பயனர்:TNSE karthikeyan Karur/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நுங்கு வண்டி[தொகு]

நுங்கு வண்டி என்பது தமிழ்நாட்டு சிறுவர் சிறுமியர் விளையாடி மகிழும் விளையாட்டுகளில் ஒன்று.இது வெளிப்புற விளையாட்டுகளில் ஒன்று.சங்க காலம் தொட்டே விளையாடிவரும் சிறுவர் விளையாட்டு என தமிழர்களால் சொல்லப்படுகிறது.

தோற்றம்:[தொகு]

இந்த சிறுவர் விளையாட்டு எப்போது தோன்றியது என்பதற்கான சான்றுகள் இல்லை.தமிழகத்தின் கோடைகாலத்தில் கிராமப்பகுதிகளில் அதிகமாக வளரும் பனைமரத்தில் காய்க்கும் நுங்கைக் கொண்டு தயாரிக்கப்பட்டு, இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது.

நுங்கு வண்டி அமைப்பு[தொகு]

பனை மரத்திலிருந்து வெட்டிய நுங்கை உறிஞ்சி சாப்பிட்ட பின், வீண் என தூக்கி எறியப்படும் நுங்கின் மேற்பகுதிகளைக் கொண்டு நுங்கு வண்டி தயாரிக்கப்படுகிறது. இரண்டு சக்கரங்களுடன், ஆங்கில எழுத்தான V போன்று இருக்கும் நீளமான கவை மூலம் தள்ளுவதால் இந்த சக்கரங்கள் சுழற்றப்பட்டு, நுங்கு வண்டி நகரும்.

நுங்கு வண்டி தயாரிக்க தேவையானவை[தொகு]

  •        சம எடை மற்றும் வடிவமுள்ள தூக்கியெறியப்படும் நுங்கின் இரண்டு மேற்பகுதிகள்
  •        ஒரு சாண் நீளமுள்ள சிறு குச்சி
  •        V வடிவிலான இரண்டு முதல் மூன்று அடி நீளமுள்ள குச்சி(கவை)

நுங்கு வண்டி செய்யும் விதம்[தொகு]

பனைநுங்கின் மேற்பகுதியிலுள்ள மூன்று கண்கள் போன்ற பகுதிகளுக்கு இடையில் ஒரு சாண் நீளமுள்ள குச்சியை நுழைத்து,மறுபுறம் எடுத்து,மற்றொரு பனைநுங்கின் அடிப்பகுதியிலிருந்து முன்புறமாக சொருகினால் இரண்டு நுங்கின் பகுதிகளும் இணைக்கப்பட்டு, சுழலும் சக்கரம் கிடைக்கும்.

இதனை வி வடிவிலான 2 முதல் 3 அடி நீளமுள்ள குச்சியைக் கொண்டு தள்ளுவதன் மூலமாக நுங்கு சக்கரங்கள் சுழன்று, இடம் விட்டு இடம் நகரும்.

நுங்கு வண்டியின் வகைகள்[தொகு]

நுங்குவண்டியில் பொருத்தி விளையாடப்படும் நுங்கு சக்கரங்களின் எண்ணிக்கையை பொறுத்து இதனை வகைப்படுத்தலாம். குறைந்தது இரண்டு முதல் தயாரிப்பாளரின் திறனைப்பொறுத்து நுங்கு சக்கரங்களை கூட்டிக்கொண்டே போகலாம். இதனால் வண்டியின் அமைப்பும் மாறும்.

நுங்கு வண்டி விளையாட்டின் சிறப்புகள்[தொகு]

     
  • சிறுவர் சிறுமியருக்கு மனமகிழ்ச்சி கிட்டும்
  • அவர்களே நுங்கு வண்டியை தயாரிப்பதால் அவர்களின் படைப்பாற்றல் திறனும், சிந்தனை திறனும் வளர வாய்ப்புள்ளது.
  • மேலும் அவர்கள் இயந்திர தளவாட பொறியியல் துறையில் படிக்கும்போது நவீன புதிய கருவிகள் கண்டுபிடிப்பு/தயாரிப்புகளுக்கு இந்த விளையாட்டு தூண்டுகோல் அமையும்.
  • வீணாகும் பொருட்களைக் கொண்டு புதிய பொருட்கள் தயாரிக்கும் அறிவுத்திறன் வளரும்.

நுங்கு வண்டி விளையாட்டின் தற்போதைய நிலை[தொகு]

வளர்ந்த்து வரும் தொழில்நுட்பம் கொண்டு தயாரிக்கப்படும் வீடியோ கேம்கள் வரத்து காரணமாகவும், நகர்மயமாதல் நாகரீகம் காரணமாகவும் தமிழகத்தின் பாரம்பரிய விளைட்டுகளில் ஒன்றான இந்த நுங்குவண்டி தற்போது விளையாட்டு மெல்ல மெல்ல அழிந்து வருகிறது.

  1. வழிமாற்று குறித்த பக்கம்