பயனர்:Socialhumanity/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமீர் ஹைதர் கான் (1900-1989) பிரித்தானிய இந்தியாவின் முதல் தலைமுறை பொதுவுடைமைத் தலைவர்களுள் ஒருவர்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

ராவல்பிண்டி மாவட்டத்திலிலுள்ள ஒரு சிறு கிராமத்தில் எளிய பஞ்சாபி முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். சர்வதேச கம்யூனிஸ்டு அகிலத்தின் பிரதிநிதியாக ரசியாவில் சில காலம் செயல்பட்ட பின் இந்தியா திரும்பினார். இந்தியா திரும்பிய ஹைதர் கானுக்கு தென்னிந்தியாவில் கட்சியை உருவாக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. மீரட் சதி வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்ததால் தமிழகத்திலும் தலைமறைவாகத்தான் இவர் வாழ வேண்டியிருந்தது. சங்கர் எனும் புனை பெயரை வைத்துக்கொண்டு தமிழகம் மற்றும் தென்னிந்தியாவின் சாதிய அமைப்பை தெரியாமலும், எவரொருவர் உதவியின்றியும் சென்னை(மெட்ராஸ்) வந்து கம்யூனிஸ்டு கட்சியை கட்டும் பொறுப்பை ஏற்றார். அவ்வாறு தனித்து இருந்த போதும், இந்த முகம் தெரியாத ஊரில், மாத்யூஸ் என்ற ரயில்வேத் தொழிலாளியிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டு தனது பணியைத் தொடங்குகிறார் கான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Socialhumanity/மணல்தொட்டி&oldid=1798219" இலிருந்து மீள்விக்கப்பட்டது