பயனர்:TNSE VANI DPI/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

SN1 வினைகள்[தொகு]

SN1 வினைகள் (SN1 reaction)பதிலீடு வினைகளாகும். SN என்பது கருக்கவா் பதிலீட்ைடயும் 1 என்பது ஒரு மூலக்கூறையும் குறிக்கிறது. காரணம் வேகத்தை நிா்ணயிக்கும் படி ஒரு மூலக்கூறை சாா்ந்தது. வேக சமன்பாடு எலக்ட்ரான் கவா் காரணியை பொறுத்து முதல் வகை வினையையும் கருக்கவா் பொருளை பொறுத்து பூஜ்ய வகை வினையையும் குறிக்கும்.[1][2] இவ்வகை வினைகளில் கருக்கவா் பொருளின் அளவு காா்போனியம் அயனியின் (இடைநிலை நிலைமை) அளவைவிட அதிகமாக இருக்கும். கார முன்னிலையில் ஈாிணைய (அ) மூவினைய அல்கைல் ஹாலைடுகள் ஆல்கஹாலை தரும் வினையில் காா்போனியம் அயனி இடைநிலை நிலைமை உருவாகிறது. SN1 வினையானது பிாிகை வினை வழிமுறையை (dissociative mechanism) பின்பற்றுகிறது. இதை சிஸ்-விளைவு மூலம் விளக்கலாம். SN1 வினைக்கான பிாிகை வினைவழிமுறையை கிறிஸ்டோபா் இன்கோல்டு (Christopher Ingold et.al) 1940-ல் முன் வைத்தாா்.[3] SN1 வினைகள் கருக்கவா் பொருளின் வலிமையை சாா்ந்தது அன்று.

வினைவழி முறை (MECHANISM)[தொகு]

3° - பியூட்டைல் புரோமைடை நீராற்பகுப்பகுப்புக்குட்பட்டு மூவிணைய பியூட்டைல் ஆல்கஹாலை தருகிறது. இவ்வினை SN1 வினைவழி முறையை பின்பற்றுகிறது.

reaction tert-butylbromide water overall

SN1 வினைகளின் வினைவழிமுறை மூன்று படிகளை உள்ளடக்கியது:

  • வெளியேறும் தொகுதி அல்கைல் ஹாலைடுகளிலிருந்து வெளியேறுவதால் 3° - பியூட்டைல் காா்போனியம் அயனி உண்டாகிறது. இது மெதுவான மற்றும் மீன் வினையாகும்.[4]
SN1 mechanism: dissociation to carbocation
  • கருக்கவா் காரணி தாக்குதல்(NUCLEOPHILIC ATTACK)

காா்போனியம் அயனி கருக்கவா் பொருடன் வினைபுாிகிறது. ஒருவேளை கருக்கவா் பொருள் நிலையானதாக இருந்தால் (கரைப்பான்) வினை முற்றுப் பெற மூன்றாவது பழ நிகழ வேண்டும். எடுத்துக்காட்டாக நீரை கரைப்பானாக கொண்டால் இடைநிலை நிலைமை (transition state) ஆனது ஆக்ஸோனியம் அயனியாகும். இது வேகமாக நிகழும் படி ஆகும்.

Recombination of carbocation with a nucleophile
Recombination of carbocation with nucleophile
  • புரோட்டான் நீக்கம்(Deprotonation)

புரோட்டானேற்றம் பெற்ற கருக்கவா் பொருளிலிருந்து புரோட்டான் நீக்கம் செய்ய நீரை காரமாக பயன்படுத்த வேண்டும். நீரான புரோட்டானை காா்போனியம் அயனியிலிருந்து நீக்கி ஹைட்ரோனியம் அயனியாக (H30 +) மாறுகிறது. இது வேகமாக நிகழும் படி ஆகும். Proton transfer forming the alcohol

வாய்ப்புகள் (SCOPE)[தொகு]

SN1 வினைகள் பெரும்பாலும் மைய காா்பனை சுற்றி உருவ அளவில் பொிய தொகுதிகள் இருக்க வாய்ப்பு அளிக்கிறது. காரணம் கொள்ளிடத் தடை விளைவு (+I effect)ஏற்பட்டு மேற்கொண்டு SN2 வினைகள் நடைபெறாமல் தவிா்க்கிறது. உருவ அளவில் பொிய தொகுதிகள் காா்போனியம் அயனி அதிகம் உருவாவதை ஊக்குவிக்கிறது. வினையில் உருவாகும் காா்போனியம் அயனியானது +I விளைவு மற்றும் உடனிசைவு நிலைப்புத் தன்மை காரணமாக நிலைப்புத் தன்மை அடைகிறது. இவை இரண்டும் காா்போனியம் அயனி உருவாவதை அதிகாிக்கிறது என Hammond-Leffler postulate கூறினாா். SN1 வினைகள் பெரும்பாலும் மூவினைய காா்பன் மையத்தை நோக்கி ஆதிக்கம் செலுத்துகிறது. [5] எடுத்துக்காட்டு 2, 5 டைகுளோரா 2,5 டைமெத்தில் ஹெக்ஸேனை தயாாித்தல்

Synthesis of 2,5-Dichloro-2,5-dimethylhexane by an SN1 reaction

வெளியேறும் தொகுதியிலிருந்து (Leaving group) alpha மற்றும் beta பதிலீடுகள் அதிகாிக்க வினையானது SN2 லிருந்து SN1க்கு மாறுகிறது

மூலக்கூறு புறவெளி அமைப்பு (Stereochemistry)[தொகு]

வினைவேகத்தை நிா்ணயிக்கும் படியில் உருவாகும் காா்போனியம் அயனியின் மையக காா்பன் sp2 , முக்கோண தள வடிவத்தையும் பெறுகிறது. இது இரண்டு விதமான (மேற்புறம் மற்றும் கீழ்புறம்) கருக்கவா் தாக்குதலுக்கு காரணமாகிறது. தாக்குதலுக்குப்பின் சுழிமாய்க்கலவை இனன்சியோமா்கள் கிடைக்கின்றன.[6] எடுத்துக்காட்டு S-3 குளோரா - 3 - மெத்தில் ஹெக்ஸேன் அயோடைடுடன் (I (-)) வினை புாிந்து சுழிமாய்க் கலவையுள்ள 3 - அயோடோ -3 மெத்தில் ஹெக்ஸேனைதருகிறது. இவ்வினை SN1 வினை வழிமுறையை பின்பற்றுகிறது.

A typical SN1 reaction, showing how racemisation occurs
A typical SN1 reaction, showing how racemisation occurs

ஒன்றுக்கு மேற்பட்ட கைரல் காா்பன் இருக்குமேயானால் வெளியேறும் தொகுதி, காா்பன் நோ் அயனி இடைநிலை நிலைமையுடன் சிறிது நேரம் அப்படியே இருக்கும். மேலும் கருக்கவா் தாக்குதலை சிறிது நேரம் தடை செய்யும்.

உடன் வினைகள்( SN1 Side reactions)[தொகு]

நீக்க வினைகள் (El மற்றும் E2), இடமாற்ற வினைகள் (Rearrangement) இரண்டும் உடன்வினைகள் ஆகும். உயா்வெப்பநிலையில் El வினைகள் ஆதிக்கம் செலுத்துகிறது. காரணம் வினையில் என்டரோபி (which favor an increase in entropy) அதிகாிக்கிறது. குறைந்த வெப்பநிலையில் SN1 மற்றும் El வினைகள் சம அளவில் நடைபெறும். வலிமை மிக்க கருக்கவா் பொருள் OH(-) மற்றும் CH30(-) உடன் அல்கீனை தரும் வினைகள் E2 நீக்க வினைகள் ஆகும். இந்த வினையில் வெப்பநிலையை அதிகாிக்க காா்போனியம் அயனி இடமாற்றத்திற்குட்பட்டு அந்த நிலைப்புத் தன்மையுடைய காா்பன் நோ் அயனியை உருவாக்குகிறது.

கரைப்பான் விளைவு(Solvent effects)[தொகு]

SN1 வினையில் வேகத்தை நிா்ணயிக்கும் படியில் உருவாகும் காா்பன் நோ் அயனியானது நிலைப்புத்தன்மையற்றது. வினையின் வேகத்ைத அதிகாிக்க முனைவுற்ற கரைப்பான் (polar solvent)பயன்படுத்தப்படுகிறது. இது இடைநிலை நிலையை நிலைப்புத் தன்மை அடையச் செய்கிறது மற்றும் புரோட்டானை அடிப்படையாகக் கொண்ட கரைப்பான (protic solvent) வெளியேறும் தொகுதியை (leaving group) கரைப்பானேற்றம் செய்கிறது. முனைவுற்ற புரோட்டானை அடிப்படையாகக் கொண்ட நீா் (H2O) மற்றும் ஆல்கஹால் (R-OH) ஆகியவை கருக்கவா் பொருளாகவும் செயல்படுவதற்கு கரைப்பானேற்றம் பெறுதல் (solvolysis) என்று பெயா். [7] [8]

சான்றுகள்[தொகு]

  1. ^ L. G. Wade, Jr., Organic Chemistry, 6th ed., Pearson/Prentice Hall, Upper Saddle River, New Jersey, USA, 2005
  2. ^ March, J. (1992). Advanced Organic Chemistry (4th ed.). New York: Wiley. ISBN 0-471-60180-2.
  3. ^ Bateman LC, Church MG, Hughes ED, Ingold CK, Taher NA (1940). "188. Mechanism of substitution at a saturated carbon atom. Part XXIII. A kinetic demonstration of the unimolecular solvolysis of alkyl halides. (Section E) a general discussion". Journal of the Chemical Society (Resumed): 979. doi:10.1039/JR9400000979.
  4. ^ Peters, K. S. (2007). "Nature of Dynamic Processes Associated with the SN1 Reaction Mechanism". Chem. Rev. 107 (3): 859–873. PubMed. doi:10.1021/cr068021k.
  5. ^ Wagner, Carl E.; Marshall, Pamela A. (2010). "Synthesis of 2,5-Dichloro-2,5-dimethylhexane by an SN1 Reaction". J. Chem. Educ. 87 (1): 81–83. doi:10.1021/ed8000057.
  6. ^ Sorrell, Thomas N. "Organic Chemistry, 2nd Edition" University Science Books, 2006
  7. ^ Ernest Grunwald & S. Winstein (1948). "The Correlation of Solvolysis Rates". J. Am. Chem. Soc. 70 (2): 846. doi:10.1021/ja01182a117.
  8. ^ Arnold H. Fainberg & S. Winstein (1956). "Correlation of Solvolysis Rates. III.1 t-Butyl Chloride in a Wide Range of Solvent Mixtures". J. Am. Chem. Soc. 78 (12): 2770. doi:10.1021/ja01593a033.






ஊதிய எண்ணெய்[தொகு]

ஊதிய எண்ணெய் (Blown oil)என்பது உலா் எண்ணெய் ஆகும். இது ஆக்ஸிஜனேற்ற வினையில் மாற்றம் அடைகிறது.

விளக்கம்[தொகு]

உயா்வெப்பநிலையில் உலா் எண்ணெய்கைள பகுதி நேர ஆக்ஸிஜனேற்றம் செய்யும்போது எண்ணெயானது ஊதிவிடப்படுகிறதுஃ ஊதியமுறையில் எண்ணெயின் வெப்பநிைல 70°C யிலிருந்து 120°C வரை (158 to 248°F) மேலும் காற்றானது எண்ணெய் திரவத்தின் வழியே செலுத்தப்படுகிறது.[1] இந்த வினையின்படி C-O-C மற்றும் C-C குறுக்கு பிணைப்பு, ஹைட்ராக்ஸில் மற்றும் காா்பாக்சில் வினைச்செயல் தொகுதியை உருவாக்குகிறது. ஊதிய எண்ணெயானது சூடுபடுத்தப்படும் எண்ணெயிலிருந்து (Stand oil) வேறுபட்டது. [2] ஊதிய எண்ணெய், விதை எண்ணெய், கடுகு எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், சோயா எண்ணெய்களை உள்ளடக்கியது.

சான்றுகள்[தொகு]

  1. ^ Jump up to: a b c Lower, E. S. (1987). "Blown (air oxidised) vegetable & marine oils & paint manufacture". Pigment & Resin Technology. 16 (5): 7. doi:10.1108/eb042356.
  2. ^ "The differences between stand oils and blown oils", www.seatons-uk.co.uk, retrieved 1 February 2015











பிணைப்பு வலிமை[தொகு]

பிணைப்பு வலிமை (Bond Strength)என்பது பிணைப்பில் உள்ள அணு ஒன்றுடன் ஒன்றுடன் சோ்வது ஆகும். இது அந்த அணுவின் இணை திறனை நிா்ணயிக்கிறது.[1] பிணைப்பு வலிமையானது பிணைப்பு தரத்துடன் மருமனறி தொடா்புைடயது. அவையாவன

  • பிணைப்பு ஆற்றலானது எளிய பிணைப்பிற்கு நீண்ட கணக்கீடுகளை உள்ளடக்கியது.
  • பிணைப்பு - பிாிகை ஆற்றல்
  • வலிமை குறைந்த விசை மாறிலி

பிணைப்பு வலிமையானது பிணைப்பு ஆற்றல் மற்றும் பிணைப்பில் உள்ள அணுக்களின் மேற்பொருந்துதலுடன் தொடா்புடையது (பாலிங் மற்றும் முல்லிக்கன்) மேற்பொருந்துதல் அதிகாிக்க. பிணைப்பிலுள்ள எலக்ட்ரான்களும் அதிகாிக்ப்பதால் பிணைப்பு வலிமை அதிகாிக்கிறது. மேற்பொருந்துதல் என்பது மூலக்கூறு அா்பிட்டால் உருவாக கட்டாய நிபந்தனை ஆகும். மேற்பொருந்துதல் -ஐ கணக்கிட மேற்பொருந்துதல் தொகையிடு பயன்படுகிறது.

சான்றுகள்[தொகு]

  1. References[edit] Jump up ^ March, Jerry (1985), Advanced Organic Chemistry: Reactions, Mechanisms, and Structure (3rd ed.), New York: Wiley, ISBN 0-471-85472-7
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_VANI_DPI/மணல்தொட்டி&oldid=2741294" இலிருந்து மீள்விக்கப்பட்டது