பயனர்:TNSEmohanTUT/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். ராமசேஷனைப் பற்றி தொpந்து கொள்வோம்

நோபல் பரிசு  பெற்ற இயற்பியல் விஞ்ஞானியான சர் சி.வி.ராமன் (1888-1970) இந்தியாவில் அடிப்படை அறிவியல் வளர்வதற்குத் தூண்டுகோலாக இருந்தவா வெங்கட்ராமனின் மறைவை அடுத்து ஒரு வெற்றிடம் உருவானபோது அந்த வெற்றிடத்தை நிரப்புபவராக அமைந்தார் அவரது மருமகனும் நேரடி சீடருமான எஸ்.ராமசேஷன். அவரும்சர் சி.வி.ராமனைப் போலவே ஒளியியல் விஞ்ஞானி.

இவர்  சர்.சி. வெங்கட்ராமனின் சகோதாp சீதாலெட்சுமிக்கும், சிவராமகிருஷ்ணனுக்கும், கொல்கத்தாவில் 1923ல் அக்டோபர் 10ல் பிறந்தர் அவரது பள்ளிக் கல்வி நாகபுhpயில் கழிந்தது. நாளாந்த  பல்கலைக்கழகத்தில் பயின்று பி.எஸ்.சி. ஹானாஸ் பட்டத்தையும் (1943) எம்.எஸ்சி. பட்டத்தையும் (1945) அவர் பெற்றார்.

அடுத்து பெங்களூரில்  உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் ஆய்வு மாணவராக 1948ல் இணைந்தார் 1949ல். டி.எஸ்.சி. பட்டம் பெற்றர்.

ராமன் மறைவுக்குப்பின் அவரால் வழிநடத்தப்பட்ட ராமன் ஆராய்ச்சி கழகம், இந்திய அறிவியல் கழகம், இந்திய அறிவியல் அகாதெமி ஆகியவற்றில் நிர்வாக பொறுப்பில் இணைந்து சிறப்பாக செயல்பட்டார் அந்த வகையில் ராமனின் குடும்ப உறுப்பினராக மட்டுமில்லாமல் அவரது விஞ்ஞான ஆராய்ச்சிப் பரம்பரைக்கும் பொறுப்பானவராகவும் விளங்கினார்.

27.06.2017.












எட்டியோபிளாஸ்ட்டுகள்[தொகு]

எட்டியோபிளாஸ்ட்டுகள் என்பது ஒளிபடாத பசுங்கணிகங்கள். இவைகள் பொதுவாக இருள் நிறைந்த பகுதிகளில் வளரும் பூக்கும் தாவரங்களீல் (ஆஞ்சியோஸ்பர்ம்களில்) காணப்படுகிறது. ஒரு தாவரமானது பலநாட்கள் ஒளி இல்லாத சூழலில் வளர்க்கப்படும் போது பொதுவாகக் காணப்படும் பசுங்கணிகங்கள் எட்டியோபிளாஸ்ட்டுகளாக மாறுகிறது. எட்டியோபிளாஸ்ட்டுகள் என்பது செயல்படத்தக்க நிறமிகள் இல்லாத லியூக்கோபிளாஸ்ட்டுகள். இலைகளில் அதிக அளவு எட்டியோபிளாஸ்ட்டுகள் காணப்படுகிற பொழுது பச்சை நிறத்திற்குபதில் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது.

இந்தத்தாவர உடலங்கள் புரோலேமல்லார் உடலங்களைக் கொண்டுள்ளது. இவைகள் சவ்வினால் தொகுக்கப்பட்டுள்ள பாதி துகள்களான பின்னல் போன்ற கிளைத்த குழல் போன்ற அமைப்புகள் இவைகள் பச்சைய உற்பத்திக்கான முன்னோடிகள். இந்த புரோலேமல்லார் உடலங்கள் பெருக்கல் மடங்கில் அமைந்துள்ளது.

இவைகள் ஒளி உள்ள சூழலுக்கு மாறுகிற பொழுது சைட்டோகைனின் ஹார்மோன் உற்பத்தி மூலம் பச்சைய உற்பத்தி தூண்டப்பட்டு பசுங்கணிகமாக மாற்றமடைகிறது. இந்த நிகழ்ச்சி மூலம் தைலகாய்டுகளும் மற்றும் கிரானாக்களும் புரோலேமல்லார் உடலங்களிருந்து உருவாகிறது.


மேற்கோள்[தொகு]

http://www.springerlink.com/index/qp032630631337u6.pdf








போட்டோட்ரோபின்[தொகு]

ஃபோட்டோட்ரோபின்கள் என்பது ஒளி ஈர்ப்பு புரதங்கள் ஆகும் (முக்கியமாக ப்ளாவோபுரதங்கள் இவைகள் உயர் தாவரங்களில் ஒளியினால் ஏற்படும் பல்வேறு விளைவுகளுக்கு காரணமாக உள்ளது.

இவைகள் சைட்டோகுரோம்கள் மற்றும் ஃபைட்டோகுரோம்கள் ஆகியவற்றுடன் இணைந்த ஒளிச்சூழலில் பல்வேறு விதமான வளர்ச்சி மாற்றங்களை தாவரங்களில் எற்படுத்துகிறது. மேலும் இவைகள் இலைத்துளைகள் திறப்பதிலும் மற்றும் பசுங்கணிகங்களின் நகர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது.

ஃபோட்டோட்ரோபின்கள் என்பது தாவரங்களில் உள்ள ஒளித்தூண்டல் உணர்வமைப்பின் ஒரு பகுதியாகும். இவைகள் பல்வேறு விதமான புறத்தூண்டல் விளைவுகளை தாவரங்களில் உருவாக்குகிறது. இவைகள் குறிப்பாக தண்டானது ஒளியை நோக்கி வளைவதற்கும் மற்றும் இலைத்துளை திறப்பதற்கும் காரணமாக உள்ளது.

மேலும் இவைகள் செல்களில் பசுங்கணிகங்களின் நகர்ச்சிக்குக் காரணமாக உள்ளது கண்டறியப்பட்டிருக்கிறது. .

எல்லாவற்றிற்கும் மேலாக ஊதா நிற ஒளியில் போட்டோட்ராபின்கள் சைட்டோகுரோம் செயல்பாட்டிற்கு முன்னதாக தண்டு நீட்சியை தோற்றுவிக்கிறது. மேலும் இவைகள் செல்களில் ஊதா நிற ஒளியில் மொழியாக்கம் செய்யப்பட்ட குறிப்பு சார் mRNA -கள் உருவாக்கத்திலும் பயன்படுகிறது.


மேற்கோள்கள்

(F.Vandenbusche, D.Van Der Straeten plant phys 166 (2014) pp 40-43) 

(Wada M.Kagawa T.Sato.Y (2003) “Chloroplast movement” Annu Rev Plant Bid 54: 455-468 PMID 14502999 doi:10.1146/annule V.arplant.54.031902.1350223)

(S.இனவ்-2010 -  Curr opin plant Biol 2010 Oct:13(5) 587-93 doi 10-1016/J.pbi 2010.09.002 Short et al 1994.)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEmohanTUT/மணல்தொட்டி&oldid=2344498" இலிருந்து மீள்விக்கப்பட்டது