பயனர்:Rsmn/பதக்கங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணியன், த.வி-யின் வளர்ச்சிக்கு நீங்கள் ஆற்றும் அரும்பணியையும் மிக வளமான நல்லாக்கங்களையும் போற்றி என் உவப்பையும் தெரிவிக்க இப்பதக்கத்தை அளிக்கின்றேன்-செல்வா
சிறப்புப் பதக்கம்
மணியன்! உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை! நீங்கள் ஆலமரத்தடியில் கொடுத்த சிந்தனையின் விளைவுகள் இப்போது தெரிகின்றன. sitenotice இட்டதால் எழுத்துப்பிழைகள் பல அடையாளம் காட்டாப் பயனர்களால் திருத்தப்பட்டு வருகின்றன. (அண்மைய மாற்றங்களைப் பார்க்கவும்) உங்களது அழகிய எண்ணத்திற்கு இந்தச் சிறப்புப் பதக்கத்தை வழங்குகிறேன். :) சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 13:23, 6 மே 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
சென்னை கட்டுரையைத் தொடர்ந்து இற்றைப்படுத்திச் செம்மைப் படுத்துவதைக் கண்டு மகிழ்வுற்று இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன் மணியன். மேலும், உடனுக்குடன் தேவைப்படும் புதிய கட்டுரைகளையும் நீங்கள் உருவாக்கிவிடுகிறீர்கள். :) உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் மணியன். :) சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 14:26, 7 சூன் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

உங்களுக்குத் தெரியுமா பங்களிப்புப் பதக்கம்
விக்கிப்புயல் பதக்கம்
‎மும்பை தொடர்குண்டுவெடிப்பு கட்டுரைக்கு உடனடியாகத் தேவைப்பட்ட கைவினை வெடி குண்டு என்ற கட்டுரையை உடனடியாகத் தொடங்கியதோடு நிறைவான உள்ளடக்கத்துடன் வளர்த்தும் உள்ளீர்கள். நான், பல இடங்களில் இதனைக் கவனித்துள்ளேன். நீங்கள், விக்கியின் அவசரகாலப் படை. :) வாழ்த்துகள். பணி சிறக்க வாழ்த்துகள். சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 13:33, 14 சூலை 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

ஆயிரவர் பதக்கம்
மணியன், தமிழ் விக்கியில் அண்மையில் ஆயிரம் கட்டுரைகளையும் தாண்டி இன்றளவில் 1135 கட்டுரைகளை உருவாக்கியமைக்காக உடன் பங்களிப்பாளன் என்ற வகையில் ஆயிரவர் என்னும் பட்டம் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வளர்க உங்கள் நற்பணி!--Kanags \உரையாடுக 02:20, 12 நவம்பர் 2011 (UTC)
சிறந்த முக்கிய கட்டுரை உருவாக்குனர்
தாங்கள் தொடர்ந்து முக்கிய கட்டுரைகள் உருவாக்கத்தில் ஈடுபடுவது சிறப்பு. இதன் மூலம் என்னைப் போன்ற மற்றவர்களையும் இந்த முக்கியமான பணியை நோக்கித் திருப்பியுள்ளமைக்கு நன்றி கூறி இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன் - இரவி (பேச்சு) 13:56, 9 மார்ச் 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

The Polandball Barnstar
Hello India, Australia be approvings of your translatings of Polandball. With India help, we provings that whilst Poland can not into space, Polandball can into Wikipedia. As Australia making note of on his page of user, he will continue to make uploadings of aviation picturings to Commons. Many of greetings and exultations. Russavia (பேச்சு) 03:02, 25 செப்டெம்பர் 2012 (UTC)
நடப்பு நிகழ்வுகள் பதக்கம்
இதற்குத் தகுதியானவர், உங்களைத் தவிர வேறு எவர்?!

நன்றி!

அன்புடன் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:44, 23 திசம்பர் 2012 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

சிறந்த கூட்டு முயற்சிக் கட்டுரையாளர்
இவ்வார கூட்டு முயற்சியான இங்கிலாந்து தொடர்புடைய பல கட்டுரைகளைச் சிறப்பாக உருவாக்கி வருவதைக் கண்டு மகிழ்கிறேன். நன்றி. இரவி (பேச்சு) 04:59, 2 மார்ச் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
உங்களுக்கென்றே புதிது புதிதாக பதக்கங்களை உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன்! ஏற்கனவே மிச்சம் இருக்கும் இப்பதக்கத்தை இப்போதைக்கு தந்து விடுகிறேன்; பிறகு பார்த்துக் கொள்ளலாம்! (கட்டுரைப் போட்டியில் உங்களின் பங்களிப்பு கண்டு வியக்கிறேன்)

மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:25, 6 சூன் 2013 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மெய்வாழ்வுப் பதக்கம்
போட்டிக்குட்பட்ட கட்டுரைகளில் வெற்றிக் கோடான 15360 பைட்டுகளைத் தாண்டியும் கட்டுரைகளைச் சீராக்க முனைவதைக் கண்டு மகிழ்கிறேன். இந்த மெய்யான விக்கிப் பண்பு மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியான செயற்பாடு ஆகும். இரவி (பேச்சு) 13:16, 11 சூன் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
சூலை 2013 கட்டுரைப் போட்டியில் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் இரண்டாம் இடம் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். முதல் இரு மாதங்கள் போட்டி களை கட்டியதற்கு நீங்களே முக்கிய காரணம். தொடர்ந்து வரும் மாதங்களில் கலந்து கொண்டு ஊக்குவிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் :) --இரவி (பேச்சு) 06:41, 2 செப்டம்பர் 2013 (UTC)
கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
ஆகத்து 2013 கட்டுரைப் போட்டியில் விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு கட்டுரையையும் மிகத் தரமாக விரிவாக்குவதற்கு உங்கள் பங்களிப்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தொடர்ந்து முக்கிய கட்டுரைகளைத் தரமுயர்த்தித் தருமாறு வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:59, 2 செப்டம்பர் 2013 (UTC)
ஈராயிரவர் பதக்கம்
முக்கிய மற்றும் விரிவான கட்டுரைகள் உட்பட்ட இரண்டாயிரம் கட்டுரைகளை உருவாக்கிய உங்களுக்கு ஈராயிரவர் என்னும் பட்டம் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வளர்க உங்கள் நற்பணி! நான் பதக்கம் வழங்கிப் பாராட்டிய முதல் விக்கிப்பீடியர் தாங்களே! --Anton (பேச்சு) 17:57, 23 செப்டம்பர் 2013 (UTC)
காற்பந்துப் பதக்கம்
2014 உலகக்கோப்பை காற்பந்து தொடர்பான முக்கிய கட்டுரைகளை உருவாக்குவதற்கும், அதுபற்றிய செய்திகளை இற்றைப்படுத்துவதற்கும் இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். இம்முறை 2014 உலகக்கோப்பை காற்பந்து செய்திகளுக்கு தமிழ் விக்கியில் பஞ்சமிருக்காது! --AntonTalk 03:39, 20 பெப்ரவரி 2014 (UTC)
காற்பந்துப் பதக்கம்

வணக்கம் , Rsmn/பதக்கங்கள் 2014 உலகக்கோப்பை காற்பந்து கட்டுரையை இற்றைப்படுத்திச் செம்மைப் படுத்தியமைக்காக இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன்.-- mohamed ijazz(பேச்சு) 09:31, 14 சூலை 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

செயல்நயம் மிக்கவர் பதக்கம்
2014 மேற்கு ஆபிரிக்கா எபோலா திடீர்ப் பரவல் கட்டுரையில் தாங்கள் செய்துள்ள தொகுப்புகளுக்காக . Commons sibi (பேச்சு) 16:20, 7 ஆகத்து 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நடப்பு நிகழ்வுகள் பதக்கம்
ஜான் ஓ'கீஃப் , மே-பிரிட் மோசர்,எட்வர்டு மோசர் கட்டுரைகள் Commons sibi (பேச்சு) 14:55, 6 அக்டோபர் 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

2015 பெண்கள் வரலாற்று மாதப் பதக்கம்
2015 பெண்கள் வரலாற்று மாதக் கட்டுரைகளில் சிறப்பான பங்களித்தமைக்காக இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். தொடர்ந்து பெண்கள் சார்பான கட்டுரைகளில் பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 12:16, 1 ஏப்ரல் 2015 (UTC)
மூவாயிரவர் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியாவில் தாங்கள் செய்துவரும் அனைத்துப் பணிகளும் உன்னதமானவை; தங்களுக்கு இந்தப் பதக்கத்தை வழங்குவதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:44, 6 ஏப்ரல் 2016 (UTC)
சிறந்த உழைப்பாளர் பதக்கம்
நீங்கள் பஞ்சாப் மாதத்தின் பகுதியாக தொடர்ந்து பல கட்டுரைகளை விரிவாகவும் நேர்த்தியாகவும் உருவாக்குவது கண்டு மகிழ்கிறேன். தொடர்க உங்கள் அரும்பணி. --இரவி (பேச்சு) 04:56, 23 சூலை 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

விக்கிக்கோப்பை வெற்றியாளர்
தமிழ் விக்கிப்பீடியர் அனைவர் சார்பாகவும், 2016 தமிழ் விக்கிக்கோப்பையில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெற்றி அடைந்தமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! இம்முயற்சியின் ஊடாக 169 புதிய கட்டுரைகளை உருவாக்கியிருப்பது மற்ற பயனர்களுக்கு ஊக்கமாக அமைகின்றது. மிக்க நன்றி. --இரவி (பேச்சு) 10:01, 31 சூலை 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம்
வணக்கம்,

பஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி. --இரவி (பேச்சு) 07:15, 15 ஆகத்து 2016 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rsmn/பதக்கங்கள்&oldid=3710727" இருந்து மீள்விக்கப்பட்டது