பயனர்:Natkeeran/தாய்மொழியில் கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தாய்மொழியில் கல்வி அல்லது தாய்மொழி வழிக் கல்வி என்பது ஒருவரின் தாய்மொழியில் அல்லது முதல் மொழியில் கல்வியைக் கற்றல் ஆகும். தாய்மொழிக் கல்வி, சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களில் முக்கியம் பெறுகிறது. தாய்மொழியை முதன்மையாகக் கொண்ட பன்மொழிக் கல்வி மேம்பட்ட கல்வி, நல, சமூக, பொருளாதார விளைவுகளைத் தரும் எனப் பல்வேறு ஆய்வுகள் ஒத்திசைவாகக் கூறுகின்றன.[1] ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெசுகோ) தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தினை பல்வேறு கொள்கை மற்றும் செயற்றிட்டங்கள் ஊடாக முன்னிறுத்தி வருகின்றது. எனினும் சமூக அசைவாக்கம், பொருளாதார வாய்ப்புக்கள், இலகு தொடர்பாடல், உயர் கல்வி நோக்குகளில் ஆங்கிலம் அல்லது பிற மொழி வழிக் கல்வியே சிறந்தது என்று வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.[2]

உரிமையும் சட்டமும்[தொகு]

மொழி உரிமைகள் அடிப்படை மனித உரிமைகளின் பாகமாக பல அமைப்புகளாலும், சமூகங்களாலும் கருதப்படுகின்றன. யுனெசுகோ நிறுவனம் பல்வேறு அனைத்துலக சான்றுரைகள், உடன்படிக்கைகள், பரிந்துரைகளை மொழி உரிமைகளுக்கு ஆதரவாக முன்வைக்கின்றது.[1] அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை மொழிசார் உரிமைகளை நிலைநாட்டும் ஒரு முக்கிய மூல ஆதாரமாக அமைகின்றது. தாய்மொழியில் கல்விக்கான உரிமை இவற்றின் நீட்சியாவும், பழங்குடிமக்கள், சிறுபான்மை மக்கள், குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களின் சிறப்புக் கூறுகளாகவும் அமைகின்றது. எனினும் நடைமுறையில் தாய்மொழியில் கல்வி கற்பதற்கான தெளிவாக வெளிப்படுத்தப்பட்ட பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளோ சாற்றுரைகளோ இல்லை. சட்ட நோக்கிலும் மொழி உரிமைகள், தாய்மொழியில் கல்விக்கான உரிமை ஆகியன உறுதியான அனைத்துலக சட்டங்களின் அடித்தளத்தில் நிலைநிறுத்தப்படவில்லை.[3] தாய்மொழியில் கல்விக்கு ஆதரவாக இருக்கக் கூடிய பல்வேறு தேசிய, பன்னாட்டு சான்றுரைகளும் உறுதியாக உரிமைகளை வலியுறுத்தி அமையவில்லை.[4] தற்போதைய அனைத்துலக சட்ட நிலைமை வலுவற்று இருப்பினும் பல்வேறு தேசிய, பன்னாட்டு சான்றுரைகளும் சட்டங்களும் தாய்மொழியில் கல்வியை ஊக்குவிக்கும் திசையில் அமைந்து வருகின்றன.

சட்டப் பிணிப்பு இல்லாத அனைத்துலக மொழிசார் உரிமைகள் சான்றுரை, தேசிய சிறுபான்மையினங்களின் கல்வி உரிமைகள் தொடர்பான கேக் பரிந்துரைகள் (The Hague recommendations regarding the education of of national minorities) ஆகியன தாய்மொழியில் கல்விக்கு கூடியளவு ஆதரவு தரும் ஆவணங்களாக அமைகின்றன. நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பழங்குடி மக்களின் உரிமைகள் பிரகடனம் (Declaration on the Rights of Indigenous Peoples), இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை, UN Declaration on the Rights of Persons Belonging to National or Ethnic, Religious and Linguistic Minorities, குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை[5], UN Declaration on the Rights of Indigenous Peoples, European Charter for Regional or Minority Languages ஆகியன தாய்மொழியில் கல்விக்கு ஆதரவான வெளிப்படுத்தல்களாக அமைகின்றன.[6]

கல்விக் கொள்கையும் தாய்மொழியும்[தொகு]

எந்த மொழியில் கல்வியை வழங்குவது என்பது எந்தவொரு கல்வி முறைமையிலும் மிக முக்கியமனா ஒரு தெரிவு ஆகும். இந்தத் தெரிவை பல்வேறு வரலாற்று, அரசியல், சமூக, பொருளாதார, கல்விக் காரணிகள் நிர்மானிக்கின்றன. தாய்மொழியில் கல்வி தொடர்பாக கல்வி முறைகளைப் பின்வருமாறு பிரிக்கலாம்:

 • அடிப்படைக் கல்வியில் இருந்து உயர் கல்வி வரை தாய்மொழியில் வழங்கல் - இசுரேல்[7], தென் கொரியா, ஈரான், யப்பான், சீனா, ஐரோப்பிய நாடுகள்
 • அடிப்படைக் கல்வி தாய்மொழியில், உயர்கல்வி பிறமொழியில் (பெரும்பாலும்) - மலேசியா, இலங்கை, இந்தியா, தென்னாப்பிரிக்கா
 • தாய்மொழி அடிப்படையிலான பன்மொழிக் கல்வி - பிலிப்பனைசு[8], கம்போடியா, தாய்லாந்து [9]
 • கல்வி பிறமொழியில், தாய்மொழி ஒரு பாடமாக அமைதல் - சிங்கப்பூர்
 • முற்றிலும் பிறமொழிகளில் - பொலிவியா பழங்குடிச் சமூகங்கள், பெலருஸ், எத்தியோப்பியா[10]

பெரும்பான்மையான நாடுகளில் நாட்டின் ஆட்சி மொழிகளே கல்வி மொழிகளாகவும் உள்ளன. இதனால் பழங்குடிமக்கள், சிறுபான்மையினர் மொழிகளில் கல்வி வழங்கப்படுவதில்லை. பெரும்பான்மை ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் காலனித்துவ மொழிகளில் கல்வி வழங்கப்படுவதால் அந்த நாடுகளில் தாய்மொழிக் கல்வி இல்லை. இலங்கை போன்று பல நாடுகளில் அடிப்படைக் கல்வி தாய்மொழியிலும், உயர்கல்வி பிற மொழிகளிலும் அமைகின்றது.

அண்மைக் காலமாக தாய்மொழியில் கல்வியை பல்வேறு ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள் அமுல்படுத்தி வருகின்றன.

ஆய்வும் கோட்பாடுகளும்[தொகு]

தாய்மொழியில் கல்வி தொடர்பான ஆய்வுகள் கல்வியியல், பயன்பாட்டு மொழியியல், சமூகவியல், பண்பாட்டியல், அரசறிவியல் உட்பட்ட துறைகளை உள்ளடக்கி அமைகின்றது.


பயன்கள்[தொகு]

தாய்மொழிக் கல்வியின் பயன்கள் [2]

தாய்மொழிக் கல்வி மேம்பட்ட கல்வி விளைவுகளைத் தரும் என பல ஆய்வுகள் ஒத்திசைவாக கூறுகின்றன. தாய்மொழியில் கற்றல் ஒருவரின் சிந்தனை வளர்ச்சிக்கும், மேம்பட்ட கல்வி பெறுபேறுகளையும் தரும்.[3]

கல்விப் பயன்கள்[தொகு]

மேம்பட்ட வாசிப்பு, கற்றல் பெறுபேறுகள்[தொகு]

ஒருவரின் தாய்மொழியில் தேர்ச்சி பெறுவது அந்த மாணவரின் அறிவுணர்வு வளர்ச்சிக்கும் (cognitive development), பொதுவான கல்விப் பெறுபேறுகளுக்கும் முக்கியமானது என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.[4][5] ஒரு குழந்தையின் கல்வி வீட்டில் தொடங்குகின்றது. வீட்டில் கற்பதற்கும் பள்ளியில் கற்பதற்கும் வெற்றிகரமான பாலமாக தாய்மொழி அமைகின்றது.[6] குறிப்பாக, தாய்மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் வேகமாக வாசிக்கப் பழகுகின்றார்கள். இவர்களுக்கு தாய்மொழியின் சொற்கள், மொழியமைப்பு, மொழியின் ஓசைத்தன்மை அல்லது உச்சரிப்பு பற்றி இயல்பான ஆழமான அறிவு இருப்பதால் தாய்மொழியில் வாசித்தலும் புரிதலும் இலகுவாகின்றது.[7] மொழியறிவு சிறப்பாகவும் வேகமாகவும் அந்த மாணவருக்குக் கிடைக்கின்றது. மொழியை இயல்பாக அறிதல், பிற துறைகளைக் கற்க உதவுகின்றது. மொழியைக் கற்பதில் கூடிய ஆற்றல் செலுத்தாமல், அடிப்படைத் திறன்களில் கூடிய கவனத்தைத் தரக்கூடியதாக இருக்கின்றது.

தாய்மொழியில், சமூகத்தின் மொழியில் கல்வி அமையும் போது மாணவர்கள் வகுப்பில் கூடிய பங்கேற்கின்றனர். மாணவர்களை கல்வி மீது கூடிய ஈர்ப்புக் காட்ட வைக்கின்றது.[8] பெற்றோரும் மாணவர்களின் கல்வியில் கூடுதலாக ஈடுபாடு காட்டுகின்றனர்.http://etd.uwc.ac.za/xmlui/bitstream/handle/11394/1719/Desai_PHD_2012.pdf?sequence=1 இதன் காரணங்களாகவும் கற்றல் பெறுபேறுகள் மேம்படுகின்றன.

 • "basic pedagogical principle that new knowledge and concepts are best built on a foundation of already existing understanding" [9]

மேம்பட்ட கல்விக்கான அணுக்கம்[தொகு]

அனைவருக்குமான கல்வி என்பதில் தாய்மொழி வழிக் கல்வி முக்கியம் பெறுகின்றது. பல நாடுகளில் பிறமொழிக் கல்வி ஒரு ஆதிக்க சமூகத்தின் மொழியாக அமைகின்றது. அக் கல்வி முறை அவர்களின் ஆதிக்கமும் செல்வாக்கும் தொடரும் கட்டமைப்புக்களை வலுப்பெறச் செய்து, தாய்மொழிக் கல்விக்கும் பரவலான கல்விக்கும் எதிராகவும் அமைகின்றது.[10] கல்வியையும் அறிவையும் சமமான முறையில் அடித்தள மக்களிடம் கொண்டு செல்வதில் தாய்மொழி வழிக் கல்வி முக்கியம் பெறுகின்றது.[11]

தாய்மொழியில் கற்காத மாணவர்கள் கூடியளவு பள்ளியை விட்டு விலகுகிறார்கள் அல்லது கூடியளவு தொடக்க வகுப்புகளில் தோல்வி கான்கின்றார்கள்.[12] பல்வேறு நாடுகளில் பிறமொழியில் இருந்து தாய்மொழிக்கு கல்வி மாறும்போது பள்ளியில் இருந்து விலகுதல் குறைகின்றது, பள்ளியில் பயிலும் காலம் நீடிக்கிறது. பல்வேறு சமூகங்களின் கல்வி நிலையை மேம்படுத்த, தாய்மொழி வழிக் கல்வி ஒரு கருவியாக திறனாகப் பயன்படுத்தப்படுகின்றது.[13]

பல நாடுகளில் ஆங்கிலத்தில் அல்லது பிறமொழியில் கற்பிப்பதற்கு போதிய தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களைத் தயார்செய்வது சிக்கலானது, செலவானது.[[14] வளங்களை மிகையான பிறமொழிக் கல்வியில் செலுத்துவதால், மாணவர்கள் எந்த மொழியிலும் பூரண தேர்ச்சி பெறாத சூழ்நிலை பரவலாக உருவாகின்றது.

வயதுவந்தோர் அல்லது முதியோர் கற்றலுக்கு தாய்மொழிவழிக் கல்வியே முதன்மையான வழியாக அமைகின்றது. வளர்ந்துவரும் நாடுகளில் பரந்துபட்ட கல்வியறிவு (improve literacy) எட்டுவதற்கு வயந்துவந்தோருக்கான கல்வியை தாய்மொழியில் வழங்குதல் அவசியமாகின்றது.

 • மேம்பட்ட கல்விக்கான அணுக்கம் [15] [16][17]

மேம்பட்ட சிந்தனை ஆற்றல், படைப்பாக்கம்[தொகு]

தாய்மொழியில் அமையாத கல்வி cognetive வளர்ச்சியை பாதிக்கும் என்றும், மாணவர்களின் படைப்பாக்க, புத்தாக்க ஆற்றலைக் குறைக்கும் என்றும் கூறப்படுகின்றது.[18]

படைப்பாக்கம் தன் வெளிப்பாட்டுடனும், தன் வெளிப்பாடு தன் மதிப்பீடு, தன்மதிப்பு, தன் மெய்யாக்கத்துடனும் தொடர்புடையது.("Introduction Creativity as one of the most desired contemporary human qualities is closely related to self-expression, but self-expression to self-assessment, self-esteem, and further to self-actualisation") [19]

 • Improves internal educational efficiency
 • "children in multilingual education tend to develop better thinking skills compared to their monolingual peers (e.g., Bialystok, 2001; Cummins, 2000; King & Mackey, 2007)."

மொழியறிவு, இரண்டாம் மொழியைக் கற்க உதவுதல்[தொகு]

 • "can facilitate the acquisition of literacy skills"
 • இரண்டாம் மொழியைக் கற்பதற்கு உதவுதல் [[20]]
 • தாய்மொழிக் கல்வி பிற மொழிகளைக் கற்க உதவுகிறது [21]
 • "Mother Tongue education helps students to develop not only the Mother Tongue itself but also their skills in the majority education language "
 • "they gain a deeper understanding of language and how to use it effectively."
 • First language wires brain for later language-learning
 • "According to Butzkamm & Caldwell (2009, p. 66), the mother-tongue is the greatest

asset any human being to the tasks of foreign language learning, “It provides an indispensable Language Acquisition Support System”. Without the use of the mother-tongue, children’s potential is often wasted resulting in educational failure and a lack of development (Mackenzie & Walker, 2013)" [22]

சூழலுக்கு இயல்பான கல்வி[தொகு]

 • கல்வி பாடசாலைக்கு முன்னர் தொடங்குகின்றது.
 • பண்பாட்டுச் சூழல்
 • relational, socially situated, contextualized
 • அன்னியப்படுத்தும் கல்வியைத் தவிர்த்தல்
 • Glocalization,
 • " The stabilization of indigenous languages forms part of a broader movement to reestablish societies on a human scale and in balance with nature."[23]

சமூகத்தின் பல சிக்கல்கள் பெளதீக சமூகச் சூழல் (environmental and social context) சார்ந்தவை. மொழியியல், பண்பாட்டியல், சமூகவியல், மானிடவியல், தொல்பொருளியல், வரலாற்றியல், சட்டம், அரசறிவியல் போன்ற துறைகள் மட்டும் இன்றி மருத்துவம், தொழில்நுட்பம், அறிவியல் போன்ற துறைகளிலும் சூழமைவு முக்கிய பங்கை வகிக்கின்றது. எ.கா ஒருவர் நோய்வாய்ப்படுகிறார் என்றால், அவரின் நோயை மட்டும் நோக்குதல் போதுமானது இல்லை. அவர் என்ன மாதிரியான வறுமையில் வாழ்கிறார், அவரின் புறச் சூழல் என்ன மாதிரி அமைகிறது. அவர் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறாரா போன்ற கேள்விகள் அவரின் நோயின் மூலத்தை அறிய உதவுகின்றன. இவ்வாறான அக்கறையை, புரிதலை தாய்மொழியில் கல்வி பெறுவதன் ஊடாக கூடுதலாக, இலகுவாகப் பெறக்கூடியதாக அமைகின்றது.

நலப் பயன்கள்[தொகு]

 • தாய்மொழி அடிப்படையிலான பன்மொழிக் கல்வியின் நலப் பயன்கள்

உளவியல், ஆளுமை வளர்ச்சிக்கு உதவுதல்[தொகு]

தாய்மொழியைப் பேசத் தடுத்தல்.

 • பிறமொழிக் கல்வி "psychologically and culturally damaging."

"First, mother tongue has psychological value to the child. That is, it serves very important role in shaping the child's early perception because language and thought are highly interrelated." [24]

 • உள, மன வளர்ச்சி [25]
 • Personality development [26]
 • Identifty [27]
 • enhanced cognitive developmen
 • feeling of insufficiency
 • low self esteem and develop dislike toward his teachers and school.

[28]

மொழியும் உணர்வுகளும்[தொகு]

ஒருவரின் மொழிக்கும் உணர்வுகளுக்கும், எவ்வாறு ஒருவர் உணர்வுகள் தொடர்பாக சிந்திக்கின்றார் என்பதற்கும் நெருங்கிய உறவு உண்டு.[29]

நோய்த் தடுப்பு[தொகு]

 • 50% stroke
 • மறதிநோய்

சமூகப் பயன்கள்[தொகு]

"Second, mother tongue has socio cultural significance since it would help the member of the target group to express its common cultural familiarity and tendency" [30]

 • [cultural] relevancy
 • alienated from immediate community
 • difficult to relate and communicate
 • பண்பாட்டு அடையாளம்
 • மொழிப் வளர்ச்சி
 • உள, நல, பண்பாட்டு நன்மைகள் [31]
 • prevent language and cultural (knowledge) loss

மொழிவளர்ச்சியும் சமூகப் பொருளாதார வளர்ச்சியும்[தொகு]

ஒரு சமூகத்தின் வளர்ச்சி நிலைக்கும், அச் சமூகம் சார் மொழியின் வளர்ச்சி நிலைக்கும் ஒரு நேர்முக ஒட்டுறவு இருக்கின்றது. ஒரு சமூகம் தனது மொழியையும் பண்பாட்டையும் இழக்கும் போது, அச் சமூகம் பாரிய சமூக விலையைச் செலுத்துகின்றது. வறுமை கூடுகின்றது, மது மற்றும் போதைப் பயன்பாடும் அதிகரிக்கின்றது, நலம் குறைகின்றது, வன்முறையும் தற்கொலைகளும் அதிகரிக்கின்றன.[32] பாரிய காலனித்துவத் தாக்கத்துக்கு உள்ளாகி தமது மொழியையும் பண்பாட்டையும் தொலைத்த அமெரிக்கப் பழங்குடிமக்கள், ஆப்பிரிக்கச் சமூகங்கள் இதற்குச் சான்றாக அமைகின்றன. [33]

சமூக வளர்ச்சிக்கும் மொழி வளர்ச்சிக்கும் இருக்கும் தொடர்பைப் பற்றி அப்துல் கலாம் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "தொழில் புரட்சி முதல் அறிவியல் புரட்சி வரை எந்த மொழியினரால் நடத்தப்படுகிறதோ அந்த மொழியே ஆதிக்கம் பெறுகிறது. அவ்வாறு ஆதிக்கம் பெறும் மொழி வழக்கு மொழியாக மாறி, அது பின்னர் வாழ்வியல் மொழியாக மாறுகிறது." வாழ்வின் அனைத்து தேவைகளுக்கும் தாய்மொழியைப் பயன்படுத்த முடிந்தாலே மொழியும் சமூகமும் வளர்ச்சிபெற முடியும் என்று கூறுகிறார். [34] .

சமூக இணக்கப்பாட்டுக்கு, உள்வாங்கும் தன்மைக்கு[தொகு]

தாய்மொழியில் கல்வியை வழங்குதல் சமூக இணக்கப்பாட்டுக்கு உகந்த ஒரு கொள்கையாக பல நாடுகளால் பார்க்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக நெடுங்காலகாமாக அடக்கப்பட்ட நியூசிலாந்த மொரியோரி மக்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டும் முகமாக மாவோரி மொழி வழிக் கல்வியை கோரினார்கள்.[11] அழிவு நிலையில் இருந்த ஒரு மொழியையும் பண்பாட்டையும் மீட்டெடுக்க, பெரும்போக்குச் சமூகத்துடன் இணையாக நிற்க தாய்மொழிவழிக் கல்வியை ஒரு முக்கிய கருவியாகப் பார்க்கின்றனர்.[12]

பிலிப்பீன்சில் நெடுங்காலமாக காலனித்துவ மொழியான ஆங்கிலமும், வாட்டாரத்தில் செல்வாக்குப் பெற்ற மொழியான தகலாகு மொழியும் கல்வி மொழிகளாக இருந்தன. இந்த நிலை பிலிப்பீன்சில் இருந்த பல சிறுபான்மையின மக்களின் உரிமைகளைப் புறக்கணிப்பதாகவும், அவர்களின் கல்வி, பண்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்றதாகவும் இருக்கவில்லை. உள்வாங்கும் மனப்பான்மையுடன் பிலிப்பீன்சு அரசு தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட பன்மொழிக் கல்வியை 2013 இல் சட்டமாக்கி, அறிமுகப்படுத்தி, விரிவாக்கி வருகின்றது.[13] இன்று 19 மொழிகளில் இந்தக் கல்வி வழங்கப்படுகின்றது.[14]

தேசிய அல்லது பெரும்போக்கு மொழிகளில் மட்டும் கல்வியை வழங்குதல் சிறுபான்மை, பழங்குடி மக்களைப் பாதித்து சமூக இணைக்கப்பாட்டுக்கு எதிரான சூழ்நிலையை உருவாக்கும். மாற்றாக உள்வாங்கும் தன்மையுடன் சிறுபான்மை, பழங்குடி மக்களின் மொழிகளை மதித்து, வளர்த்துப் பயன்படுத்தும் அணுகுமுறை மேலானது என்று யுனெசுகோ, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புகள் எடுத்துகூறுகின்றன.[15]

அறிவுப் பரவலாக்கத்து உதவுதல்[தொகு]

ஒரு சமூகத்தின் மொழியில் அறிவியல் கருத்துருக்கள் கற்கப்படாவிட்டால், விளக்கப்படாவிட்டால், வளர்க்கப்படாவிட்டால் அச் சமூகம் பரந்த அறிவியல் அறிவைப் பெறுவதற்கு பெரும் தடையாக அமையும். சிறிய மேட்டுக்குடி அறிவியல் துறைகளைக் கட்டுப்படுத்த ஏதுவாக்கி, அறிவியல் பரவலாக்கத்துக்குத் தடையாக அமையும்.[16]

பொருளாதாரப் பயன்கள்[தொகு]

 • Local industries
 • translation industry
 • American text books
 • பண்பாட்டுப் பொருளாதாரம்

"In this paper it is argued that, in addition to the educational benefits, mother tongues have direct economic relevance." [35]

விமர்சனங்கள்[தொகு]

தாய்மொழிக் கல்வி நோக்கிய விமர்சனங்கள் [36][37]

தரமான கல்வி[தொகு]

பல்வேறு நாடுகளில் ஆங்கில அல்லது பிறமொழிப் பள்ளிகள் தாய்மொழிப் பள்ளிகளை விட கூடிய தரம் உடையனவாக அமைந்துள்ளன. வசதி படைத்தோர், செல்வாக்குப் பெற்றோர் இப் பள்ளிகளுக்கு தம் பிள்ளைகளை அனுப்புவதால், இந்தப் பள்ளிகள் தாய்மொழிப் பள்ளிகளை விட கூடிய வளங்களையும் ஆதரவினையும் பெற்று கூடிய தரமான கல்வியை வழங்குகின்றன. மேலும், இப் பள்ளிகள் கூடுதலாக அனைத்துலக கல்வி முறைகள், சீர்தரங்களைப் பின்பற்றுவதாலும் தரம் கூடுதலாக அமைகின்றது.

உயர் கல்வி, உயர் ஆய்வு[தொகு]

 • உயர்கல்வி இன்மை

சமூக அசைவாக்கம்[தொகு]

 • சமூக அசைவிற்கு தடையாக இருத்தல்
 • மேட்டுக்குடியினர் மட்டும் ஆங்கிலம், மற்றும் private schools
 • சாதியத் தடைகள் - சமசுகிருதம்
 • "delegate children who are educated in them to less than equal status within the State, making it impossible for them to compete on equal terms for opportunities with Ethiopians who are educated in well developed languages" [38]

பொருளாதார வாய்ப்புக்கள்[தொகு]

 • சந்தை இல்லாமை
 • கூடிய வாய்ப்புக்கள்

உலகமயமாதல், இலகு தொடர்பாடல்[தொகு]

 • உலக மொழியில் கற்பது தொடர்பாடலுக்கு கூடுதலாக உதவும்

தேசிய ஒற்றுமை[தொகு]

 • தாய்மொழி எதுவென்று தீர்மானிக்க முடியாமை
 • தாய்மொழிக் கல்வி தேசிய உணர்வு ஒற்றுமையைக் குலைத்தல்

தாய்மொழியில் கல்விக்கு இருக்கும் தடைகள்[தொகு]

 • those who have provilege and influence are able to allocate more resources to non mother tongue education

மொழி நீண்ட காலமாக பரவலான கல்விக்கு ஒரு பெருந்தடையாப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. கல்வி மொழியாக விழங்கிய சமசுகிருதம் ஒரு சிறிய குழுவினரிடம் மட்டுப்படுத்தப்பட்டு இருந்து.

காலனித்துவம்[தொகு]

பெரும்பாலான அமெரிக்க, ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் தாய்மொழியில் கல்விக்குத் தடையாக அந்தச் சமூகங்களில் காலனித்துவ வரலாறு, அரசியல், சட்டங்கள், கட்டமைப்புக்கள் விளங்குகின்றன. பல தென் அமெரிக்கச் சமூகங்கள் தங்கள் மொழிகளை முற்றிலும் இழந்த நிலையில், தாய்மொழியில் கல்வி சவாலுக்கு உரிய ஒன்றாக அமைகின்றது. பல ஆப்பிரிக்க நாடுகள் காலனித்துவ மொழிகளையே தமது கல்வி மொழிகளாகவும் ஆக்கிக் கொண்டன. காலனித்துவ அலுவர்களாக காலனித்துவ மொழியில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள், பலனடைந்தவர்கள் செல்வாக்ச் செலுத்தியமை காலனித்துவ மொழிகள் கல்வி மொழியாக ஆவற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும்.

தனியார்மயாக்கம்[தொகு]

சமூகச் சூழ்நிலை[தொகு]

இந்தியா போன்ற பல நாடுகளில் ஆங்கிலம் அல்லது பிறமொழி வழிக் கல்வி தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலையாக முன்வைக்கப்படுகின்றது. குறிப்பாக தனிநபர் சுதந்திரம் என்ற வாதம் ஊடாக

"பிறமொழியில் கல்வி கற்றலுக்கான உரிமையை தனிநபர் சுதந்திரமாக முன்நிறுத்தப்படுகின்றது. குறிப்பாக ஆங்கிலவழி நன்மைகள் பெற்ற ஒரு மேட்டுக்குடியினரால் இவ்வாறு முன்னிறுத்தப்படுகின்றது. இவர்கள் பரவலாக சமூக நீதி, கல்வி அணுக்கம், சமூகச் சூழ்நிலைகள் பற்றி சீரிய கவனித்தில் எடுப்பதில்லை. என்னச் சமூகச் சூழ்நிலைகளால் ஒருவர் பிறமொழிக் கல்விக்கு தள்ளப்படுகிறார் என்பது கவனித்தில் எடுக்கப்படுவதில்லை.'


தாய்மொழியில் கல்விக்கு சாதகமான கட்டமைப்புக்களை வளங்களை, சமூகச் சூழ்நிலையை ஒதுக்காமல் தாய்மொழிவழிக் கல்வியைக் குற்றம் சாட்டுவது.

 • தனிநபர் சுதந்திரம் அல்லது பிறமொழியில் கற்பதற்கான உரிமையை நிலைநாட்டுவோர், அனைத்து மக்களுக்குமான உரிமையை, சமத்துவம் மிக்க ஓர் கல்வியை பொருட்படுத்துவதில்லை. "In fact, autonomy language is often used to hide the workings of privilege and to mask the barriers of oppression."

அமெரிக்கமயமாக்கம்[தொகு]

 • ஆங்கிலமயமாக்கம்
 • homogeniutity

எல்லைகள்[தொகு]

 • எல்லைகள் (practicability, critical mass, demographic concentration, availability of corpus and status resources, etc.

கட்டமைப்புக்கள், வளங்கள்[தொகு]

 • பொதுக் கல்வித் துறையின் தரக் குறைவு

தாய்மொழிக் கல்வி வளர்ச்சி[தொகு]

 • பாடநூல்
 • பாடத்திட்டம்
 • கலைச்சொல்
 • பன்மொழிப் பயன்பாடு
 • immersion education
 • language nests
 • தாய்மொழிப் பள்ளிகள்
 • model schools
 • advocacy / policy
 • open courseware / translation


தாய்மொழியை அடிப்படையாக் கொண்ட பன்மொழிக் கல்வி (MTB-MLE)[தொகு]

 • MTB-MLE
 • பன்மொழிக் கல்வியில் தாய்மொழிக் கல்வி

மேற்கோள்கள்[தொகு]

 1. Angelina Kioko (16 January 2015). "Why schools should teach young learners in home language". britishcouncil.org. பார்த்த நாள் 29 நவம்பர் 2016.
 2. "Effects of Mother Tongue Education on Schooling and Child Labor Outcomes". Economics Department, University of Notre Dame (2014). பார்த்த நாள் 2012-07-19.
 3. Xabier Arzoz (2007). "The Nature of Language Rights". JEMIE 2. http://www.ecmi.de/fileadmin/downloads/publications/JEMIE/2007/2-2007-Arzoz.pdf. 
 4. Stephen Ma y and Nancy Hornberger (2008). "Human Rights and Language Policy in Education". Encyclopedia of Language and Education (2) 1. New York: Springer. 107-119. அணுகப்பட்டது 7 சூன் 2017. 
 5. Dr. Jessica Ball (2008). "Promoting children’s rights to use their mother tongue in early education". பார்த்த நாள் 7 சூன் 2017.
 6. "Minorities and Indigenous Peoples". Save the Children logo Right to Education Initiative. பார்த்த நாள் 7 சூன் 2017.
 7. "The Israeli education system described and compared with the Dutch system". Education system Israel (2017). பார்த்த நாள் 7 சூன் 2017.
 8. Laura Garbes. "Mother Tongue Based Education in the Philippines". culturalsurvival.org. பார்த்த நாள் 7 சூன் 2017.
 9. "Having Their Say: State of Mother-Tongue Based Education in Region". unescobkk.org. பார்த்த நாள் 7 சூன் 2017.
 10. Mebratu Mulatu Bachore (2015). "The Role of Mother Tongue Based Education in Ensuring the Quality of Classroom Instruction: Opportunities and Challenges". Journal of Education and Literature 1 (1): 3 1 - 38. http://www.rassweb.com/wp-content/uploads/PDF/JEL/Vol-1/Issue-1/Paper%204.pdf. 
 11. "Māori-medium education". New Zeland Ministry of Education (18 November 2015). பார்த்த நாள் 4 திசம்பர் 2015.
 12. Stephen May, Richard Hill (August 2012). "M ā ori-medium Education: Current Issues and Challenges". International Journal of Bilingual Education and Bilingualism. http://www.kns.ac.nz/files/6d9cf62d1d8e8824/file_set_file/0000/0533/Maori-medium%20education-%20current%20issues%20and%20challenges%20May%20&%20Hill%202005.pdf. 
 13. "Having Their Say: State of Mother-Tongue Based Education in Region". unescobkk.org (19 February 2015). பார்த்த நாள் 4 திசம்பர் 2015.
 14. "DepEd adds 7 more languages in mother tongue-based education". கல்வி அமைச்சு - பிலிப்பீன்சு (July 12, 2013). பார்த்த நாள் 4 திசம்பர் 2015.
 15. Mebratu Mulatu Bachore (2014). "The Role of Mother Tongue Based Education in Ensuring the Quality of Classroom Instruction: Opportunities and Challenges". Journal of Education and Literature Vol. 1 (No. 1): 3 1 - 38. http://www.rassweb.com/wp-content/uploads/PDF/JEL/Vol-1/Issue-1/Paper%204.pdf. 
 16. Dr. Muhammad Tariq Khan (2014). "Education in Mother Tongue - A Children’s Right". International Journal of Humanities and Management Sciences (IJHMS) Volume 2 (Issue 4): 148-154. http://www.isaet.org/images/extraimages/P1214011.pdf. 

உசாத்துணைகள்[தொகு]

 • First Language First

தாய்மொழி அல்லது முதல் மொழி என்பது ஒருவர் குழந்தைப் பருவத்தில் முதலில் கற்ற மொழி, வீட்டில் வழங்கிய மொழி. முறைப்படி கற்கவிட்டாலும், வீட்டு, சமூக, மொழிச் சூழலில் ஒருவருக்கு முக்கியமாக இருக்கக் கூடிய மொழியையும் தாய்மொழி என்பர்.