ஆவர்த்தன அல்லது தனிம அட்டவணை வரலாறு வேதியியற் பண்புகளைப் புரிந்துகொள்ள, ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலகட்டத்தில் ஏற்பட்ட வளர்ச்சியைப் காட்டுகின்றது. இது 1869ல் திமீத்ரி மென்டெலெயேவ் வெளியிட்ட முதல் தனிம அட்டவணையில் முதிர்ச்சி அடைந்தது. மென்டெலெயேவுக்கு முன்னரே அந்துவான் இலவாசியே போன்ற சில வேதியியல் வல்லுனர்கள் இதன் வளர்ச்சிக்கு வித்திட்டாலும் உருசிய வேதியியல் வல்லுனரான திமீத்ரி மென்டெலெயேவுக்கே தனிம அட்டவணை உருவாக்கியதற்கான சிறப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தனிமங்களின் (மூலகங்களின்) பண்புகளை வெவ்வேறு தொகுதிகளாக எளிதில் அறிந்துகொள்ள அட்டவணைப்படுத்தல் தேவையாகின்றது. இது தனிம வரிசை அட்டவணை அல்லது ஆவர்த்தன அட்டவணை எனப்படுகின்றது. தொடக்கத்தில் தனிமங்கள் அவற்றின் அணு நிறையின் (தொடர்பணுத்திணிவு) அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டன. மேலும்...
ஐந்நூற்றுவர் எனப்படுவோர் முற்காலத்தில் சாளுக்கியத் தலைநகராகிய வாதாபியில் உள்ள ஐகோலே என்னுமிடத்தில் அமையப் பெற்றிருந்த ஒரு வணிகக் கழகத்தினர் ஆவர். இன்றைய இந்தியாவின் தமிழகம், கருநாடகம் ஆகிய பகுதிகளுக்கிடையில் இவர்களின் வணிகம் சிறந்து விளங்கியது. இவர்களைப் பற்றி பொ.கா. 9 ஆம் நூற்றாண்டிலிருந்துள்ள கல்வெட்டுக்கள் சில குறிப்பிடுகின்றன. சாளுக்கியத் தலைநகரில் இருந்த ஏராளமான கோயில்களிற் பணியாற்றிய பிராமணர்களிற் சிலர் ஐந்நூற்றுவருடனான வர்த்தகத்தில் ஈடுபட்டதாகத் தெரிய வருகிறது. எனினும் ஐந்நூற்றுவரிற் பெரும்பாலானோர் தொலை தூர வணிகத்திலீடுபட்ட வணிகர்களாவர். பொ.கா. 9 ஆம் நூற்றாண்டுக்கும் 14 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் இவர்களால் கோயில்களுக்கு வழங்கப்பட்ட கொடைகளைப் பற்றியும் இவர்களின் வணிக நடவடிக்கைகளையும் வணிகப் பொருட்களையும் பற்றியும் தெளிவுறுத்துகின்றன. மேலும்...
மரபுவழி சீன மெய்யியலில், யின் யாங்கு (படம்) என்பது வாழ்வில் இரவும் பகலும், எதிரும் புதிரும், எதிா்மறையும் நோ்மறையும் எப்படி ஒன்றையொன்று இயற்கையிலேயே சாா்ந்துள்ளது என்பதையும் எப்படி ஒன்றிலிருந்து மற்றொன்று துலங்கும் என்பதை விளக்கும் இரட்டைத் தத்துவம் ஆகும்.
இலங்கா பொடி என்பது மேற்கு ஒடிசாவின் சுபர்ணபூர் மாவட்டத்தில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா. இராவணனின் பெரிய உருவ பொம்மையை தீயிட்டுக் கொளுத்துவது இந்நிகழ்வின் சிறப்பு ஆகும்.
சைக்சு–பிக்கோ ஒப்பந்தம் 1916 இல் ஐக்கிய இராச்சியம், பிரான்சு ஆகிய நாடுகளுக்கிடையேயான ஓர் இரகசிய ஒப்பந்தமாகும். உருசியா, இத்தாலி ஆகியவற்றின் ஒப்புதலுடன், முதலாம் உலகப் போரில் உதுமானியப் பேரரசு வீழ்ச்சி அடைந்தால் அதன் மாகாணங்களை எவ்வாறு தங்களுக்குள் பிரித்துக் கொள்ளலாம் என்பதை இவ்வொப்பந்தம் வரையறுக்கிறது.
மடகாசுகரில் மக்கள் ஆர்ப்பாட்டங்கள், மற்றும் இராணுவ சதிப்புரட்சியைத் தொடர்ந்து ஆண்ட்ரி ராசொய்லினா நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, மைக்கேல் ரந்திரியானிரினா நாட்டின் புதிய அரசுத்தலைவரானார்.
புவியியல் என்பது புவி, அங்குள்ள நிலம், பல்வேறு அம்சங்கள், அதிலுள்ள உயிர் வகைகள் மற்றும் தோற்றப்பாடுகள் என்பவற்றை விளக்கும் ஒரு துறையாகும். இச்சொல்லை நேரடியாக மொழி பெயர்க்கும்போது அது புவியைப்பற்றி விளக்குவது அல்லது எழுதுவது என்பதைக் குறிக்கும். புவியியல் ஆய்வில் வரலாற்று ரீதியாக நான்கு மரபுகள் காணப்படுகின்றன. இவை, 1) இயற்கை மற்றும் மனிதத் தோற்றப்பாடுகள் தொடர்பிலான இடம்சார் பகுப்பாய்வு, இது பரம்பல் அடிப்படையிலான புவியியல் ஆய்வு; 2) நிலப்பரப்பு ஆய்வு, இது இடங்களும், நிலப்பகுதிகளும் தொடர்பானது; 3) மனிதனுக்கும், நிலத்துக்குமான தொடர்பு பற்றிய ஆய்வு; 4) புவி அறிவியல்கள் தொடர்பான ஆய்வு; என்பனவாகும்.
செம்பழுப்புத் தலைப்பஞ்சுருட்டான் (Merops leschenaulti) என்பது மெரோபிடே என்ற தேனீ-உண்ணி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும், இது இந்தியா, வங்காளதேசம், இலங்கை முதல் தென்கிழக்கு ஆசியா முழுவதும் இந்தோனேசியா வரை பரவியுள்ளது. இது 18–20 செ.மீ நீளமும் 26–33 கிராம் எடையும் கொண்டது, இவற்றின் பாலினங்கள் தோற்றத்தில் ஒத்தவை. இது பல வண்ணப் பறவை, நெற்றி, கழுத்து போன்ற பாகங்கள் கசுக்கொட்டை நிறமாகவும், ஏனைய பாகங்கள் பச்சை, மஞ்சள், கருப்பு, நீல நிறமாகவும் இருக்கும். இது முக்கியமாக பூச்சிகளை, குறிப்பாக தேனீக்கள், குளவிகளை உண்ணும். இப்புகைப்படம் இலங்கையின்யால தேசிய வனத்தில் எடுக்கப்பட்டது.