேலை செய்கிறது. ஹைஜென்ஸ் காலத்தில் மிக நீண்ட குவிய நீளம் கொண்ட வான்வெளி தொலைநோக்கிகள் உட்பட உறுப்பு நீண்ட குவிய நீளம் அல்லாத நிறம்சேரா ஒளிவிலக்கு தொலைநோக்கிகள் பயன்படுத்தப்பட்டன. இந்த ஆப்டிகல் வடிவமைப்பு இன்றைய குறுகிய குவிய நீளம் அருகுவில்லையோடு ஒப்பிடும் போது கண் நிவாரண, உயர் படத்தை விலகல், வண்ண பிறழ்ச்சி, மற்றும் பார்வையில் ஒரு மிக குறுகிய வெளிப்படையான துறையில் அவதிப்படுதல் போன்ற குறைபாடுகளை கொண்டுள்ளது. இந்த அருகுவில்லையை உருவாக்குவது எளிமையாதலால் இதை எளிமையான தொலைநோக்கி அல்லது நுண்ணோக்கி என்று அழைக்கபடுகிறது.ஹைஜென்ஸ், அருகுவில்லையின் 'லென்ஸ் கூறுகள்' நடத்த சிமெண்ட் கொண்டிருக்க வேண்டாம். ஏனெனில், பயனர் அருகுவில்லையை "சூரியன் வீழ்த்தல்"ஆக பயன்படுத்தலாம்.

ராம்ஸ்டன் அருகுவில்லை[தொகு]

Ramsden eyepiece diagram

ராம்ஸ்டன் அருகுவில்லையின் 'லென்ஸ் பிரிப்பு' பல்வேறு வடிவமைப்புகளிடையே வேறுபடுகிறது. இது 1782ஆம் ஆண்டு வானியல் மற்றும் அறிவியல் கருவி தயாரிப்பாளர் ஜெஸ்ஸி ராம்ஸ்டன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் கண் லென்ஸ் குவியத்தூரம் 7/10 மற்றும் 7/8 இடையே உள்ளது. இந்தக்கருவியின் வடிவமைப்பு ஹைஜென்ஸ் கருவியின் வடிவமைப்பை விட தரம் உள்ளதாக இருந்தாலும் இன்றைய கருவிகளுக்கு ஈடு கொடுக்க முடியாது. இது நிற ஒளி மூலங்கள் அருகில் வைத்து பயன்படுத்த ஏற்றது.(எ.கா) போலரிமீட்டர்.

கெல்னெர் அருகுவில்லை[தொகு]

Kellner eyepiece diagram

கெல்னெர் அருகுவில்லையில் ஒரு நிறந்தராவிரட்டை எஞ்சிய குறுக்கு வண்ண பிறழ்ச்சி சரி செய்ய ரம்ஸ்டின் வடிவமைப்பின் எளிய பிளானோ-குவிவு கண் லென்ஸ் இடத்தில் பயன்படுத்தப்படுகிறது. கார்ல் கெல்னெர் 1849 ஆம் ஆண்டு இந்த முதல் நவீன நிறம்சேரா அருகுவில்லை வடிவமைத்தார். இது ஒரு "ராம்ஸ்டன் achromatized" என்றும்அழைக்கப்படுகிறது. கெல்னெர் அருகுவில்லை ஒரு மூன்று லென்ஸ் வடிவமைப்பு கொண்டது. இது மலிவான மற்றும் ராம்ஸ்டன், ஹைஜென்ஸ் அருகுவில்லையை விட தெளிவாக படம் பிடித்துக் காட்டக்கூடியது. கெல்னெர் அருகுவில்லையில் ஒரு சிக்கல் உள்ளது. அது என்னவென்றால், உள் எதிரொளிப்புகள் ஆகும்.

RKE[தொகு]

RKE eyepiece diagram

ஒரு RKE அருகுவில்லை,ஒரு நிறம்சேரா துறையில் லென்ஸ் மற்றும் இரட்டை குவிவு கண் லென்ஸ் போன்றவற்றை கொண்டு கெல்னெர் அருகுவில்லையின் ஒரு எதிர்மறையாக தழுவிக்கொண்டுள்ளது. இது டாக்டர் டேவிட் ரேங்க் என்பவரால் எட்மண்ட் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வடிவமைத்து கொடுக்கப்பட்டது. இந்த வடிவமைப்பு கிளாசிக் கெல்னெர் வடிவமைப்பு பார்வையை விட சற்று பரந்த துறையில் வழங்குகிறது. எட்மண்ட் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தை பொறுத்தவரை RKE என்பது ரேங்க் கெல்னெர் அருகுவில்லை என்பதாகும்.

இதையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  • A. E. Conrady, Applied Optics and Optical Design, Volume I. Oxford 1929.
  • R. Kingslake, Lens Design Fundamentals. Academic Press 1978.
  • H. Rutten and M. van Venrooij, Telescope Optics. Willmann-Bell 1988, 1989. ISBN 0-943396-18-2.
  • P. S. Harrington, Star Ware: An Amateur Astronomer's Guide to Choosing, Buying, and Using Telescopes and Accessories: Fourth Edition. John Wiley & Sons, Inc.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thendralsuriya28/மணல்தொட்டி&oldid=3769893" இலிருந்து மீள்விக்கப்பட்டது