பயனர்:TNSE Geetha CHN/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                        திருவள்ளுவரின் திருவுருவ வரலாறு

உலக மக்களை தமிழ் நாட்டை நோக்கி திரும்பிப் பாா்க்க வைத்த அறநுாலான திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் திருவுருவம் விகடகவி திரு.கே.ஆர்.வேணுகோபால்சா்மா அவா்களால் வரையப்பட்டது. நாம் பாா்க்கும் இவ்வோவியம் இறுதிவடிவம் பெற 40 ஆண்டுகள் கடுமையாக உழைத்தார். வள்ளுவன் பற்றிய எந்த குறிப்பும் இல்லாத நிலையில் 1330 குறள்களை ஆராய்ந்து. குறள் வழி நின்றும்,ஓவிய இலக்கணத்தையும் பின்பற்றி வரைந்தாா். [1] அன்றைய முதலைமச்சா் திரு பக்தவச்சலம் அவா்களால் இத்திருவுருவம் சட்டசபையில் திறந்துவைக்கப்பட்டது. தமிழ்நாட்டிலிருந்து ஐ.நா.விற்கு சென்ற முதல் ஓவியம் வள்ளுவனின் திருவோவியம் தான். அறிஞா் அண்ணா அவா்கள் முதலமைச்சராக பதவி ஏற்றவுடன் அனைத்து பேருந்துகளிலும் திருவள்ளுவரின் படமும்,குறளும் இடம் பெறவேண்டும் என்ற அரசாணையில் முதன்முதலில் கையொப்பம் இட்டாா். பகுப்பு:சென்னை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரை

  1. திருவேணுகோபால்சா்மா அவா்களின் மகனால் பொதிகைக்கு அளித்த பேட்டி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_Geetha_CHN/மணல்தொட்டி&oldid=2338211" இலிருந்து மீள்விக்கப்பட்டது