பயனர்:Sridevi1996/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒற்றை வகை பிறபொருளெதிரிகள் (மோனோக்ளோனல் ஆன்டிபாடிஸ்) என்பவை ஒரே பரம்பரையைச் சார்ந்த B லிம்போசைட்டுகளால் உற்பத்தி செய்யப்பட்ட பிறபொருளெதிரிகள் ஆகும். அதாவது, ஒரு B லிம்போசைட்டிலிருந்து உருவான பல நகலிகள் ஒற்றை வகை பிறபொருளெதிரிகளைத் தயாரிக்கும். இவை ஒரெ வகையானதால், அதற்கேற்ற ஒரு பிறபொருளெதிரியாக்கியிலுள்ள ஒரு குறிப்பான பகுதியில் மட்டுமே பிணையும்.

கண்டுபிடிப்பு[தொகு]

B லிம்போசைட்டுகள் வேறுபட்ட உயிரணுக்களானதால் உயிரணு பிரிவு மேற்கொண்டு பல நகலிளை உருவாக்க முடியாது. ஆனால் புற்று B உயிரணுக்களால் பிரிவு மேற்கொண்டு பல நகலிளை உருவாக்க முடியும். இந்த புற்று B உயிரணுக்கள் ஒரே பரம்பரையைச் சார்ந்ததால் ஒரே வகையான பிறபொருளெதிரிகளை மட்டுமே உற்பத்தி செய்யும். 1970 களில் B லிம்போசைட்டு(B உயிரணு) புற்றுநோயாகிய பல்கிய சோற்றுப்புற்று( மல்டிபில் மயிலோமா) அறியப்பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு 1975 ல் ஜார்ஜ் கோலர், சீசர் மில்ஸ்டெய்ன், மற்றும் நீல்ஸ் காஜ் ஜெர்னெ, B உயிரணுக்களை சாற்றுப்புற்று உயிரணுக்களுடன் இணைத்து ஹைப்ரிடோமா என்னும் கலப்பு உயிரணுவை உருவாக்கினார்கள்.இந்த கண்டுபிடிப்புக்காக அவர்கள் 1984 ஆம் ஆண்டின் உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசை பெற்றார்காள்.

உற்பத்தி[தொகு]

பொதுவாக சுண்டெலி அல்லது முயலின் உடம்புக்குள் தேவையான பிறபொருளெதிரியாக்கியை செலுத்திய பிறகு அதன் மண்ணீரலிலிருந்து எடுத்த உயிரணுக்களை சாற்றுப்புற்று உயிரணுக்களுடன் இணைப்பது வழக்கம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sridevi1996/மணல்தொட்டி&oldid=1757215" இலிருந்து மீள்விக்கப்பட்டது