பயனர்:TNSE agrirameshp Tpr/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழகத்தின் முக்கிய பாசனத்திட்டங்கள்[தொகு]

  • மேட்டூர் அணை
  • பவானி சாகர் அணை
  • அமராவதி அணை
  • பெரியார் வைகை அணை
  • பாபநாசம் தாமிரபரணி அணை
  • மணிமுத்தாறு பிரதான கால்வாய்
  • பேச்சிப்பாறை மற்றும் பெரும்பாணி அணை
  • கிருஷ்ணகிரி அணை
  • சாத்தனூர் அணை
  • பரம்பிக்குளம் ஆழியார் திட்டம் மற்றும்
  • திருமூர்த்தி அணை

ஆகியவை தமிழகத்தின் முக்கிய கால்வாய் பாசனத்திட்டங்களாகும்.

இந்த பாசனத் திட்டங்களின் மூலம் சுமார் 8 இலட்சம் எக்டர் நிலத்தில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் அதிகபட்சமாக சுமார் 80 சதம் அளவு நெற்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் மேட்டூர் அணைப் பிடிப்பால் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மட்டும் சுமார் 52 சதம் வரை பாசன வசதி பெறுகிறது. மற்ற அணைத் திட்டங்களால் தமிழகம் சுமார் 10 சதத்திற்கும் குறைவாகவே பாசன வசதி பெறுகின்றது.[1]கிணற்றுப் பாசனத்தில் மின் இறைப்பான்கள் மூலமாக நிலத்தடி நீர் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் கோயமுத்தூர் மாவட்டம் இந்தியாவிற்கு தேவையான 60 சதம் மின் இறைப்பான்களை உற்பத்தி செய்து தனித்தன்மை வகிக்கிறது.

  1. வேளாண் செயல்முறைகள் - மேல்நிலை முதலாம் ஆண்டு. சென்னை: தமிழ்நாட்டுப் பாடநுால் கழகம். 2010. பக். 80.