பயனர்:Sengai Podhuvan/பயனர் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறிவியல் செய்திகள் ஆங்கிலத்தில் மல்கி வளர்ந்துகொண்டே வருகின்றன. தமிழ் விக்கிப் பயனர்கள் அவற்றைச் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்து தமிழின் வளத்தைப் பெருக்கிவருகின்றனர். ஊர்களையும், உயர்ந்துள்ள பெருமக்களையும் பற்றிய செய்திகளையும் பண்பாளர்கள் பலர் பதிவேற்றி வருகின்றனர்.

தமிழின், தமிழரின் உடைமைகளைக் காலக் கண்ணோட்டத்தில் ஒப்புநோக்கி அவற்றை ஆவணப்படுத்துவதே இக் கட்டுரையாளரின் திட்டம். தமிழின் வளம், சுவை, வரலாறு முதலானவை இவற்றில் இடம் பெறும்.

  • தொல்காப்பியம் முதல் 18-ஆம் நூற்றாண்டு வரையில் நூற்றாண்டு வாரியாகத் தமிழில் தோன்றிய அனைத்து இலக்கண, இலக்கிய நூல்கள், அந்த நூல்களின் ஆசிரியர்கள், அவை தந்துள்ள செய்திக் குறிப்புகள்.
  • புழக்கத்தில் இல்லாமல் மறைந்துவரும் அரிய, நுவையான நூல்களின் மூலங்களும் அவற்றின் செய்திக் குறிப்புகளும். விக்கிமூலம் பகுதியில் சேர்த்தல். (ஔவையார், காளமேகப் புலவர், இரட்டையர் போன்றோரின் பாடல்கள்.)
  • தமிழ் இலக்கண, இலக்கியங்களின் ஒப்புநோக்குடன் மொழியியல் குறிப்புகள்.
  • சங்க கால மூவேந்தர்கள், அரசர்கள், குடிமக்கள், வள்ளல்கள் முதலானோரின் அரசியல், கொடை, வாணிகம், விளையாட்டு, தொழில், கலை முதலான நாகரிகம் பற்றிய கட்டுரைகள்.
  • அவ்வப்போது விக்சனரியில் இலக்கிய மேற்கோளுடன் பழந்தமிழ்ச் சொற்கள்.
  • < வளரும் >

பகுப்பு:தமிழ் பகுப்பு:தமிழர் பகுப்பு:தமிழ்நாடு பகுப்பு:தமிழ் இலக்கணம்