பயனர்:S.bommy/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சரசுவதி சுப்பையா (Saraswathi Subbiah) (பிறப்பு:அக்டோபர் 22ஆம் நாள் 1924). இவர் ஓர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த் அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய விடுதலை இயக்கத்திலும் கலந்து கொண்டுள்ளார். இவர் மருத்துவத்தை படிக்க முயன்றார். ஆனால் படிப்பு இடையிலேயே முடிந்து போனது. இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 19, 1959 முதல் 30 ஜூன் 1963 வரை புதுச்சேரி காசுகடை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். ஜூலை 1963 ஒரு வருடம் இவர் சட்டமேலவையின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[1] இவர் இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார்.[2]

சமூகத்திற்கு இவர் செய்த சேவையை அங்கீகரிக்கும் விதமாக புதுச்சேரி அரசாங்கத்தின் மகளிர் திலகம் விருது பெற்ற முதல் பெண்மணி சரசுவதி சுப்பையா ஆவார். இவர், புதுச்சேரி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பழம்பெரும் தலைவரும், இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரருமான வி. சுப்பையாவின் மனைவி ஆவார்.[1] புதுச்சேரியில் இவர்கள் வாழ்ந்த வீட்டை அரசு 90 இலட்சம் செலவில் புதுப்பித்து, நூலகமாக்க முடிவு செய்துள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:S.bommy/மணல்தொட்டி&oldid=3206461" இருந்து மீள்விக்கப்பட்டது