பயனர்:TNSE CHITIRAIMATHI TVM/மணல்தொட்டி
Appearance
’’’இலக்கணக் கொத்து’’’ இலக்கணக் கொத்து ஒரு தமிழ் இலக்கண நூலாகும். இதன் ஆசிரியர் சுவாமி்னாத தேசிகர் ஆவார். இவரது காலம் கி.பி 17 ஆம் நூற்றாண்டு ஆகும். இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர்.
அமைப்பு
[தொகு]இந்த நூல் சொல் மற்றும் ஓரளவு எழுத்திற்கு இலக்கணம் கூறுவதாய் அமைந்துள்ளது.
இயல் பகுப்பு
[தொகு]மூன்று இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவை 1. வேற்றுமையியல் 2. வினையியல் 3. ஒழிபியல் ஆகும். 131 நூற்பாக்களைக் கொண்டுள்ளது.
உரை
[தொகு]நூலாசிரியரே இதற்கு உரை எழுதியுள்ளார்.
பதிப்பு
[தொகு]ஆறுமுகனாவலர் இதைப் பதிப்பித்துள்ளார்.
சிறப்பு
[தொகு]- இது ஒரு இலக்கணத் திறனாய்வு நூல்.
- தெரிவினை இரண்டு என்கிறது.( சொல்லால் தெரிவினை, பொருளால் தெரிவினை )
- மறை மூவகை.
- விகாரம் நான்கு. ( தோன்றல், திரிதல், கெடுதல், நிலைமாறுதல் )
உசாத்துணை நூல்கள்
[தொகு]- அழகப்பன், ஆறு., இலக்கணக்கருவூலம் ,அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பதிப்பு 1985.
- இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2009.