பயனர்:Ravidreams/கவனிக்கத்தக்க விக்கிபீடியர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிறைய விக்கிபீடியர்கள், இங்கு பாராட்டத்தக்க வகையில் செயல் பட்டு வருகிறார்கள். அவர்களை ஒட்டு மொத்தமாக புதியவர்களுக்கு அறிமுகப்படுத்துவது என் நோக்கம். பிற பயனர்கள் பற்றிய என் கருத்துக்கள் முழுமையானவை அல்ல. என் நினைவில் பிற பயனர்கள் எப்படி பதிந்திருக்கிறார்களோ அப்படியே எழுத முற்பட்டிருக்கிறேன். முழுக்கவும் சரியாக இல்லாமல் இருக்கலாம். மயூரன் தொடங்கி கோபி, கனகு, உமாபதி என பலர் முக்கியமான பங்காற்றி வருகின்றனர். நேரம் கிடைக்கும் போது ஒவ்வொருவர் பற்றியும் விரிவாக எழுதுவேன். பொதுப்பணி என்று வந்துவிட்ட பிறகு அவசியமில்லை என்றாலும், பல சமயம் நாம் ஒருவருக்கு ஒருவர் அடிக்கடி சிறு சிறு நன்றியுரைகள் மற்றும் பாராட்டு மொழிகள் சொல்ல வேண்டியிருக்கிறது. பிரதிபலன் எதிர்பார்க்காமல் பங்களிக்கும் பலருக்கும் இது ஊக்க மருந்தாக இருக்கும். அதையும் நான் ஒழுங்காகச் செய்வதில்லை. அந்த நேரத்தையும் கட்டுரைகளை செப்பனிடுவதில் செலவிட விருப்பம். பிறரிடமும் இதையே எதிர்ப்பார்க்கிறேன். தவிர, பேச்சுப்பக்கங்களில் இடப்படும் கருத்துக்கள் archive பக்கங்களில் மறைந்து விடும். இப்படி பயனர் பக்கத்தில் இடுவது பிறர் குறித்த என் எண்ணங்கள், நன்றி, பாராட்டு மொழிகளை நிலைத்து இருக்கச்செய்யும். விக்கிபீடியாவை விக்கிபீடியர்களை அறிய உதவும் ஊடகக் காரர்களுக்கும் இத்தகவல்கள் உதவும். போன ஆண்டு, தினமலர் இத்தகவல்களை பயன்படுத்தி செய்தி வெளியிட்டது.

மயூரநாதன்[தொகு]

தமிழ் விக்கிபீடியா தளம் தொடங்கியதில் இருந்து இன்று வரை தொடர்ந்து இயங்கி வருகிறார். இலங்கைத் தமிழர், கட்டிடக்கலை போன்ற தலைப்புகளில், கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான முழுமையான தகவல் செறிவுள்ள கட்டுரைகளை திட்டமிட்ட முறையில் தெளிவான இலக்குடன் எழுதி வருகிறார் (இந்த கலை, கவனம் எனக்கு சுட்டுப்போட்டாலும் வராது போலிருக்கிறது :)). ஒராண்டுக்கும் மேல் கிட்டத்தட்ட தனியாளாக செயல்பட்டு மீடியாவிக்கி செய்திகளை மொழி பெயர்த்துள்ளார். எந்த ஒரு விஷயம் குறித்தும் ஆழமான, விரிவான விளக்கங்களை திறந்த மனதுடன் தரும் இவர் குணம் நான் விரும்புவது.

சுந்தர்[தொகு]

விக்கி மீடியாவுக்கும் தமிழ் விக்கி திட்டங்களுக்கும் பாலமாக செயல்படுகிறார். இல்லாவிட்டால், புரியாத விக்கி சங்கேதக் குறிகளை எல்லாம் புரிந்து கொள்ள ரொம்பத் திண்டாட வேண்டயிருக்கும் :) தமிழ் விக்கிபீடியா திட்டத்தின் வெற்றியில் அதிக முனைப்பு காட்டும் முக்கியமான பயனர்.

ஸ்ரீநிவாசன், அஆ[தொகு]

தேசத்தலைவர்கள், இந்திய மாநிலங்கள், இந்து சமயம், உலக முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், நிகழ்வுகள் போன்ற பல முக்கியத்துவம் வாய்ந்த பொது அறிவுத் தலைப்புகளில் விரிவான கட்டுரைகள், குறுங்கட்டுரைகள் எழுதி வருகிறார். விக்கிபீடியாவுக்கு தொடர்ந்து வருகை தந்து கட்டுரைகள் எழுதுவதுடன், விக்கிபீடியா தள பாராமரிப்பிலும், புதுப் பயனர்களுக்கு உதவியாய் இருப்பதிலும் மிக முக்கிய பங்களிப்பு செய்கிறார். தன்னுடைய கருத்துகளை தயங்காமல் இவர் வெளிப்படுத்துவதால் பல ஆரோக்கியமான கலந்துரையாடல்களுக்கும் அதன் மூலம் விக்கிபீடியா கொள்கைகளை இறுதி செய்யவும் காரணமாக இருந்து வருகிறார். இவரைப் போல் இன்னும் பல பயனர்கள் விக்கிபீடியாவுக்கு வர வேண்டும் என்பது என் ஆவல். இவருடைய கட்டுரைகளில் சென்னை, மகாத்மா காந்தி, கிரிக்கெட், விவேகானந்தர் என் நினைவில் நிற்பன. கொஞ்ச நாளாக ஆளைக் காணவில்லை :)

சிவக்குமார்[தொகு]

பல முக்கியத்துவம் வாய்ந்த பொது அறிவுத் தலைப்புகளில் குறுங்கட்டுரைகள் எழுதி வருகிறார். தவிர, தள பராமரிப்பிலும் புதுப்பயனர்களுக்கு உதவியாய் இருப்பதிலும் சிறப்பாக உதவி வருகிறார். விக்கிபீடியாவுக்கு நான் வந்த புதிதில் யாருமே இல்லாமல் தனியாக பயமாக இருக்கும் :) தொடர்ந்து வருகை தந்து குன்றாத ஆர்வத்துடன் கட்டுரைகள் எழுதும் இவரைப் போன்றவர்கள் தான் வருங்காலத்தில் இது போன்று இன்னும் பல பயனர்கள் வருகை தருவர் என்று நம்பிக்கை அளிக்கும் வண்ணம் உள்ளது. இவருடைய கட்டுரைகளில் இந்திய இரயில்வே என் நினைவில் நிற்பது.

நற்கீரன்[தொகு]

இலங்கை, தமிழ், நடப்பு நிகழ்வுகள், அறிவியல் தொடர்புடைய கட்டுரைகளில் பங்களிப்பும் ஆர்வமும் காட்டி வருகிறார். உரையாடல் பக்கங்களில் பயனுள்ள ஆலோசனைகளை வழங்கி வருகிறார். விக்கிபீடியா தள பராமரிப்பிலும் பெரிதும் உதவி வருகிறார். விக்கிபீடியா தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை உணர்ந்து விக்கிபீடியாவையும் அதன் இன்ன பிற திட்டங்களையும் பலரும் அறியச்செய்ய முயற்சி எடுத்து வருகிறார். விக்சனரியிலும் முக்கியமான பங்களிப்பு ஆற்றி வருகிறார்.


செல்வகுமார்[தொகு]

வந்த வேகத்தில் பல துறைகளிலும் தரமான தகவல் செறிவுள்ள கட்டுரைகளை நல்ல தமிழில் எழுதி வருவதோடு, பிற பயனர்களுக்கும் கலைச்சொல் உருவாக்க ஆலோசனைகளில் பெரிதும் உதவி வருகிறார். உரையாடல் பக்கங்களில் ஆக்கப்பூர்வமான கருத்தை வெளிப்படுத்துபவர். இவரைப் போல் இன்னும் குறைந்தது 10 விக்கிபீடியர்கள் வந்தாலும் தமிழ் விக்கிபீடியாவின் தரமும் அளவும் எங்கயோ போயிடும் !!!


சக விக்கிபீடியர்கள் பற்றிய செல்வகுமாரின் கருத்துக்கள்[தொகு]

ரவி, தவறாக எண்ணாதீர்கள், பெயர் குறிப்பிட்டாலே சற்று குழப்பங்கள் வரத்தான் செய்யும். உங்கள் கணிப்போடு என் கணிப்பையும் சொன்னால் தவறாக எண்ண மாட்டீர்கள் என நம்பி எழுதுகிறேன். நான் மே 24 ஆம் நாள் தான் இங்கு வந்தேன், ஆனால் நானறிய பயன்மிகு கட்டுரைகள் எழுதுவதிலும், திருத்துவதிலும் நான் மிகவும் மதிக்கும் சிலரையும் குறிப்பிட விரும்புகிறேன். கனகு, கோபி, உமாபதி, மு.மயூரன், டெரென்ஸ், வைகுண்டராஜா அவர்களின் பங்கு மேற்குறிப்பிட்டவர்களில் மயூரநாதனைத்தவிர வேறு யாருக்கும் ஒரு சிறிதும் குறைவாக நான் எண்ண வில்லை. மயூரநாதன் உண்மையிலேயே மிகச் சிறந்த முறையில் மிகவும் சிந்தித்து, செறிவாக, நன்றாக கட்டுரைகளை எழுதியுள்ளார். கனகு போல் திறம்பட அமைதியாய் திருத்தங்கள் செய்பவர் இங்கு யாரும் இல்லை என்பதும், அவருடைய கட்டுரைகளும், மயூரநாதனுடைய கட்டுரைகளைப் போலவே மிக சிறப்பான செறிவுடன் உள்ளன என்பதும் என் கணிப்பில் குறிப்பிடத்தக்கது. கோபியை போல யாரும் நூல்கள் பற்றியும், குறிப்பிடத்தக்கவர்களைப் பற்றியும் எழுதவில்லை. இவரும் விக்கியாக்கத்தில் சிறந்தவர். உமாபதி, மு.மயூரைனைப் போல யாரும் நானறிய கணினியியல் மென்பொருள் பற்றிய கட்டுரைகளைத் திறம்பட செறிவாக எழுதுவோர்கள் இல்லை. ஏகாம்பரம் கலாநிதி போல நானறிய யாரும் பொருளாதாரம் பற்றி அருமையாக விக்கியில் எழுதக்கண்டிலேன். டெரென்ஸ், வைகுண்டராஜா அவர்களுடைய சமயத்துறை கட்டுரைகள் தவிர வைகுண்டராஜாவின் பசிபிக் பெருங்கடல், டெரென்ஸின் நாட்டுத்தகவற் சட்டங்கள், நாட்டுக்குறிப்புகள் போன்றவை மிகச் சிறப்பாக செய்துள்ளனர். புகழ்பெற்ற நா.கணேசன் அவர்கள் பயனராய் பதிவாகியிருக்கிறார்கள், புகழ்பெற்ற செல்வராஜ் பயனராய்ப் பதிவாகி இருக்கிறார்கள் இவர்கள் பயன் மிகு கட்டுரைகள் தர வல்லவர்கள், எதிர்பார்த்துகொண்டிருக்கிறேன். கதிரவனின் முதல் பதிவுகளை வைத்து அவரை எடைபோட முடியாது. இவர் திறம்பட கம்பியில்லா தொழில்நுட்பம் பற்றி (ரேடியோ, நுண்ணலை முதலியன) எழுதவல்லவர். --C.R.Selvakumar 17:48, 23 ஜூலை 2006 (UTC)செல்வா

பிறப் பயனர்களில், தொழில் நுட்பக் கட்டுரைகள் எழுதும் ந. உதயகுமார், மு. மயூரன் மற்றும் உமாபதி, Voiceonwings, Magnusaustrum, சமயக்கட்டுரைகள் எழுதும் வைகுண்டராஜா மற்றும் டெரன்ஸ், பொது அறிவுத் தகவல்களை எழுதுவதோடு விக்கிபீடியா நிர்வாகத்திலும் உதவும் கனகு மற்றும் கோபி, மூலிகைகள் குறித்து எழுதிய கார்த்திகேயன், தமிழ் இலக்கணக் கட்டுரைகள் எழுதிய ஹரிகிஷோர், தமிழ் இலக்கியக் கட்டுரைகள் எழுதிய சந்தோஷ்குரு ஆகியோரும் குறிப்பிடத் தக்கவர்கள். விரைவில் இவர்கள் அனைவரைப் பற்றியும் தனித்தனியே என் நினைவுகளை பகிர முற்படுவேன்.