பயனர்:Shanmugamp7/RFC draft

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியாவில் பல்வேறு நிலைகளில் பல்வேறு இடங்களில் கிரந்தம் தவிர்ப்பு, இலக்கண பிழைகளை மாற்றல் (குறிப்பாக விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இலக்கண முறைகள் குறித்த தமிழ் விக்கிப்பீடியா நிலைப்பாடு இந்த உரையாடலில் உள்ள மாற்றங்கள்), ஒலிப்பு நெருக்கம் போன்ற பல்வேறு உரையாடல்கள் நடைபெற்று வந்திருக்கின்றன. இதில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால், நடைபெறும் பல உரையாடல்கள் பயனர்களின் நேரத்தையும், உழைப்பையும், சில நேரங்களில் பயனர்களுக்கிடையே மனக்கசப்பையும், விலகல்களையும் ஏற்படுத்துகின்றது. எனவே ஒரு கொள்கை முடிவை அனைவரின் ஒப்புதலோடு நிறைவேற்றினால் பிறகு இதுபோன்ற உரையாடல்கள் நிகழ்வது குறையும்.


இந்தக் கொள்கைகள் நிறைவேற்றப்பட்டால் தமிழ் விக்கியில் எழுதும் அனைவரும் கிரந்த எழுத்துகளை முற்றிலும் பயன்படுத்தக் கூடாது, முழுதும் இலக்கண விதிமுறைகளைப் பின்பற்றியே எழுத வேண்டும்.

ஓரளவிற்கு தமிழ் அறிந்த அனைவரும் அடிப்படை தமிழ் இலக்கண விதிகளைப் பின்பற்றியே எழுதுவர் என்பதால் அடிப்படை இலக்கணப் பிழைகளை மாற்றுவது அல்லது அடிப்படை இலக்கண விதிகளை பின்பற்றி எழுதுவது என்பதை இதனுடன் இணைக்க வேண்டாம் எனக் கருதுகிறேன்.


இயன்றவரை கீழ்க்காணும் கொள்கைளை நடைமுறைப்படுத்தலாம் எனில், மீண்டும் மீண்டும் இது போன்ற உரையாடல்கள் எழுதுவதை தடுக்க இயலாது. எனவே கண்டிப்பான நடைமுறைக் கொள்களை நடைமுறைப்படுத்தல் நலம்.

சில பழைய உரையாடல்கள்[தொகு]

  1. பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள்
  2. விக்கிப்பீடியா பேச்சு:கிரந்த எழுத்துப் பயன்பாடு
  3. பேச்சு:ம. ப. பெரியசாமித்தூரன்
  4. விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இலக்கண முறைகள் குறித்த தமிழ் விக்கிப்பீடியா நிலைப்பாடு

கொள்கை முடிவுகள்[தொகு]

  1. கிரந்த எழுத்துகளான ஜ, ஷ, ஸ, ஹ, ஶ, க்ஷ, ஸ்ரீ ஆகியவற்றையோ பிறமொழி எழுத்துகளையோ கட்டுரைகளில் அறவே பயன்படுத்தக்கூடாது. மேற்கூறிய எழுத்துகளைப் பற்றிய கட்டுரைகள் மட்டும் விதிவிலக்கானவை. கிரந்த எழுத்துகளை உள்ளடக்கிய பொது வழக்கிலுள்ள சொற்கள் வழிமாற்றாகவும் கட்டுரையின் தலைப்பினையடுத்து, அல்லது <பொது வழக்கிலுள்ள கிரந்த எழுத்துகள் அடங்கிய தலைப்பு> என்றவாறு மட்டுமே இடம்பெறலாம் (உபயோகப்படுத்த வழிமுறைகள்:விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு).
  2. இயன்ற வரை பிறமொழிச் சொற்களைத் தவிர்த்து எழுத வேண்டும். ஒரு கட்டுரையில் பிறமொழிச் சொல்லொன்று கையாளப்பட்டால், அதே கருத்துடைய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துவதில் வேறுபாடு இருக்கக்கூடாது (ஏற்கனவே இது நடைமுறையில் இருப்பதால் பிரச்சினை இல்லை எனினும், பொது வழக்கில் மிகப்பெரும்பான்மையாக உள்ள சொற்களை (பேச்சு:ஞாயிறு_(விண்மீன்)) மாற்றுதல் பற்றி கொள்கை முடிவு தேவை ).
  3. மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள், இறுதியில் வரும் எழுத்துகள் தொடர்பான விதிகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
  4. மெய்ம்மயக்க விதிகளைக் கருத்திற்கொண்டே பிறமொழிப் பெயர்களை எழுத்துப்பெயர்ப்புச் செய்ய வேண்டும்.
  5. மேற்கூறிய விதிகளுக்குப் பொருந்துமாறு அமைந்த தமிழ்ச் சொல்லொன்றைத் தகுந்த காரணமின்றி வேறு பிறமொழிச் சொல்லால் மாற்றீடு செய்யக்கூடாது.
  6. சாதிப் பின்னொட்டுகளை கட்டுரைகளில் பயன்படுத்தக்கூடாது

மேற்கூறிய கொள்கைகளை முழுமையாக ஆதரிப்போர்[தொகு]

எழுதுபவர்கள் விருப்பம், காட்டாயப் படுத்த வேண்டாம் என்போர்[தொகு]

முழுமையாக எதிர்ப்போர்[தொகு]

கருத்துகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Shanmugamp7/RFC_draft&oldid=1189903" இலிருந்து மீள்விக்கப்பட்டது