பயனர்:TNSE VISU CBE/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

TNSE VISU CBE/மணல்தொட்டி
படிமம்:Red balloon.jpg
DVD cover
தயாரிப்புஆல்பர்ட் லாமொரைசு
திரைக்கதைஆல்பர்ட் லாமொரைசு
இசைமாரீசு லே ரெக்ஸ்
நடிப்புபாஸ்கல் லாமொரைசு
ஒளிப்பதிவுஎட்மாண்ட் சேசன்
படத்தொகுப்புபீரீ சில்லட்
வெளியீடுஅக்டோபர் 19, 1956 (1956-10-19)(பிரான்சு)
நாடுபிரான்சு
மொழிபிரெஞ்சு

தி ரெட் பலூன் =[தொகு]

தி ரெட் பலூன் என்பது 1956 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு பிரெஞ்சுக் குறும்படமாகும். ஒரு குழந்தையின் மனநிலையை ஒரு பலூனுடன் இணைத்து அந்த பலூன் அக்குழந்தையை நேசித்தால் என்னவெல்லாம் செய்யும் என்ற கற்பனைகயில் இப்படத்தின்  திரைக்கதையை அமைத்து ஆல்பர்ட் லேமொரைசு இப்படத்தைத் எழுதி இயக்கி தயாரித்துள்ளார்.பாரீஸ் நகரின் அருகிலமைந்த நகரமான மெனில்மோனென்ட் என்ற நகரில் நடப்பது போல் அமைந்த இக்குறும்படம் 35 நிமிடங்கள் ஓடக்கூடியது.

விருதுகள்[தொகு]

இக்குறும்படம் எண்ணிலடங்கா விருதுகளை குவித்துள்ளது. 1956 ஆம் ஆண்டின் சிறந்த திரைக்கரைக்கான ஆஸ்கார் விருதினை இத்திரைப்படத்தின் இயக்குனர் ஆல்பர்ட் லேமொரைசு பெற்றுள்ளார். ஆஸ்கார் விருது குறும்படத்திற்கு வழங்கப்படமாட்டாது. இருப்பினும் இக்குறும்படம் ஆஸ்கார் விருதினைப்பெற்ற ஒரே ஒரு குறும்படம் என்ற சிறப்பைக் பெற்றுள்ளது. 1956 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிட்டப்பட்டு விருது பெற்றுள்ளது இப்படம்.

கதை[தொகு]

மிகச்சில வசனங்களை மட்டுமே உடைய இப்படம் முழுதும் இசைக்கோவையால் நிரப்பப்பட்டுள்ளது. பள்ளி செல்கிற ஒரு சிறுவன் (பாஸ்கல்) வழியில் ஒரு விளக்குக்கம்பத்தில் சிக்கிக்கொண்ட ஒரு சிவப்பு ஹீலியம் பலூனைக் கண்டு கம்பத்தில் ஏறி அதனை எடுத்துக்கொள்கிறான். அந்த பலூனை எடுத்துக்கொண்டு பள்ளி செல்கையில் பலூனைக் கையில் வைத்துக்கொண்டிருப்பதால் பேருந்தில் ஏற நடத்துனரால் அனுமதி மறுக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து ஓட்டமாகவே சென்று பள்ளி செல்கிறான்.பள்ளியின் உள்ளே பலூனைக் கொண்டுசெல்ல முடியாத காரணத்தால் அதனை வெளியே விட்டுவிட்டுச் செல்கிறான். மாலை பள்ளிமுடிந்து வருகையில் அந்த பலூன் வெளியே பாஸ்களுக்காக காத்திருக்கிறது. அப்பொழுது மழை தூரத்தொடங்குகிறது. தெருவில் குடைபிடித்து நடக்கும் ஒவ்வொருவரின் குடைகளுக்கும் தன் பலூனுக்கு இடம் பெற்று தன்பலூன் நனையாமல் தான் நனைந்து வீடு வந்து சேருகிறான். பல்லடுக்குமாடி குடியிருப்பாக இருக்கிற அவனது வீட்டில் அவனது பாட்டி பலூனை அனுமதிக்காது சன்னலில் தூக்கி எறிந்து விடுகிறார். ஆனால் பலூன் பாஸ்கலின் மீது அதீத அன்புடன் அவனைவிட்டு எங்கும் செல்லாமல் அவனுடனேயே இருக்கிறது.

அடுத்த நாள் பள்ளிசெல்கையில் பலூனை எடுத்துக்கொள்கிறான். பலூன் பாஸ்கலைப் பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இருவரும் மறைந்தும் ஒளிந்தும் விளையாடிக்கொண்டே செல்கின்றனர். இப்போது பாஸ்கல் பேருந்தில் ஏறிக்கொள்கிறான். பலூன் பேருந்தைத் தொடந்து பறந்து வருகின்றது. இது அனைவருக்கும் வியப்பைத்தர அனைவரும் வேடிக்கை பார்த்து மகிழ்கின்றனர். பாஸ்கல் பள்ளி செல்லும் வழியில் எதிரில் ஒரு சிறுமி (சபைன்) நீல நிற பலூனுடன் வர இரு பலூன்களும் சந்தித்துக்கொள்கின்றன. இரு பலூன்களும் ஒருவருடனேயே செல்ல விரும்புகின்றன. இருப்பினும் அவரவர் பலூனை அவரவர் எடுத்துக்கொண்டு செல்கின்றனர். பாஸ்கல் பள்ளியின் உள்ளே செல்ல பலூனைப் பார்த்து மற்ற குழந்தைகள் சத்தமிடுகின்றனர். இதனைக்கண்ட பள்ளி முதல்வர் பாஸ்கலைத் தனி அறையில் அடைத்துவைத்துவிட்டு வெளியே செல்கிறார். இதைக்கண்ட பலூன் முதல்வருடனேயே அவரைத்துரத்திக்கொண்டு செல்கிறது. மாலை பள்ளிமுடிந்தபின் முதல்வர் அவனை விடுவிக்கிறார். பாஸ்கல் வீட்டிற்குச் செல்லும் பொழுது தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள் பலரால் துரத்தப்படுகிறான். அவர்களிடம் அன்று தப்பித்துக் கொண்ட பாஸ்கல் ஒரு ஞாயிற்றுக்கிழமை தன் பாட்டியுடன் கோவிலுக்குச்சென்று திரும்புகையில் மீண்டும் சிறுவர்களால் துரத்தப்பட்டு தன் பலூனை இழந்து விடுகிறான். அப்பொழுது அச்சிறுவர்கள் தங்களுக்குள்ளான சண்டையில் பலூனை கல்லால் அடித்து உடைத்து விடுகின்றனர். உடைந்த தன் பலூனருகே பாஸ்கல் அழுதுகொண்டு அமர பாரிஸ் நகரத்தின் கடைகளிலிருந்த பலூன்கள், சிறுவர்கள் பெரியவர்கள் தெரு வியாபாரிகள் என அத்துனைபேரின் கைகளிலிருந்த பலூன்களும் பல வண்ண பலூன்களாய் உயரே பறந்து செல்கின்றன. அவை அனைத்தும் பாஸ்கலை நோக்கிப்பறந்து வந்து அவன் கைகளில் விழுகின்றன. பாஸ்கல் வியப்பும் மகிழ்வுமாய் அந்த பலூன்களைப் பிடித்துக்கொள்ள அந்த பலூன் அவனைத் தூக்கிக் கொண்டு மீண்டும் வானில் பறப்பதுடன் படம் முடிகிறது..

நடிகர்கள்[தொகு]

  • பாஸ்கல் லாமரைசு (இயக்குனரின் மகன்)
  • சபைன் லாமரைசு ( இயக்குனரின் மகள்)
  • எட்வார்டு ஆபேஜ்
  • பவுல் பிரே
  • விளாடிமிர் பாபவ்
  • ரென் மரியான்
  • மைக்கேல் பாசின்



பிழை காட்டு: Invalid <ref> tag; refs with no name must have contenthttps://en.wikipedia.org/wiki/Albert_Lamorisse

மேற்கோள்கள்[தொகு]

  • • "THE RED BALLOON (U)". British Board of Film Classification. 15 October 1956. Retrieved 25 March 2016.
  • • The Red Balloon on Internet Movie Database.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_VISU_CBE/மணல்தொட்டி&oldid=2741496" இலிருந்து மீள்விக்கப்பட்டது