பயனர்:Prakash Murugan/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேரி சாண்ட்லர்[தொகு]

முன்னுரை[தொகு]

மேரி சாண்ட்லர் (1687-1745) ஒரு ஆங்கில கவிஞர். இவர் இயற்றிய கவிதைகளிலேயே "பாத் (Bath)" என்னும் கவிதைத் தொகுப்பு மிகவும் புகழ் பெற்றதாகும்.

பிறப்பும் இளமைப் பருவமும்[தொகு]

மேரி சாண்ட்லர் அவர்கள் 1687 ஆம் ஆண்டு இங்கிலாந்தில், வில்ட்ஷயர்(Wiltshire) உள்ள மால்மேஸ்புரி(Malmesbury) என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தையாரான ஹென்றி சாண்ட்லர் சொமெர்செட்டில்(Somerset) உள்ள பாத்(Bath) என்னும் நகரில் எதிர்க்கட்சி மந்திரியாக பணியாற்றினார். வீட்டின் மூத்த மகளான மேரிக்கு, ஜான் மற்றும் சாமுவேல் சாண்ட்லர் என இரு சகோதரர்கள் இருந்தனர். சிறுவயதிலேயே மேரிக்கு முதுகெலும்பு கோணலானதன் காரணமாக அவருடைய உடல்நிலை மிகவும் பாதிப்படைந்தது. இதன் காரணமாக இவருடைய திருமண வாழ்கையும் தடைப்பட்டு போனது, மேலும் வீட்டில் ஏற்பட்ட வறுமைச் சுமையின் காரணமாக தன்னுடைய பதினெட்டு வயதினிலேயே வேலைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அதனால் 1705 ஆம் ஆண்டு பாத்(Bath) நகரிலேயே ஒரு கடை அமைத்து அதில் வேலை பார்த்து வந்தார்.

கல்வியும் கவியும்[தொகு]

வேளைக்குச் செல்லும்பொழுதே அவருக்கு கவிதையின் மீது நாட்டம் ஏற்பட்டது. அப்பொழுதே ஒய்வு நேரங்களில் அவருடைய நண்பர்களுக்கும் அண்டை வீட்டுக்காரர்களுக்கும் கவிதைகள் மற்றும் புதிர்கள் பலவற்றையும் தருவார். மேரி சிறந்த கல்வியை பெறவில்லை என்றாலும், தன்னுடைய விடாமுயற்சியின் காரணமாக, அக்காலத்தில் வாழ்ந்த கவிஞர்கள் முதல் நவீன காலத்தில் வாழ்ந்த கவிஞர்கள் என அனைவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் படித்து தன்னுடைய கல்வி அறிவை மேம்படுத்தினார். இதனுடன் இவருடைய கவிதை படைக்கும் ஆற்றலும் மேம்பட்டது.

பாத் (Bath) நூலின் படைப்பு[தொகு]

மேரியின் வளர்ச்சியில் அவருடைய நண்பர்களின் செயல்பாடு பெரும்பங்கு வகித்தது. அவருடைய நண்பர்களும் அண்டை வீட்டுகாரர்களும் அவரை பெரிதும் ஊக்கப்படுத்தினார். அவருடைய நண்பர்களின் ஊக்குவித்ததால், 1733 ஆம் ஆண்டு "எ திஸ்க்ரிப்ஷன் ஆப் பாத்"(A Description of Bath) என்னும் நூலை வெளியிட்டார். இவருடைய இப்படைப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக இந்நூலின் மூன்றாம் பதிப்பகம் 1736 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில் மேலும் பல கவிதைகள் இடம் பெற்றிருந்தன அவற்றில் பெரும்பாலானவை அரை சுயசரிதையாகவே அமைந்தது. இந்நூலின் எட்டாம் பதிப்பகம் 1767 ஆம் ஆண்டு வெளியானது. இந்நூலின் இரண்டாம் பதிப்பகம் முதல் ஏழாம் பதிப்பகம் வரை சாமுவேல் ரிச்சர்ட்சன் என்பவரால் அச்சிடப்பட்டது.

மேரி இயற்றிய கவிதைகளை படித்த அறுபது வயதுமிக்க ஒரு செல்வந்தர், அக்கவிதையின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக, என்பது மையில் தூரம் பயணம் செய்து மேரியை காணவந்தார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கு கொண்டார். இதனை மறுத்த மேரி, இச்சம்பவத்தையே ஒரு பகுதியாக தன்னுடைய பாத் என்னும் நூலின் ஆறாம் பதிப்பகத்தில் வெளியிட்டார். இந்த பாத் என்னும் நூலை மேரி அவர்கள் தன்னுடைய சகோதரர் ஜானுக்கு அர்ப்பணித்தார்.

இறுதி வாழ்க்கை[தொகு]

மேரி சாண்ட்லர் இறுதியாக " ஆன் தி அட்ரிபுட்ஸ் ஆப் காட் " (On the Attributes of God) என்னும் நூலை எழுதினார். ஆனால் அதை முடிப்பதற்கு முன்பாகவே அவர் இறந்துவிட்டார். அவர் செப்டம்பர் மாதம் 11, 1975 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Prakash_Murugan/மணல்தொட்டி&oldid=2321870" இலிருந்து மீள்விக்கப்பட்டது