உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Thaalaibatcha/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விடியல் நீதி

விடியல் நீதி என்பது தமிழ்நாட்டுமக்கள் நல கட்சி என்ற மாநில கட்சியினை பெயர் மாற்றம் செய்து தேசிய கட்சியாக மாற்றப்பட்ட ஒரு கட்சியாகும்.

தமிழ்நாட்டுமக்கள் நல கட்சி என்பது 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 நாள் தாம்பரத்தை மையமாக வைத்து துவங்கப்பட்டது. இக்கட்சியின் தலைவர்

முகவையார் என அழைக்கப்படும் முகவை தம்பி ஆவார். இராமநாதபுரம் மாவட்டம், போளூரைச் சேர்ந்த இவர் ஒரு நடிகரும் ஆவார்.

சிறுவயதிலிருந்து திராவிட சிந்தனை உடையவராக இருந்தவர். இவரின் குடும்பமே திராவிட சிந்தனையில் இருந்த்தால் திராவிட முன்னேற்ற கழகத்தில் பங்காற்றினார். மிகச்சிறந்த பேச்சாளர். சிறுபான்மை என்ற கருத்தில் உடன்பாடில்லாமல், அனைவரும் ஒருதாய் மக்கள் தான் என்ற சிந்தனையுடன், சிறுபான்மை இல்லைஎல்லோரும் ஒருபான்மைதான் என்ற கருத்தியலை முன் வைத்து 2015 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுமக்கள் நல கட்சியை தொடங்கினார்.

தற்சமயம் 2020 ஆம் ஆண்டு தனது முதுமையை கருத்தில் கொண்டு கட்சியில் இருந்து ஓய்வு பெற்றார்.

அதன் பிறகு இக்கட்சியின் பெயரை விடியல் நீதி கட்சி என மாற்றம் செய்து கொள்கைகளிலும் சில மாற்றம் செய்து மாநில கட்சியில் இருந்து தேசிய கட்சியாக மாற்றப்பட்டது.

2020 ஆம் ஆண்டு முதல் விடியல் நீதியின் தேசிய தலைவராக தாளை N.H. பாட்சா M.com., அவர்கள் வழி நடத்தி வருகிறார்.

இவர் தமிழ்நாட்டுமக்கள் நல கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்தார். திருவாரூர் மாவட்டம் ஜாம்பவானோடை - தர்ஹாவை பூர்வீகமாக கொண்ட இவர், திருவாரூர் திரு. வி. க அரசு கலை கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றவர் ஆவார்.

மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த இவருக்கு உடன் பிறந்தார்கள் ஐந்து பேர் ஆவார்கள் இவர் ஐந்தாவது பிள்ளை ஆவார். இருப்பினும் தனது குடும்பத்தில் முதல் பட்டதாரி இவரே.

ஏழ்மை நிலையிலும் ஒரு மகனையாவது படிக்க வைக்க தாயும் தந்தையும் அயராது உழைத்தனர். இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும் போது தனது தந்தையை இழந்தார்.

தனது தாயின் அயராது உழைப்பினால் முதுகலை பட்டமும் பெற்றார்.

கணினியில் சற்று ஆர்வம் கொண்ட இவர் திருமண பத்திரிக்கை அச்சடிக்கும் இடத்தில் பணி புரிந்தார்.

மைலாப்பூரில் கணக்காளராகவும் பணியாற்றினார். சிறிது காலம் கல்லூரியில் கணினி ஆசிரியராகவும் இருந்தார். 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் நாகப்பட்டினத்திற்கு இடம் பெயர்ந்தார்.

வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டதால் சென்னைக்கு 2013 ஆகஸ்ட் மாதம் 24ஆம் நாள் பணிக்கு புறப்பட்டார்.

தாம்பரத்தில் ஒரு ஸ்தாபனத்தில் மேலாளராக பணியாற்றிய போது, 2015ஆம் ஆண்டு தமிழ்நாட்டுமக்கள் நல கட்சியால் ஈர்க்கப்பட்டார். பொதுச்செயலாளராக பதவி வகுத்த இவர் ஏழைகளுக்கு அண்ணதானம் கொடுப்பது, முதியோர்களுக்கு உதவி புரிவது, மரம் நடுதல், சமுதாய அவலங்களை அரசுக்கு கொண்டு செல்லுதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திருவிழாக்களில் மக்கள் நல பணி செய்தல், பாதைகளை பராமரித்தல் சுத்தம் செய்தல், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளும், சாலை சீரமைப்பும் செய்தல் போன்ற சமூக ஆர்வலராகவும் இருந்தார். ஒன்றிய அரசு கொண்டுவந்த வேளாண்மை திருத்த சட்டம், சிறுபான்மையினருக்கு எதிரான CAA, NRC, NPR சட்டங்கள், முத்தலாக் திருத்த சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற சட்டங்களை எதிர்த்தார்.

மாநில அரசுக்கு எதிராக, மது பானம் எதிர்ப்பு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு, மின் கட்டண உயர்வு, போன்ற என்னற்ற போராட்டங்களையும் நடத்தினார்.

விடியல் நீதி கட்சியின் கொள்கைகள் எந்த கட்சியின் கொள்கையுடன் ஒத்துப்போகிறது என முடிவு செய்து 2024ஆம் ஆண்டு சென்னை கேளம்பாக்கத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும், மண்ணின் மைந்தர்கள் கழகம் என்ற தேசிய கட்சியுடன் இணைநதார் . மண்ணின் மைந்தர்கள் கட்சியில் மாநில சிறுபான்மை செயலாளராக தற்சமயம் பதவி வகுத்து வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thaalaibatcha/மணல்தொட்டி&oldid=4313384" இலிருந்து மீள்விக்கப்பட்டது