பயனர்:Priyanka doure/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிம்ரஞ்சித்து கவுர் பாத் படம் கிடைக்கவில்லை[தொகு]

சிம்ரஞ்சித்து கவுர் பாத் (Simranjit Kaur Baatth) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தொழில்சாரா குத்துச்சண்டை வீராங்கனை ஆவார். [1] இவர் 1995 ஆம் ஆண்டு சூலை மாதம் 10 அன்று பிறந்தார்.

சிம்ரஞ்சித்து கவுர்
Simranjit Kaur
தனிநபர் தகவல்
முழு பெயர்சிம்ரஞ்சித்து கவுர் பாத்
தேசியம்இந்தியர்
பிறப்பு10 சூலை 1995 (1995-07-10) (அகவை 25)
இந்தியா, பஞ்சாப், சாக்கர்
உயரம்1.69 m (5 ft 6 12 in)
எடை64 kg (141 lb)
விளையாட்டு
விளையாட்டுகுத்துச் சண்டை
எடை வகுப்புஇலகுரக பளு பிரிவு

2011 ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு அளவில் இந்தியாவிற்காக குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொள்கிறார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தொழில்சாரா பன்னாட்டு குத்துச்சண்டை கூட்டமைப்பு மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்பட்டப் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். துருக்கி நாட்டின் இசுதான்புல் நகரில் நடைபெற்ற அமெட் கொமர்ட் பன்னாட்டு மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் 64 கிலோ எடைப் பிரிவில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் ஒருவராகவும் கவுர் அங்கம் வகித்துள்ளார். [2]

2021 ஆம் ஆண்டு சப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் 60 கிலோ குத்துச்சண்டைப் போட்டியில் கவுர் பங்கேற்க உள்ளார். [3] ஒலிம்பிக் குத்துச் சண்டைப் போட்டியில் கலந்து கொள்ளும் முதலாவது பஞ்சாப் பெண் என்ற சிறப்பும் கவுருக்கு கிடைத்துள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியானா மாவட்டத்திலிருக்கும் சாக்கர் கிராமத்தில் கவுர் பிறந்தார். [1] கமல் யீத் சிங் மற்றும் ராச்பால் கவுர் தம்பதியர் இவருடைய பெற்றோர்களாவர். தனது மூத்த உடன்பிறப்புகளும் குத்துச்சண்டைக்கு வந்தபின்னரும் கவுர் குத்துச்சண்டையைத் தொடர இவரது தாயால் ஊக்குவிக்கப்பட்டார். [4]

தொழில்முறை சாதனைகள்[தொகு]

  1. 2011 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் நடைபெற்ற 6 ஆவது இளையோர் பெண்கள் தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். [1]
  2. 2012 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் நகரத்தில் நடைபெற்ற 4 ஆவது இடை மண்டல மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன் பட்டப் போட்டியிலும், பட்டியாலாவில் நடைபெற்ற 8 ஆவது இளையோர் பெண்கள் தேசிய குத்துச்சண்டை சாம்பியன் பட்டப் போட்டியிலும் முறையே வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.[1]
  3. 2015 ஆம் ஆண்டு அசாம் மாநிலம் குவகாத்தியின் நியூ போங்கைகாவோன் நகரில் நடந்த 16 ஆவது முதியோர் பெண்கள் தேசிய குத்துச்சண்டை சாம்பியன் பட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். [1]
  4. 2018 ஆம் ஆண்டு துருக்கியின் இசுதான்புல் நகரத்தில் நடைபெற்ற 64 கிலோ பிரிவில் நடந்த அகமத் காமெர்ட்டு பன்னாட்டு குத்துச்சண்டை போட்டியில் கவுர் தங்கப் பதக்கம் வென்றார். மோனிகா மற்றும் பாக்யபதி கச்சாரி ஆகியோர் முறையே 48 கிலோ மற்றும் 81 கிலோவில் தங்கப்பதக்கம் வென்றனர். [2]
  5. இந்தியாவின் புது தில்லியில் நடைபெற்ற மேரி கோம் தலைமையிலான 2018 தொழில்சாரா மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டப் போட்டியில் 10 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய அணியில் கவுர் ஒரு பகுதியாக இருந்தார். [5] இலகுரக பளு தூக்கும் போட்டியில் பங்கேற்ற இவர் வெண்கலப் பதக்கம் வென்றார். [6]
  6. 2019 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் லபுவன் பாயோவில் நடைபெற்ற 23 ஆவது குடியரசுத் தலைவர் கோப்பை பன்னாட்டு குத்துச்சண்டை போட்டியில் கவுர் தங்கப்பதக்கம் வென்றார். [7]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

ஈசா சிங்[தொகு]

ஈசா சிங்கு
Esha Singh
Esha Singh.jpg
துப்பாக்கி விளையாட்டு வீராங்கனை
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியன்
பிறப்பு1 சனவரி 2005 (2005-01-01) (அகவை 16)
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதுப்பாக்கிச்சுடும் விளையாட்டு

ஈசா சிங் (Esha Singh) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு துப்பாக்கி சுடும் வீராங்கனையாவார். 2005 ஆம் ஆண்டு சனவரி மாதம் 1 ஆம் தேதி இவர் பிறந்தார்.

தன்னார்வ துப்பாக்கி சுடும் வீராங்கனையான இவர் செருமனி நாட்டின் சுகல் நகரில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இளையோர் உலக கோப்பைப் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஆசிய இளையோர் போட்டியின் 10 மீட்டர் காற்றழுத்த துப்பாக்கி சுடும் பெண்கள் பிரிவிலும் கலப்பு 10மீட்டர் காற்றழுத்த துப்பாக்கி சுடும் அணி ) போட்டியிலும் போட்டியிட்டு இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ஈசா சிங், இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்து நகரில் பிறந்தார். ராலி கார்ப்பந்தய ஓட்டுனரான சச்சின் சிங் மற்றும் சிறீலதா ஆகியோர் இவரது பெற்றோர்களாவர்.

ஒன்பது வயதில் ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி விளையாட்டு அரங்கத்தின் துப்பாக்கிச் சுடும் மையத்திற்குச் சென்றது முதல் துப்பாக்கி சுடும் விளையாட்டில் ஆர்வமும் உற்சாகமும் வரப்பெற்றுள்ளார்.[2] காற்றழுத்த துப்பாக்கி சுடும் பிரிவைத் தேர்ந்தெடுத்து பயிற்சிபெறத் தொடங்கினார். மகாராட்டிரா மாநிலம் புனேவில் உள்ள ககன் நரங்கின் பயிற்சி மையத்திற்குச் சென்று பயிற்சியைத் தொடர்ந்தார்.[3]

சாதனைகள்[தொகு]

  1. 13 வயதிலேயே கேரளாவில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் போட்டியிட்டு ஈசா சாம்பியன் பட்டம் பெற்றார்.[4] இப்போட்டியில் இளையோர், மூத்தோர் பிரிவு போட்டிகளிலும் ஈசா தங்கப் பதக்கங்களை வென்றார்.[5]
  2. 2019 ஆம் ஆண்டு தாய்பெய் நகரில் நடைபெற்ற 12 ஆவது ஆசிய காற்றழுத்த துப்பாக்கி சாம்பியன் பட்டப் போட்டியில் 10மீ காற்றழுத்த துப்பாக்கி சுடும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.[6]
  3. 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கத்தார் நாட்டின் தோகா நகரில் நடைபெற்ற ஆசிய இளையோர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன் பட்டப் போட்டியில் ஈசா வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.[7]
  4. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்தியாவின் மைய பயிற்சி அணியில் ஈசா சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.[8]

மேற்கோள்கள்[தொகு]