பயனர்:Suvadi

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிறுவனச் சின்னம்

’சுவடி’ எனக் குறித்தழைக்கப்படும் இப் பொறுப்பு வரையறுக்கப்பட்ட இலாப நோக்கற்ற கம்பனியானது இலங்கைத் தீவின் வடபுலத்தேயுள்ள யாழ்நகரில் தலைமைப் பணிமனையைக் கொண்டுள்ளது. 19 ஆம் திகதி, சூலை, 2010 அன்று உத்தியோகபூர்வமாகப் இலங்கையில் பதியப்பட்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இந் நிறுவனம், நவீன கல்வி முறைகள் மூலமாக ஓர் அறிவார்ந்த சமுகத்தினைக் கட்டியெழுப்புவதைக் குறிப்பிலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகிறது. எண்மிய நூலகங்கள் உருவாக்குவதற்கான ஆலோசனைகளை வழங்குதல், அவற்றின் நிலைபெறுகையை உறுதிப்படுத்துதல், பல்துறைக் கல்வி வாய்ப்புகள் தொடர்பான தகவல்கள் மாணவர்களிடம் கொண்டு சேர்த்தல், திறமூல மென்பொருள் பயன்பாட்டுக்கான பரப்புரை என்பன இந் நிறுவனத்தின் தலையான பணிகளாகும்.

நிறுவனத்தின் தோற்றம்[தொகு]

2009 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ’சுவடி எண்மிய நூலகச் செயற்திட்டமே’ இந் நிறுவனத்தில் தேவைப்பாட்டினை உணரச் செய்தது. இச் செயற்திட்டம் பலரின் கடின உழைப்புடன் ஆரம்பிக்கப்பட்ட போதும் பொதுமக்களிடையே ‘எண்மிய நூலகங்கள்’ தொடர்பான போதிய தெளிவு காணப்படாமையால் பெரிதும் வரவேற்கப்படவில்லை. மிகச் சொற்ப எண்ணிக்கையானவர்களே இந் நூலகத்தினைப் பயன்படுத்த எத்தணித்தனர். ‘எண்மிய நூலகங்கள்’ தொடர்பான விழிப்புணர்வினை மக்களிடையே கட்டி எழுப்ப நீண்டகாலம் தேவை என்பதை உணர்ந்து கொண்ட செயற்திட்ட வழிகாட்டற் குழுவினர் அப் பணியைச் சிறப்புற மேற்கொள்ள எடுத்த ஓர் உறுதியான முன்னகர்வே நிறுவன உருவாக்கத்திற்கு அடிப்படையாகியது.

பிரதான பணிகள்[தொகு]

  • எண்மிய நூலகங்கள் உருவாக்குவதற்கான ஆலோசனை
  • எண்மிய நூலகங்களின் நிலைபெறுகையை உறுதிப்படுத்துதல்
  • பல்துறைக் கல்வி வாய்ப்புகள் தொடர்பான தகவல்கள் வழங்கல்
  • திறமூல மென்பொருள் பயன்பாட்டுக்கான பரப்புரை

சுவடி வலை இணைப்புக்கள்[தொகு]

பயனர் விபரம்
Animated-Flag-Sri-Lanka.gif இப்பயனர் இலங்கையராவார்.

Crystal kwrite.png
  சுவடி என்ற வலைப்பதிவை இப்பயனர் பராமரிக்கின்றார்.
Noia 64 apps karm.svg இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 10 ஆண்டுகள், 4 மாதங்கள்,  12 நாட்கள் ஆகின்றன.
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

தமிழ்99 இப் பயனர் தமிழ்99 விசைப்பலகையைப் பயன்படுத்துகிறார்.

Mozilla Firefox logo 2013.svg இந்தப் பயனர் பயர்ஃபாக்சு இணைய உலாவியைப் பயன்படுத்துகிறார்.

ழகரம்.png இந்தப் பயனர் பிறமொழிக் கலப்பு இல்லாத தனித்தமிழ் நடையை ஏற்பவர்.


Eluthu5.JPG

இந்தப் பயனர் 72 தமிழ் எழுத்துக்களின் (29%) வடிவத்தை மாற்றி அமைக்க சிலர் எடுக்கும் முயற்சிகளை எதிர்க்கிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Suvadi&oldid=975581" இருந்து மீள்விக்கப்பட்டது