பயனர்:Mosi754/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்த தெற்கு ஆசியா நாடு பல சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது.

அதிக மக்கள் தொகை[தொகு]

அதிக மக்கள் தொகையால் இந்தியா.பாதிப்படைகிறது. இந்திய மக்கள் தொகை கிட்டத்தட்ட 1.27 பில்லியன் அளவு ஆகும்.[1][2][3] இது மிகவும் அதிகமாக உள்ளது. இந்திய மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும் மக்கள் தொகை அடர்த்தியில் 33வது இடத்தில் உள்ளது . 1970ல் இந்திரா காந்தி இந்திய பிரதமராக இருந்தபோது ஒரு கட்டாய கருத்தடை திட்டத்தை செயல்படுத்தினார் ஆனால் திட்டம் தோல்வியடைந்தது. அதிகாரப்பூர்வமாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை கொண்ட ஆண்கள் கருத்தடைபட வேண்டும், ஆனால் திருமணம் ஆகாத பல இளைஞர்கள், அரசியல் எதிரிகள் மற்றும் அறியாமையிலிருந்த ஏழை ஆண்களுக்கும் இந்த திட்டத்தால் பாதிக்கபட்டார்கள் என்று நம்பப்பட்டது. இந்தியாவில் இந்த திட்டம் இன்றும் அனைவரின் நினைவில் இருக்கிறது மற்றும் அனைவறும் குடும்ப கட்டுபாட்டை வெறுப்பதற்கு காரணமாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த திட்டம் பல தசாப்தங்களாக அரசு திட்டங்கள் தடுத்தது.[4]

பொருளாதார பிரச்சினைகள்[தொகு]

வறுமை[தொகு]

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் சதவீதம்

இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு (ஏறத்தாள அமெரிக்காவின் முழு மக்கள் தொகை) வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளது மற்றும் இந்தியாவில் உலகின் மூன்றில் ஒரு பங்கு ஏழை மக்கள் வாழ்கின்றனர்.

உயர் வர்க்கம் சமீபத்திய சாதகமான பொருளாதார முன்னேற்றங்களால் பயன் அடைந்தாலும், இந்தியா கணிசமான வறுமையில் உள்ளது. 2005 தரவு அடிப்படையில் புதிய உலக வங்கியின் மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் 456 மில்லியன் மக்கள் புதிய சர்வதேச வறுமை கோட்டிற்கு (ஒரு நாளைக்கு $ 1.25) கீழே வாழ்கின்றனர். உலக வங்கி மேலும் ஒரு மதிப்பீட்டில் உலக ஏழைகள் 33% இந்தியாவில் தான் வசிக்கிறார்கள் என்று வெளியிட்டுள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள 828 மில்லியன் மக்களளில் 75.6 சதவீத மக்களின் ஒரு நாள் வருமானம் $2க்கும் கீழ் உள்ளது மற்றும் உப சகாரா ஆப்பிரிக்காவோடு ஒப்பிடுகையில் அங்கு 72.2% ஆகும்.[5][6][7][8]

இந்தியாவில் செல்வ விநியோகம் கரடுமுரடாக உள்ளது மற்றும் மேல்தர 10 சதவீத மக்களின் வருமானம் இந்தியாவின் 33% வருமானம் ஆகும்.[9] குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றம் இருப்பினும், நாட்டின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு அரசாங்கம் குறிப்பிட்ட வறுமை கோட்டிற்கும் (ஒரு நாளைக்கு $0.40) கீழ் உள்ளது. 2004-2005[10] காலத்தில் உத்தியோகபூர்வ புள்ளி நிலவரபடி 27.5% [11] இந்தியர்கள் தேசிய வறுமை கோட்டிற்கு கீழே வாழ்ந்து வருகின்றனர். அமைப்பு சாரா துறை தொழில் நிறுவனங்களுக்காக மாநிலத்தால் நடத்தப்பட்டு வரும் தேசிய ஆணையத்தின் (NCEUS) 2007 ஆண்டு அறிக்கைப்படி இந்தியர்களில் 25% அல்லது 236 மில்லியன் மக்கள், ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் [12] குறைவான பெற்று வாழ்வதாக கண்டறியப்பட்டது. இதில் பெரும்பாலான மக்கள் "முறைசாரா தொழிலாளர் துறையில் வேலை மற்றும் சமூக பாதுகாப்பு இல்லாமல் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்" [13]


துப்புரவும்[தொகு]

முறையான சுகாதாரம் இல்லாதது இந்தியாவின் ஒரு பெரிய விவகாரமாகும். 2008ஆம் ஆண்டு யுனிசெப்(UNICEF) நடத்திய ஆய்வின் புள்ளிவிவரங்கள் படி இந்திய மக்கள் தொகையில் வெறும் 31% முறையான சுகாதார வசதிகளை பயன்படுத்துகின்றனர்.[14] இந்தியாவில் ஒவ்வொரு பத்து இறப்புகளில் ஒன்று மோசமான சுகாதாரத்தினால் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு இருபது மரணங்களில் ஒன்று வயிற்றுப்போக்கு காரணமாக நடக்கிறது.[14] 2006 ஆம் ஆண்டில் சுமார் 450,000 மரணங்கள் வயிற்றுப்போக்கினால் நடந்தது.[14] அதில் 88% ஐந்து வயதுக்கு கீழே உள்ள குழந்தைகள் ஆகும். மோசமான சுகாதாரத்தினால் விளைவாகும் நோய்கள் குழைந்தகளின் வளர்ச்சியை பாதிக்கிறது என்று யுனிசெப்(UNICEF) ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[15]

முறையான சுகாதார வசதிகள் அணுகல் இல்லாமல் மக்கள் பொது அல்லது நதிகளில் கழிவகற்றுவதற்கு இன்னும் பெரும்பாலும் விட முடியாது. மலத்தின் ஒரு கிராம் 10 மில்லியன் வைரஸ்கள், ஒரு மில்லியன் பாக்டீரியாகள்,1000 ஒட்டுண்ணி நீர்க்கட்டிகள் மற்றும் 100 புழு முட்டைகள் கொண்டது.[16] இந்தியாவில் கங்கை நதியில் ஒவ்வொரு நிமிடமும் 1.1 மில்லியன் லிட்டர் கழிவுநீர் அகற்றப்படுகிறது.[16] மனித கழிவு மூலம் அதிக அளவில் மாசுபடும் ஆற்றினால் குறிப்பாக வைரஸ்களால் மிகவும் பாதிக்கப்படுகின்றன குழந்தைகளுக்கு காலரா போன்ற நோய்கள் எளிதில் பரவுகிறது மற்றும் அது மரணங்களில் முடிகிறது.[17]


போதுமான சுகாதார குறைபாட்டினால் நாட்டிற்கு பொருளாதார இழப்புகள் ஏற்படுகிறது. நீர் மற்றும் சுகாதார திட்டம் (WSP) இந்தியாவில் குறைவான சுகாதாரம் காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை(2010) ஆய்வு செய்த போது போதிய சுகாதாரம் இல்லாததால் 2006 ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவீதம் அளவிற்கு அதாவது அமெரிக்க $ 53,8 பில்லியன் (2.4 டிரில்லியன் ரூபாய் ) சமமான பொருளாதார இழப்புகள் ஏற்பட்டதாக காட்டியது.[18] கூடுதலாக,நகர்ப்புற பகுதிகளில் வாழும் குடும்பங்களில் மிக வறிய 20% அதிகமான தனிநபர் பொருளாதார தாக்கங்கள் ஏற்படுத்துகின்றனர்.[19]

முறையான சுகாதார முக்கியத்துவத்தை உணர்த்த இந்திய அரசு கிராமப்புறங்களில் அடிப்படை சுகாதார வசதிகள் மேம்படுத்தும் முயற்சியில் 1986 ஆம் ஆண்டு மத்திய ஊரக சுகாதார திட்டம் (CRSP) தொடங்கியது. இந்த திட்டம் பின்னர் புதுபிக்கப்ப ட்டு 1999 ல் மொத்த சுகாதாரம் பிரச்சாரம் (TSC) தொடங்கப்பட்டது. தனிநபர் வீட்டு கழிப்பிடங்கள் (IHHL), பள்ளி சுகாதாரம் மற்றும் சுகாதாரம் கல்வி (SSHE), சமூக சுகாதார வளாகம், அங்கன்வாடி கழிப்பறைகள் போன்ற திட்டங்கள் TSC கீழ் செயல்படுத்தப்பட்டது.[20]

டி.எஸ்.சி மூலம், இந்திய அரசு குறைந்த நகர்ப்புற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தொடர்ந்து சுகாதார வசதிகள் வழங்குவதற்கு மாறாக இந்த பகுதிகளில் வசதிகள் தேவையை தூண்ட எண்ணுகிறது. இந்த திட்டத்தில் சம்பந்தப்பட்ட மக்கள் உரிமை எடுத்து அவர்களது சுகாதார வசதிகளை பராமரிக்க மற்றும் அதே நேரத்தில்,இந்திய அரசு கடன்கள் மற்றும் செலவுகளை குறைக்கும்.இது இரண்டு பக்க உத்தியாகும். . இது அரசாங்கத்தை மற்ற வளர்ச்சிக்கு வளங்களை ஒதுக்க அனுமதிக்கும்.[21] இதனால், அரசாங்கம் 2017க்கு முன்பு அனைவருக்கும் கழிவறை வசதிகள் அமைக்க நோக்குகிறது.[22] இந்த குறிக்கோளை நிறைவேற்ற,கிராமப்புற மக்கள் தங்கள் சொந்த சுகாதார வசதிகள் அமைக்க முன் வருவதை ஊக்குவிக்க ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. கூடுதலாக, அரசாங்கம் அதன் மக்கள் மக்கள் தொடர்பு மற்றும் ஒருவருக்கொருவர் தொடர்பு நுட்பங்கள் மூலம் முறையான சுகாதாரத்தின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகளை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்ததுகிறது. இது ஒரு பெரிய பார்வையாளர்களை சென்றடைய அச்சு ஊடகங்கள் மூலமாகவும் பெரிய குழு விவாதங்கள் மூலமாகவும் தனிப்பட்ட தொடர்பு மூலம் மற்றும் விளையாட்டுகள் மூலமாகவும் செய்யப்படுகிறது.[23]

டறான்ச்பரன்சி இந்தியா 2005ஆம் ஆண்டு இந்திய மாநிலங்களில் கணக்கிட்ட ஊழல் நிலவரத்தின் தொகுப்பு (அடர்ந்த பகுதிகளில் ஊழல் அதிகமாக உள்ளன) [24]


ஊழல்[தொகு]

ஊழல் இந்தியாவில் பரவலாக உள்ளது. 179 நாடுகளில் இந்தியா சர்வதேச ஊழல் குறியீட்யின் படி 95 வது இடத்தில் உள்ளது. ஆனால் அதன் மதிப்பு 2002ஆம் ஆண்டில் 2.7இல் இருந்து 2011ஆம் ஆண்டு 3.1க்கு உயர்ந்துள்ளது.[25] வரலாற்று ரீதியாக, ஊழல் இந்திய அரசியல் மற்றும் அதிகாரத்துவத்தில் ஒரு பரவலான அம்சமாக பங்கு எடுத்து வருகிறது.[26]

இந்தியாவில் ஊழல் இலஞ்சம்,வரி ஏய்ப்பு,பரிமாற்றம் கட்டுப்பாடுகள், கையாடல் போன்ற வடிவத்தில் நடக்கிறது . 2005ஆம் ஆண்டில் Tranparency international India என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின் படி 50% மேற்பட்டவர்களுக்கு லஞ்சம் செலுத்துவது அல்லது ஒரு பொது அலுவலகத்தில் வேலை செய்ய செல்வாக்கை பயன்படுத்துவதில் முதல்நிலை அனுபவம் பெற்றிருக்கிறார்கள்.[24] ஊழலால் ஏற்படும் முக்கிய பொருளாதார விளைவுகளை கருவூலத்தின் இழப்பு,ஆரோக்கியமற்ற முதலீட்டு சூழ்நிலை மற்றும் அரசு மானிய சேவைகள் செலவு அதிகரிப்பு ஆகும். ஊழால் இந்தியாவின் கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் பற்றாக்குறை ஏற்படுகிறது.[27][28] TI இந்தியா ஆய்வு படி சுகாதாரம், நீதித்துறை,போலிஸ் மற்றும் கல்வி போன்று அரசு வழங்கும் 11 அடிப்படை சேவைகளில் 21, 068 கோடி ரூபாய்க்கு ஊழல் நடப்பதாக கணக்கிட்டுள்ளது.[24] சுலபமான வணிகம் செய்யும் அடிப்படையில் இந்தியா இன்னும், வளரும் நாடுகளில் கீழே உள்ளது.சீனா மற்றும் பிற சிறிய அளவில் வளர்ந்த ஆசிய நாடுகளுடன் ஒரு தொடக்க ஒப்புதல் பெறுவதற்கு அல்லது திவால் செயலாக்க எடுக்கும் சராசரி நேரத்தை இந்தியாவோடு ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது.[29]


கல்வி[தொகு]

முயற்சிகள்[தொகு]

இந்திய அரசியலமைப்பு சட்டம் 1949ல் முடிக்கப்பட்டதலிருந்து கல்வி இந்திய அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. முதல் கல்வி அமைச்சராக மவுலானா ஆசாத் இருந்தபோது முதன்மை மட்டத்தில் இலவச கல்வி வழங்க ஒரு அமைப்பு நிறுவப்பட்டது. முதன்மை கல்வி இலவசமாகப்பட்டது. மேலும் 6-14 வயது குழந்தைகளுக்கு கட்டாயம் ஆக்கப்பட்டது மற்றும் குழந்தை தொழில் தடை செய்யப்பட்டது. அரசாங்க கல்வி பெற சலுகைகளை அறிமுகப்படுத்தப்பட்டது - உதாரணமாக, பள்ளிகளில் மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பல ஒத்த முயற்சிகள் எதிரொலித்தன.அதில் சர்வ ஷிக்ஸா அபியன் முன்வைத்த "அனைவருக்கும் கல்வி" மிகப்பெரிய முயற்சி ஆகும். இந்த வரிசையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) 2004 ஆம் ஆண்டில் தேசிய குறைந்தபட்ச பொது திட்டம் (NCMP) மூலம் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3%மாக இருந்த தங்களது கல்வி செலவுகளை 6%மாக அதிகரிக்க இலக்கு வைத்தது. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் குழந்தைகளின் உரிமையாக 2009ல் விதிக்கப்பட்டது. இந்த முயற்சிகள் இருந்த போதிலும், கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருந்து வருகிறது.

கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி இடையே உள்ள தொடர்பு[தொகு]

கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி இடையே நேரடி தொடர்பு உள்ளது. இந்த தொடர்பு தியோடர் டபிள்யூ ஷூல்ட்ஸ் என்பவரால் வழங்கப்பட்டது.[30] இங்கு உழைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.[31]

பள்ளி வருமான அளவீடு[தொகு]

பள்ளி வருமான அளவீடு அளவிடப்படுகிறது:

 Y*= படிப்பறிவில்லாத மக்கள் ஊதியங்கள்
 Y = கல்வி பெற்ற மக் ஊதியங்கள்
 C = கல்விச்செலவு
 R = (Y - Y*) / (Y * + C)

அங்கு Y - Y* லாபமாக இருக்கிறது.

இது 1 ஆண்டுக்கு மட்டுமே

எனவே

Y - Y * / (Y * + C) x

அங்கு x என்பது ஆண்டுகளின் எண்

வளர்ந்த நாடுகளில் Y* வளரும் நாடுகளை விட அதிகமாககும். ஆனால் Y மற்றும் Y * வித்தியாசம் வளரும் நாடுகளில் அதிகமாக உள்ளது. எனவே வளரும் நாடுகளில் பள்ளி வருமான விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது. வளரும் நாடுகளில் மனித மூலதன முதலீடு திரும்ப பெறும் விகிதம் அதிகமாக உள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்கள் வருமானம் விகிதம் இடையே ஒரு வித்தியாசம் உள்ளது. வருமானத்தை ஒப்பிடுகையில் சிறுவர்களை விட பெண்களுக்கு மிகவும் குறைவாக உள்ளது. பையன்களுக்கு வட்டிவீதத்தை அதிகமாக உள்ளது.

இந்த கணித சூத்திரம் ப்சசரொபௌலுச்(Psacharopoulos)லால் வழங்கப்பட்டது. அவர் ஒரு கிரேக்கம் பொருளாதார வல்லுனர்.[32]

சிக்கல்கள்[தொகு]

பல பள்ளிகள் மோசமான உள்கட்டமைப்பு மற்றும் போதிய வசதிகள் இல்லாமல் கட்டப்பட்டது. குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகள் பாதிக்கப்பட்டது 2009ஆம் ஆண்டில் மாவட்ட கல்வி தகவல் அமைப்புபின் (DISE) படி இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகள் 51.5% பள்ளிகளில் மட்டுமே எல்லை சுவர்கள் உள்ளன ,16,65% பள்ளிகளில் கணினிகள் இருக்கிறது மற்றும் 39% பள்ளிகளில் மின்சாரம் உள்ளது இதில் 6,47% ஆரம்ப பள்ளிகள் மற்றும் 33.4% மேல் முதன்மை பள்ளிகளில் கணினி உள்ளது, 27,7% ஆரம்ப பள்ளிகளில் மட்டுமே மின்சாரம் உள்ளது.[33] தரம் இல்லாத பள்ளிகளில் படிப்பது உபயோகம் இல்லாத மோசமாக கல்வியை அளித்தது.


மேலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இல்லாத விகிதங்கள் அதிகமாக உள்ளது . கட்டாய கல்வி மற்றும் குழந்தை தொழிலாளர் தடை மீதான அரசாங்கத்தின் ஆணையை மீறி பல குழந்தைகள் இன்னும் வேலை செல்ல வகுப்புகளை இழக்கின்றனர். குழந்தைகள் பள்ளி செல்வதை தவிர்கும்போது அரசாங்கம் தலையிட வில்லை.

மேலும், லைப்ரரி ஒப் காங்கிரஸ் மத்திய ஆராய்ச்சி பிரிவு நாட்டின் ஆய்வுகள் வெளியீடுகளில் "ஆசிரியர் வராமலிருப்பதும் கற்பித்தல் பணிக்கு துணை ஒப்பந்தம் மூலம் வரும் தகுதி இல்லாத மாற்று ஆசிரியர்களும் அசாதாரணம் இல்லை " என்று கூறப்பட்டுள்ளது.[34] இது தகுதியற்ற ஆசிரியர்கள் பற்றாக்குறை பிரச்சினைகளை அதிகரிக்கிறது. தற்போது, மாணவர் ஆசிரியர் விகிதம் அதிகமாக 32ஆக உள்ளது.2006 ஆம் ஆண்டு இந்த விகிதம் 34ஆக இருந்தது. இது ஒரு பெரிய முன்னேற்றம் அல்ல.[35]

பொருளாதார மற்றும் சமூக வேற்றுமைகள் கல்வி முறையின் அடிப்படையை ஆட்டிப்படைத்தது. அதிக வாய்ப்பு செலவுகளால் கிராமப்புற குழந்தைகள் குறைவாகவே கல்வி பெற முடிகிறது மற்றும் குடும்ப வருமானத்திற்கு பங்களிக்க வேலை செய்கிறார்கள். 2009 கல்வி ஆண்டு நிலைமை படி, கிராமப்புற மாநிலங்களில் மாணவர்கள் சராசரி வருகை விகிதம் பற்றி 75% ஆகும். இந்த விகிதம் கணிசமாக வேறுபடுகிறது என்றாலும்,உத்தர பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் தங்கள் பள்ளிகளில் ஒரு எதிர்பாராத வருகையின் போது 40% மேற்பட்ட மாணவர்கள் வரவில்லை. நகர்ப்புற மாநிலங்களில்,பள்ளி வருகையின் போது 90% மாணவர்கள் பள்ளிகளில் இருந்தார்கள்.[36]

வன்முறை[தொகு]

மத வன்முறை[தொகு]

அரசியலமைப்பு படி இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு.[37] ஆனால் பெரிய அளவிலான வன்முறை சுதந்திரம் அடைந்த காலத்தில் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில், வகுப்புவாத பதட்டங்கள் மற்றும் மதம் சார்ந்த அரசியலில் முக்கிய வன்முறையாக மாறிவிட்டன.தொடர்பு இருப்பினும் இந்து மதமும் இந்துத்துவமும் வேறுபட்டவை. இந்து மதம் ஒரு மதம்.ஆனால் இந்துத்துவம் ஒரு அரசியல் சித்தாந்தம் ஆகும். இந்துத்துவ இயக்கத்தை பெரும்பாலான இந்துக்கள் பெரும்பான்மை ஆதரிக்கவில்லை. சில பொறுமையான அல்லது "மதச்சார்பற்ற" இந்துக்கள் இந்துத்துவ இயக்கத்தின் ஆதரவாளர்களை விவரிக்க "இந்து மதம் தலிபான்" என்ற வாக்கியத்தை பயன்படுத்துவார்கள்.[38] புகுஊக(Fukuoka) ஆசிய கலாச்சாரம் பரிசு பெற்ற இந்திய சமூகவியல் மற்றும் கலாச்சார மற்றும் அரசியல் விமர்சகர் ஆஷிஸ் நந்தி "இந்துத்துவா இந்து மதம் இறுதியில் இருக்கும்." வாதிட்டார்.[39]

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மார்ச் 1990பதிலிருந்து 250,000 முதல் 300,000 பண்டிதர்கள் இந்திய பிரிவினைக்கு பிறகு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் காரணமாக காஷ்மீரை விட்டு வெளியே குடிபெயர்ந்தனர்.[40]மதம் காரணமாக காஷ்மீரில் இருக்கும் காஷ்மீரி பண்டிட்கள் விகிதம் சில மதிப்பீடுகளின்படி 1947 இல் 15% இருந்து 0.1% குறைந்துள்ளது.[41] பல காஷ்மீரி பண்டிட்கள் வந்தமா(Wandhama) படுகொலை மற்றும் 2000 அமர்நாத் யாத்திரை படுகொலை போன்ற சம்பவங்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.[42][43][44][45][46]


சமீபத்திய ஆண்டுகளில் இந்து மதம் தேசியவாதிகள் இந்தியாவில் இருக்கும் கிரிஸ்துவர்கள் மீது நடத்தப்படும் வன்முறை தாக்குதல்கள் கூர்மையாக அதிகரித்து வருகிறது.[47] தேவாலயங்களில் கலவரம் நடத்துவது,கிரிஸ்துவர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றப்படுவது,அச்சுறுத்தும் இலக்கிய விநியோகம், பைபிளை எரிப்பது,அருட்சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்வது, கிரிஸ்துவர் குருக்கள் கொலை செய்யப்படுவது மற்றும் கிரிஸ்துவர் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்லறைகள் சேதப்படுத்துவது இந்த வன்முறை நடவைக்களில் அடங்கும்.[48][49] சங் பரிவார் மற்றும் தொடர்புடைய அமைப்புகள் வன்முறை மிஷினரிகள் மேற்கொள்ளப்பட்ட "கட்டாயமாக மாற்றும்" நடவடிக்கைகளுக்கு எதிரான "தன்னிச்சையான கோபம்" வெளிப்பாடு ஆகும்.[48][50][51] இது "அபத்தமானது" என்று அறிஞர்களால் நிராகரிக்கப்பட்டது.[48] 1964 மற்றும் 1996 க்கு இடையில் கிரிஸ்துவர்களுக்கு எதிராக முப்பத்தி எட்டு வன்முறை சம்பவங்கள் நடத்தப்பட்டதாக தகவல் உள்ளது.[52] 1997ல் இது போன்று இருபத்தி நான்கு சம்பவங்கள் நடந்தது. 2007 மற்றும் 2008 ல் ஒரிசாவில் பதட்டங்கள் அதிகரித்தன. முதலாவதாக.இந்துக்களால் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் நிலத்தில் கிறுஸ்துவர்கள் ஒரு பந்தல் போட்டது. இரண்டாவதாக ஜென்மாஷ்டமி பூஜையை பார்த்துக்கொண்டிருந்த போது ஒரு இந்து குரு மற்றும் அவரது நான்கு சீடர்கள் தூண்டுதல் இல்லாமல் கொலை செய்யப்பட்டது இதை தொடர்ந்து மத்திய பிரதேசத்தில்[53] 150 ஆண்டு பழமையான தேவாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது மற்றும் கர்நாடகாவில் தாக்குதல்கள் நடந்தன.[54]

பயங்கரவாதம்[தொகு]

நீண்ட கால பயங்கரவாத நடவடிக்கைகள் இன்றும் ஜம்மு காஷ்மீர், மத்திய இந்தியா (நக்சலிசம்) மற்றும் ஏழு சகோதரி மாநிலங்கள் (சுதந்திரம் மற்றும் சுயாட்சி இயக்கங்கள்) பகுதிகளில் உள்ளன. கடந்த காலத்தில் பஞ்சாப் கிளர்ச்சி இந்திய மாநிலமான பஞ்சாப் மற்றும் தேசிய தலைநகர் தில்லி (தில்லி தொடர் குண்டு வெடிப்பு,சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில்) போராளி நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தது. 2006 ஆம் ஆண்டு படி நாட்டின் 608 மாவட்டங்களில் குறைந்தது 232 மாவட்டங்களில் பல்வேறு கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத இயக்கங்கள் மூலம், மாறுபட்ட தாக்குதலுக்கும ஆளாகப்பட்டது.[55]


இந்தியாவில் பயங்கரவாதம் பெரும்பாலும் பாக்கிஸ்தானின் நிதியுதவியால் என்று குற்றம் சாற்றுகின்றனர். இந்தியாவில் பெரும்பாலான பயங்கரவாத செயல்களை நடந்த பின்னர், பல பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பாக்கிஸ்தானின் உளவு நிறுவனத்திற்கு அதில் பங்கு உண்டு என்று கூறினார். சமீபத்தில், அமெரிக்க மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் ஆப்கானிஸ்தானில் நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கு பாக்கிஸ்தானை குற்றம் சாட்டினர்.[56]


நக்சலிசம்[தொகு]

நக்சலைட் இயக்கம் இயங்கிவரும் மாவட்டங்களை காட்டும் வரைபடம்

இந்திய கம்யூனிச இயக்கத்திலிருந்து சீன சோவியத் பிரிவினால் வந்த ஒரு கம்யூனிச கூட்டத்திற்கு வழங்கப்படும் முறைசாரா பெயர் தான் நக்சலிசம். சித்தாந்தரீதியாக அவர்கள் பல்வேறு மஒஇச்ம் போக்குகள் சேர்ந்தவை. ஆரம்பத்தில் இயக்கத்தின் மையமாக மேற்கு வங்கம் இருந்தது. சமீபத்திய ஆண்டுகளில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) போன்ற நிலத்தடி குழுக்களின் நடவடிக்கைகள் மூலம் சட்டீஸ்கர் மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற கிராமப்புற மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் குறைந்த வளர்ச்சியடைந்த பகுதிகளில் நக்சலிசம் பரவி வருகின்றன.[57] சிபிஐ (மாவோயிஸ்ட்) மற்றும் சில மற்ற நக்சல் பிரிவுகளில் இந்திய அரசு மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநில அரசாங்கங்கள் பயங்கரவாதிகள் என்று கருதுகிறது. [58]

ஜாதி தொடர்பான வன்முறை[தொகு]

கேர்லங்கி படுகொலைகள் போன்று தலித்களுக்கு எதிராக பல வன்முறை சம்பவங்கள் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து தகவல் வருகின்றன. அதே நேரத்தில், 2006ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் தலித் மக்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் போன்று பல ஆர்பாட்டங்கள் நடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.[59] எம்ஐடி அமைப்புகள் விஞ்ஞானி வா ஷிவா அய்யாதுரை போன்று நிபுணர்கள் ஜாதி தொடர்பான வன்முறை இந்தியாவின் கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் ஆராய்ச்சி தடுப்பதாக குற்றம் சாட்டுகின்றனர், மேலும் பிற்போக்கு சமூக அமைப்பு நிலவும் போது முன்னேற்றம் கடினமாக இருக்கும்.[60]

"சமூக அல்லது கல்வியில் பின்தங்கியவர்களை அடையாளம்" [61]காண 1979 ஆம் ஆண்டு மண்டல் கமிஷன் நிறுவப்பட்டது மற்றும் சாதி பாகுபாடு நிவர்த்தி செய்யவும் ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீடுகள் தொடர்பான கேள்விகளை கருத்தில் எடுத்துக்கொள்ளவும் நிறுவப்பட்டது. 1980 ஆம் ஆண்டு கமிஷன் அறிக்கையில் குறைந்த சாதி மக்களுக்கு பொது பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசாங்க வேலை இடங்களில் ஒரு சில பகுதிகளுக்கு தனித்த அணுகலை வழங்கப்பட்டது. இது இந்திய சட்டத்தின் கீழ் கொண்டுவந்து உடனடி நடைவைக்கு கொண்டுவர உறுதிபடுத்தப்பட்டது. வி.பி. சிங் ஆட்சியில் 1989 ஆம் ஆண்டின் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை செயல்படுத்த முயன்ற போது, பெரும் போராட்டங்கள் நாட்டில் நடைபெற்றது. அரசியல்வாதிகள் முற்றிலும் தேர்தல் நோக்கங்களுக்காக சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு கொடுக்க முயற்சித்தனர் என்று பலர் கூறினர். .

1990 களில்,பகுஜன் சமாஜ் கட்சி(பி.எஸ்.பி.),சமாஜ்வாதி கட்சி மற்றும் ஜனதா தளம் பல கட்சிகள் அவர்கள் பின்தங்கிய சாதியினர் குறிப்பதாக கூற தொடங்கினார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பெரும்பாலும் தலித் மற்றும் முஸ்லிம் கூட்டுகளுக்கு ஆதரவு தந்த பல கட்சிகள் இந்திய மாநிலங்களில் அதிகாரத்தில் உயர்த்தன.[62] அதே நேரத்தில்,பல தலித் தலைவர்கள் மற்றும் அறிவுடையார்கள் பிற பிற்படுத்தப்பட்டோர்கள் தான் தலித்தை அமுக்கிகிறார்கள் என்று உணரத் தொடங்கினர் [63] மற்றும் இந்தியன் ஜஸ்டிஸ் கட்சி போன்று தங்களுக்குள் சொந்த கட்சிகள் உருவாக்கினர். மகாராஷ்டிரா காங்கிரஸ் அதன் அரசியல் வெற்றிக்கு ஓ.பி.சி. ஆதரவை சார்ந்திருந்தது.[62] பாரதிய ஜனதா கட்சி தங்கள் கட்சி ஒரு உயர் ஜாதி கட்சி அல்ல என்பதை நிரூபிக்க அவர்களின் தலித் மற்றும் ஓ.பி.சி. தலைவர்கள் காண்பித்தது. முன்னாள் பா.ஜ.க தலைவர் பங்காரு லட்சுமண்(2001-2002) ஒரு தலித். ஓ.பி.சி. சாதியை சேர்ந்த முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் சன்னியாசினி உமா பாரதி முன்னாள் பிஜேபி தலைவர் பதவியில் இருந்தார். 2006 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மனிதவள மேம்பாடு துறையின் அமைச்சராக இருந்த அர்ஜுன் சிங் ஓ.பி.சி இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திய போது அவர் சாதி அரசியல் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டார்.


References[தொகு]

 1. "Overpopulation in India". Serendip.brynmawr.edu. பார்த்த நாள் 2013-08-24.
 2. "Overpopulation in India and China". Web.archive.org (27 October 2009). மூல முகவரியிலிருந்து 2009-10-27 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 17 August 2013.
 3. "Over-population warning as India's billionth baby is born". The Guardian (London). 11 May 2000. http://www.guardian.co.uk/world/2000/may/11/population. பார்த்த நாள்: 23 May 2010. 
 4. "Manas: History and Politics, Indira Gandhi". Sscnet.ucla.edu. பார்த்த நாள் 17 August 2013.
 5. "One-third of world's poor in India: Survey". The Times Of India. 27 August 2008. http://articles.timesofindia.indiatimes.com/2008-08-27/india/27893090_1_poverty-rate-power-parity-decline. 
 6. "World Bank's new poverty norms find larger number of poor in India". The Hindu (Chennai, India). 28 August 2008. http://www.hindu.com/2008/08/28/stories/2008082856061300.htm. 
 7. "Opinion". The Times Of India. 30 August 2008. http://economictimes.indiatimes.com/Editorials/Define_poverty_anew/articleshow/3423435.cms. 
 8. Schifferes, Steve (27 August 2008). "World poverty 'more widespread'". BBC News. http://news.bbc.co.uk/2/hi/business/7583719.stm. பார்த்த நாள்: 23 May 2010. 
 9. "In Pictures – Middle Class, or Upper Class? ". India Together. Civil Society Information Exchange. August 2003
 10. Planning commission of India. Poverty estimates for 2004–2005
 11. This figure is extremely sensitive to the surveying methodology used. The Uniform Recall Period (URP) gives 27.5%. The Mixed Recall Period (MRP) gives a figure of 21.8%
 12. This figure has been variously reported as either "2 dollars per day" or "0.5 dollars per day". The former figure comes from the PPP conversion rate, whereas the latter comes from the market exchange rate. Also note that this figure does not contradict the NSS derived figure, which uses calorie consumption as the basis for its poverty line. It just uses a more inclusive poverty line
 13. Nearly 80 Percent of India Lives On Half Dollar A Day, Reuters, 10 August 2007, retrieved 15 August 2007
 14. 14.0 14.1 14.2 "India: Health Statistics". UNICEF Statistics. பார்த்த நாள் 13 September 2011.
 15. "10 Facts on Sanitation: 2". World Health Organization Fact Fille. பார்த்த நாள் 12 September 2011.
 16. 16.0 16.1 "10 Facts on Sanitation: 3". World Health Organization Fact File. பார்த்த நாள் 12 September 2011.
 17. "Enhanced Quality of Life through Sustained Sanitation". India Country Paper. Government of India. பார்த்த நாள் 12 September 2011.
 18. "The Economic Impacts of Inadequate Sanitation in India". Water and Sanitation Program Publications. பார்த்த நாள் 12 September 2011.
 19. "The Economic Impacts of Inadequate Sanitation in India". Water and Sanitation Program Publications. பார்த்த நாள் 12 September 2011.
 20. "Total Sanitation Campaign (TSC)". Ministry of Drinking Water and Sanitation Programmes. பார்த்த நாள் 12 September 2011.
 21. "Sanitation: A Long Way to Go". WaterAid: Inputs at SACOSAN. WaterAid. பார்த்த நாள் 12 September 2011.
 22. "Guidelines: Total Sanitation Campaign". Central Rural Sanitation Programme. பார்த்த நாள் 12 September 2011.
 23. "Techniques of IEC". Ministry of Drinking Water and Sanitation: TSC — Information. Education & Communication (IEC). பார்த்த நாள் 12 September 2011.
 24. 24.0 24.1 24.2 Centre for Media Studies (2005), India Corruption Study 2005: To Improve Governance Volume – I: Key Highlights (PDF), Transparency International India.
 25. Believe it or not! India is becoming less corrupt. CNN-IBN. 26 September 2007.
 26. Corruption in India
 27. "Innovation Demands Freedom". innovationdemandsfreedom.com (March 2013). பார்த்த நாள் 15 April 2013.
 28. "CSIR-TECH Path Forward" (19 October 2009). பார்த்த நாள் 15 April 2013.
 29. Economic Survey 2004–2005
 30. "Theodore W. Schultz". பார்த்த நாள் 29 July 2012.
 31. "returns to education".
 32. "Returns to Investment in Education" (PDF). பார்த்த நாள் 29 July 2012.
 33. Statistics from the District Information System for Education (DISE)
 34. Country Studies of India
 35. Statistics from the District Information System for Education (DISE)
 36. India Education Report 2009
 37. "Constitution of India as of 29 July 2008". The Constitution Of India. Ministry of Law & Justice. பார்த்த நாள் 13 April 2011.
 38. Fritz Blackwell (2004), India: A Global Studies Handbook, ABC-CLIO, p. 126, ISBN 978-1-57607-348-3
 39. Ashis Nandy (18 February 1991), Hinduism Versus Hindutva: The Inevitability Of A Confrontation, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, retrieved 10 November 2008
 40. Kashmiri Pandits in Nandimarg decide to leave Valley, Outlook, 30 March 2003, retrieved 30 November 2007
 41. Kashmir: The scarred and the beautiful. New York Review of Books, 1 May 2008, p. 14.
 42. 'I heard the cries of my mother and sisters', Rediff, 27 January 1998, retrieved 30 November 2007
 43. Migrant Pandits voted for end of terror in valley, The Tribune, 27 April 2004, retrieved 30 November 2007
 44. At least 58 dead in 2 attacks in Kashmir, CNN, 2 August 2000, retrieved 30 November 2007 Cite uses deprecated parameter |deadurl= (help) [தொடர்பிழந்த இணைப்பு]
 45. City shocked at killing of Kashmiri Pandits, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 25 March 2003, retrieved 30 November 2007
 46. Phil Reeves (25 March 2003), Islamic militants kill 24 Hindus in Kashmir massacre, The Independent, retrieved 30 November 2007
 47. Anti-Christian Violence on the Rise in India
 48. 48.0 48.1 48.2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; MANAS என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 49. Anti-Christian Violence on the Rise in India
 50. Low, Alaine M.; Brown, Judith M.; Frykenberg, Robert Eric (eds.) (2002), Christians, Cultural Interactions, and India's Religious Traditions, Grand Rapids, Mich: W.B. Eerdmans, p. 134, ISBN 0-7007-1601-7CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: extra text: authors list (link)
 51. Subba, Tanka Bahadur; Som, Sujit; Baral, K. C (eds.) (2005), Between Ethnography and Fiction: Verrier Elwin and the Tribal Question in India, New Delhi: Orient Longman, ISBN 81-250-2812-9CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: extra text: authors list (link)
 52. Ram Puniyani (2003), Communal Politics: Facts Versus Myths, SAGE, p. 167, ISBN 0-7619-9667-2
 53. "150-yr-old church set afire in Madhya Pradesh". The Times Of India. 20 September 2008. http://articles.timesofindia.indiatimes.com/2008-09-20/india/27918326_1_jabalpur-communal-harmony-christians. 
 54. "Protest in Delhi over violence against Christians — Thaindian News". Thaindian.com (26 September 2008). பார்த்த நாள் 17 August 2013.
 55. India Assessment – 2007
 56. "‘Pak the problem, not the solution’". Hindustan Times (16 September 2008). பார்த்த நாள் 17 August 2013.
 57. Ramakrishnan, Venkitesh (21 September 2005), The Naxalite Challenge, Frontline Magazine (தி இந்து), retrieved 15 March 2007
 58. Diwanji, A. K. (2 October 2003), Primer: Who are the Naxalites?, Rediff.com, retrieved 15 March 2007
 59. Ayyadurai, Shiva. "Resume V. A. Shiva Ayyadurai". Massachusetts Institute of Technology. http://web.mit.edu/vashiva/www/. பார்த்த நாள்: 8 August 2013. 
 60. "Scientist blames caste for India’s backwardness in research". Times of India. 25 July 2013. http://articles.timesofindia.indiatimes.com/2013-07-25/coimbatore/40792839_1_caste-system-inter-caste-marriages-indian-origin. பார்த்த நாள்: 8 August 2013. 
 61. Bhattacharya, Amit. Who are the OBCs?, archived from the original on 27 June 2006, retrieved 19 April 2006 Times of India, 8 April 2006.
 62. 62.0 62.1 Caste-Based Parties, Country Studies US, retrieved 12 December 2006
 63. Danny Yee, Book review of Caste, Society and Politics in India: From the Eighteenth Century to the Modern Age, retrieved 11 December 2006

வார்ப்புரு:Social issues in India

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mosi754/மணல்தொட்டி&oldid=2727409" இருந்து மீள்விக்கப்பட்டது