பயனர்:Mprahadeeswaran/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

[1]பழமொழிகளில் வேளாண் நுட்பங்கள்:

  1. அமாவாசையில் மழை பெய்தால் அரிசி விற்ற விலையில் நெல் விற்கும்.
  2. ஆடு பயிர் காட்டும்; ஆவாரை நெல் காட்டும்.
  3. ஆடு ஊடாடாக் காடு விளையாது.
  4. ஆடிப் பருத்தி தேடி விதை.
  5. ஆடி வாழை தேடி நடு.
  6. ஆடிப் பட்டம் தேடி விதை.
  7. ஆயிரம் கலம் நெல்லுக்கு ஓர் அந்து.
  8. ஆமணக்கும் பருத்தியும் அடர விதைத்தால் ஆகாது.
  9. ஆவணிக்காரில் பூசணிப் பூ.
  10. ஆவாரை இலையும் ஆபத்துக்கு உதவும்.
  11. ஆவும் தென்னையும் அஞ்சு வருஷத்தில் பலன் ஈயும்.
  12. ஆரை பற்றிய நஞ்சையும் அருகு பற்றிய புஞ்சையும் நலம்.
  13. இலைப் பழுப்பு ஆனாலும் குலப்பழுப்பு ஆகாது.
  14. இளைத்தவன் எள் விதைத்தான்; கொழுத்தவன் கொள் விதைத்தான்.
  15. இளைத்தவன் ஏழு வருடத்திற்கு எள் விதை.
  16. உடையவன் பார்வையில் பயிர் வளரும்.
  17. எட்டடி வாழை; பத்தடி பனை, பதினாறடி தென்னை.
  18. எட்டு எள்ளுக்கு சொட்டு எண்ணைய் எடுப்பான்.
  19. எப்பயிர் செய்யினும் நெற்பயிர் செய்.
  20. எள்ளும் கரும்பும் இறுக்கினால்தான் பலன் தரும்.
  21. எள்ளுக்கு ஏழு உழவு; கொள்ளுக்கு ஓர் உழவு.
  22. எள்ளும் கொள்ளும் எழுபது நாள்.
  23. எள்ளு விதைக்க எறங்காடு; கொள்ளு விதைக்க கல்லங்காடு.
  24. எருமணமில்லாப் பயிர் நறுமணமில்லாப் பூ.
  25. ஏழைக்கு வாழை.
  26. ஐப்பசி நெல் விதைத்தால் அவலுக்கும் ஆகாது.
  27. ஐப்பசி வெள்ளாமை அரை வெள்ளாமை.
  28. கத்திரிக்காய் விற்ற பெட்டி காசுப்பெட்டி; வெள்ளரிக்காய் விற்ற பெட்டி வெறும் பெட்டி.
  29. கம்புக்கு கால் உழவு.
  30. கல்லைப் பிளக்க காணத்தை விதை.
  31. கரும்பைக் கெடுக்கும் கரையான் பூச்சி.
  32. களர் நிலத்தில் கரும்பு வை.
  33. களர் முறிக்க வேப்பந்தழை.
  34. களரை ஒழிக்கக் காணம் விதை.
  35. களர் கெட பிரண்டை இரு.
  36. கார்த்திகை வித்து களங் கூடாது.
  37. காலத்தோடு களை எடு; நேரத்தோடு உரமிடு.
  38. கீரைக்கு புழு வேரில்.
  39. கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம்; குரங்குக்கு தேங்காய் கொண்டாட்டம்.
  40. கேட்காத கடனும் பார்க்காத பயிரும் பாழ்.
  41. சீனிக்கிழங்கு தின்கிற பன்றியை செவி அறுத்தாலும் விடாது.\
  42. சேம்புக்கு தண்ணீர் சோம்பாமல் இறை.
  43. சோளப் பயிரை மேய்ந்த மாட்டுக்குச் சொர்க்கலோகம் வேண்டுமா?
  44. சோம்பேறிக்குச் சோளம் வேளாண்மை.
  45. தென்னை செழித்தால் பண்ணை செழிக்கும்.
  46. தைக் குறுவை தவிட்டுக்கும் உதவாது.
  47. தை எள்ளு தரையிலே, மாசி எள்ளு மச்சிலே.
  48. நீர் பெருத்தால் நெல் சிறுக்கும்.
  49. பருவம் தப்பினால பனங்கிழங்கும் நாராகும்.
  50. பெண்ணுக்குப் பொன்னிட்டுப் பார், மரத்துக்கு நீரிட்டுப் பார்.
  1. பெ. வேல்சாமி, பழமொழிகளில் தாவரங்கள். 1992. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட். சென்னை. (ஐ.எஸ். பி.என். 81-234-0074-8)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mprahadeeswaran/மணல்தொட்டி&oldid=1921883" இலிருந்து மீள்விக்கப்பட்டது