பயனர்:Ravidreams/கட்டுரைத் தூண்டல் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புதிய கட்டுரை ஒன்றை உருவாக்குக

கீழே உள்ள பெட்டியில் கட்டுரையின் தலைப்பை இட்டு "கட்டுரையைத் தொடங்கவும்" என்ற பொத்தானை அழுத்தவும். அடுத்து வரும் பெட்டி ஒரு மின்னஞ்சல் எழுதும் பெட்டி போல் இருக்கும். அதில் உங்கள் கட்டுரையை இட்டு, கீழேயுள்ள பக்கத்தைச் சேமிக்கவும் எனும் பொத்தானை அழுத்துங்கள். உங்கள் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் இடம் பெற்றுவிடும்.

மாதிரிக் கட்டுரைகள்

கட்டுரையாக்க வழிகாட்டல்கள் இற்றைப்படுத்து

1. கட்டுரைத் தலைப்பும் உள்ளடக்கமும் தமிழில் இருக்க வேண்டும்.

2. நீங்கள் வாழும் ஊர், அண்மையில் படித்த புத்தகம், பயிலும் கல்வித் துறை, பார்த்த திரைப்படம், புகழ்பெற்ற ஆளுமைகள் என்பது போன்று எந்த வகையான தலைப்புகள் குறித்தும் நீங்கள் எழுதலாம். ஆங்கில விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளை மொழிபெயர்த்தும் எழுதலாம். பிறருக்குக் காப்புரிமை உள்ள கட்டுரைகள், படிமங்களைப் பயன்படுத்த வேண்டாம்.

3. கட்டுரைகள் தகவலை மட்டும் முன்னிறுத்தி சொந்தக் கருத்துகள் இன்றி, நடுநிலையுடன், ஆதாரத்துடன் இருக்க வேண்டும். தனி நபர்கள், நிறுவனங்கள் பற்றிய விளம்பரங்கள், உயர்வு நவிற்சிகளைத் தவிர்க்கவும்.

4. நீங்கள் எழுதும் கட்டுரைகள் உடனுக்குடன் மற்றவர்களின் பார்வைக்கு வரும். யாருடைய ஒப்புதலும் தேவை இல்லை. நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பில் ஏற்கனவே கட்டுரை இருந்தால் அதனை நீக்காது, கூடுதலாகத் தகவலைச் சேர்த்துச் சேமிக்கலாம்.

5. தவறான தகவல், விளம்பர நோக்கம் போன்றவற்றைத் தவிருங்கள். அவ்வாறான தகவல்கள் உடனடியாக நீக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

பிழை செய்து விடுவோமோ என்ற கவலையின்றி தயங்காது எழுதத் தொடங்குங்கள். மற்ற விக்கிப்பீடியர்கள் உங்களுக்கு உதவக் காத்திருக்கின்றனர். நன்றி!

உதவிக் குறிப்புகள்

ஏற்கனவே விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதும் சிலர்...

Karthick sketch.jpg

கார்த்திக், தமிழகத்தில் உள்ள இராசிபுரத்தை அடுத்த சிங்களாந்தபுரத்தைச் சேர்ந்தவர். பெங்களுரின் இந்திய அறிவியல் கழகம் மற்றும் மைசூர் பல்கலைகழகத்தில், முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, தற்போது ஐக்கிய அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தில இருகலப்பாசிகளைப் பற்றிய ஆய்வுகளைச் செய்து வருகிறார். பறவைகள், உயிரியல் தொடர்பாக ஆர்வமுள்ள இவர், மே 2008 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். ஆகாயத்தாமரை, கடமா, பறவைகளின் தமிழ்ப் பெயர்கள், கழுதைப்புலி, புல்வாய், வரையாடு, கேழல்மூக்கன், சலீம் அலி ஆகியன இவர் முதன்மைப் பங்களித்த கட்டுரைகளில் சில.