பயனர்:Prathibaaaa/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தெமாசெக் தொடக்கக் கல்லூரி

தெமாசெக் தொடக்கக் கல்லூரி (Temasek Junior College) சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியிலுள்ள பிடோக் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இக்கல்லூரியில் ஆறு வருட ஒருங்கிணைக்கப்பட்ட கல்வித் திட்டமும் (6-year Integrated Programme) ஈராண்டு புகுமுக கல்வித் திட்டமும் (2-year Pre university Programme) வழங்கப்படுகின்றன. இரு திட்டத்திலும் பயிலும் மாணவர்கள், இறுதியில் பொதுக் கல்விச் சான்றிதழ் மேல்நிலைத் (GCE ‘A’ Level) தேர்வை எழுதுவர்.

பொருளடக்கம்

1. வரலாறு மற்றும் கல்விமுறை 

2. விருதுகள் 

3. கல்லூரிச் சின்னம்

4. கல்லூரிச் சீருடை 

5. கல்லூரி நடைமுறைகள் 

6. இணைப்பாட நடவடிக்கைகள் 

7. முன்னாள் மாணவர்கள்

பள்ளி முகவரி: 22, பிடோக் சவுத் சாலை, சிங்கப்பூர் 469278

பள்ளி முழக்க வரி: கல்லூரிக்காக, தேசத்திற்காக

பள்ளி வலைத்தளம்: temasekjc.moe.edu.sg

மாணவர் எண்ணிக்கை:                1800 மாணவர்கள்

பள்ளி முதல்வர்:    திருமதி லோ ஏ நார்

1. வரலாறு மற்றும் கல்வி முறை

தெமாசெக் தொடக்கக் கல்லுரி 1997-ஆம் ஆண்டில் இரண்டாம் அரசாங்கத் தொடக்கக் கல்லூரியாக  நிறுவப்பட்டது. 2005-ஆம் ஆண்டில், இக்கல்லூரி உயர்நிலை 3 மாணவர்களுக்கு, 'தெமாசெக் அகாடெமி' (Temasek Academy) என்ற நான்கு வருட ஒருங்கிணைக்கப்பட்ட கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்தது. 2013-ஆம் ஆண்டு தொடங்கி, தெமாசெக் தொடக்கக் கல்லூரி, உயர்நிலை ஒன்று முதல் புகுமுக வகுப்பு இரண்டு வரையிலான ஆறு வருட ஒருங்கிணைக்கப்பட்ட கல்வித் திட்டத்தை மாணவர்களுக்கு வழங்குகிறது. அதோடு, உயர்நிலை நான்கில், பொதுக்கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் தேர்வை எழுதிய மாணவர்களும் இங்கு ஈராண்டுக்கான புகுமுக வகுப்புக் கல்வித் திட்டத்தில் சேர்ந்து பயிலலாம்.  

சீன மொழி விருப்பப் பாடம் (Chinese Language Elective Programme – CLEP) தொடங்கப்பட்ட 1990-ஆம் ஆண்டு முதல் அப்பாடத்தை தெமாசெக் தொடக்கக் கல்லூரி, வழங்கி வருகிறது. மேலும் இசைக்கான விருப்பப்பாடமும் (Music Elective Programme – MEP) இங்கு வழங்கப்படுகிறது. 

2. விருதுகள்

இக்கல்லூரி கடந்த ஆண்டுகளில், பள்ளி உன்னத விருது (School Excellence Award), சிறந்த செயல்பாட்டுக்கான விருதுகள் (Best Practice Awards), தொடர் சாதனை விருதுகள் (Sustained Achievement Awards) உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளது. 2015-ஆம் ஆண்டு இக்கல்லூரிக்குக் கல்வி அமைச்சின் மதிப்புமிக்க பள்ளித் தனித்தன்மை விருது (School Distinction Award) வழங்கப்பட்டது. அதோடு, இதே ஆண்டு, கற்றல் கற்பித்தல், மாணவரின் முழுமையான வளர்ச்சி, ஆசிரியர் நலன் மற்றும் மேம்பாடு, நற்குணமும் குடியியல் கல்வியும், கூட்டுமுயற்சி ஆகிய ஐந்து பிரிவுகளுக்குமே சிறந்த செயல்பாட்டு விருதுகளையும் (Best Practice Awards) இக்கல்லூரி பெற்றிருக்கிறது. 

3. கல்லூரிச் சின்னம்  

பள்ளிச் சின்னத்தில் 'TJC' என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. 'T' என்ற எழுத்து, பள்ளியின் கட்டடக்கலையைக் காட்டுகிறது. சின்னத்துக்கு நடுவில் இருக்கும் சதுரம் பள்ளியின் நிர்வாகக் கட்டடத்தைப் பிரதிபலிக்கிறது.  

சிங்கப்பூர், பசுமையான தூய்மையான நாடாகப் பிரதிபலிப்பதை ஒத்து, கல்லூரியின் சின்னத்தில் பச்சைப் பின்னணி உள்ளது. 'T' என்ற எழுத்தில் இருக்கும் ஐந்து பிரிவுகள் நீதி, சமத்துவம், மகிழ்ச்சி, செழிப்பு, முன்னேற்றம் ஆகிய ஐந்து தேசியக் கொள்கைகளைக் குறிக்கின்றன. அந்த எழுத்தின் கீழே இருக்கும் நான்கு பிரிவுகள், பள்ளியுடன் ஒன்றுசேர்ந்து தேசத்தின் கொள்கைகளை அடைய முயலும் நான்கு முக்கியப் பகுதிகளைக் குறிக்கின்றன.

4. கல்லூரிச் சீருடை

இக்கல்லூரியின் சீருடை வெளிர் பச்சை நிறத்தில் அமைந்திருக்கும். வாரந்தோறும் புதன்கிழமைகளில் மாணவர்கள் அனைவரும் கழுத்துப் பட்டை (Tie) அணிவர். 

5. கல்லூரி நடைமுறைகள்

கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படுவார்கள். அவையாவன:

• ஆல்ஃபா (Alpha) -   நீல நிறம்

• பேட்டா (Beta) –    வெள்ளை நிறம்

• காம்மா (Gamma) -  மஞ்சள் நிறம்

• டெல்டா (Delta) -   பச்சை நிறம்

ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு மாணவர் சங்கம் இருக்கிறது. அவை பள்ளி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும். இந்த நான்கு பிரிவுகளும் கல்லூரி நிகழ்ச்சிகளில் போட்டி போட்டுப் புள்ளிகளைப் பெறுவார்கள்.

கல்லூரியில் சேர்ந்தவுடன், புதிய மாணவர்கள், மாணவர் சங்கம் ஏற்பாடு செய்யும் அறிமுக நிகழ்ச்சிகளில் ஈடுபடுவார்கள். இதன் பிறகு, தொடக்கக் கல்லூரி மாணவர்கள் தாங்கள் கற்கப்போகும் பாடங்களுக்கு ஏற்பப் பிரிக்கப்படுவார்கள்.

6. இணைப்பாட நடவடிக்கைகள்

ஒவ்வொரு மாணவனும் குறைந்தபட்சம் ஓர் இணைப்பாட நடவடிக்கையிலாவது ஈடுபட வேண்டும். தெமாசெக் தொடக்கக் கல்லூரியில்,  இவ்விணைப்பாட நடவடிக்கைகள் தனிப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் (Personal Development Programmes) என்று அழைக்கப்படுகின்றன. மாணவர்கள் இணைப்பாட நடவடிக்கைகளைத் தங்கள் விருப்பத்திற்கேற்பத் தேர்ந்தெடுத்துக் கலந்துகொள்ளலாம்.  இக்கல்லூரியின் இணைப்பாட நடவடிக்கைகள் மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன: 

• கலாச்சாரம் மற்றும் நிகழ்த்துக் கலைகள்

• சேவை & செறிவூட்டல்

• விளையாட்டுகள்

கலாச்சாரம் மற்றும் நிகழ்த்துக் கலைகள் தொடர்பான இணைப்பாட நடவடிக்கைகள்:

- சீனக் கலாச்சார மன்றம்

- மலாய்க் கலாச்சார மன்றம்

- இந்தியக் கலாச்சார மன்றம்

- சீன இசைக்குழு

- பாடகர் குழு

- நாடகக் குழு

- விவாதக் குழு

- கித்தார் குழு

- நவீன நடனக் குழு

- இசைக் குழு

சேவை மற்றும் செறிவூட்டல் தொடர்பான இணைப்பாட நடவடிக்கைகள்:

- முதலுதவிக் குழு

- தொழில்நுட்பக் குழு

- சமூக சேவைக் குழு

- அறிவியல் மன்றம்

- மாணவர் சங்கம்   

விளையாட்டுகள்

- துப்பாக்கி சுடுதல்

- பூப்பந்தாட்டம்

- கூடைப்பந்தாட்டம்

- மேசைப்பந்தாட்டம்

- உருட்டுப்பந்து

- தரைப்பந்தாட்டம்

- வலைப்பந்தாட்டம்

- கைப்பந்தாட்டம்

- காற்பந்தாட்டம் (ஆண்களை மற்றும் பெண்கள்)

- டென்னிஸ்

- ஸ்குவாஷ்

- நீர்ப் பந்தாட்டம்

- நீச்சல்

- வெளிப்புற நடவடிக்கைகள் குழு

- டேக்வாண்டோ

7. முன்னாள் மாணவர்கள்

இந்தக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பலர் இப்போது சட்டம், மருத்துவம், பொறியியல், கல்வி, கட்டடக்கலை, அரசியல், கலைகள் எனப் பல்வேறு  துறைகளிலும் முன்னணி வகிக்கின்றனர். அவர்களுள் கீழ்க்காணும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.

• திரு லிம் பியாவ் சுவான் – துணைச் சபாநாயகர் 2015

• குமாரி ஃபாத்திமா லத்தீஃப் - நாடாளுமன்ற உறுப்பினர் (மரின் பரேட் குழுத்தொகுதி)

• குமாரி லோ யென் லிங் - நாடாளுமன்ற உறுப்பினர் (சுவா சூ காங் குழுத்தொகுதி)

• திரு பேட்ரிக் டே டெக் குவான் - நாடாளுமன்ற உறுப்பினர் (நீ சூன் குழுத்தொகுதி)   

• திரு ஜைனல் பின் சபாரி - நாடாளுமன்ற உறுப்பினர் (பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதி)   

• திரு இந்தர்ஜித் சிங் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (அங் மோ கியோ குழுத்தொகுதி)  

மேற்கோள்கள்

https://en.wikipedia.org/wiki/Temasek_Junior_College

http://temasekjc.moe.edu.sg/

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Prathibaaaa/மணல்தொட்டி&oldid=2250976" இலிருந்து மீள்விக்கப்பட்டது