பயனர்:Mithra4321/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

                 புக்கிட் கோம்பாக் (Bukit Gombak)

      கோம்பாக் என்றும் புக்கிட் கோம்பாக் என்றும் அழைக்கப்படும் இப்பகுதி புக்கிட் பாத்தோக்கின் உள்ளே வரும் கிளைப் பகுதியாகும். இது தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் மத்திய-மேற்குப் பகுதியில் உள்ள ஒரு மலையின் அருகில் உள்ளது. மலாய் மொழியில், புக்கிட் என்றால் மலை என்று பொருள்; கோம்பாக் என்றால் ஏதாவது ஒரு கொத்து அல்லது சேகரிப்பு என்று பொருள் ஆகும். இதன் அருகமையில் இரண்டு மலைகள் உள்ளன. அவற்றில் ஒன்று 113மீ உயரத்திலும் மற்றொன்று 133மீ உயரத்திலும் உள்ளது. இந்த இரண்டு மலைகள் சிங்கப்பூரின் ஆகப் பெரிய மலையான புக்கித் தீமாவை அடுத்து வரும் இரண்டாவது, மூன்றாவது அதிக உயர்ந்த மலைகள் ஆகும்.
    கோம்பாக்கின் எல்லையானது புக்கிட் பாத்தோக் சாலை, மேற்கு அவென்யூ 5 வரையும் இதன் வடக்குப் பக்கம் புக்கிட் கோம்பாக் விளையாட்டு அரங்கமும் மேற்கில் நகரப் பூங்காவும் உள்ளன. மேலும், வடமேற்கு, வடப்பக்கம் நெடுகிலும் குடியிருப்புகள் ஆரம்பிக்கின்றன. இக்குடியிருப்புப் பகுதிகள் ஹில்வியூ அவென்யூ, அப்பர் புக்கித் தீமா சாலை, சோ சூ காங்க் சாலை வரையிலும் உள்ளன. இப்பகுதியில் உள்ள பெருவிரைவு இரயில் வண்டி புக்கிட் பாத்தோக் மேற்கு அவென்யூ 5 மற்றும் கிழக்கு அவென்யூ 5யில் உள்ள வீடமைப்பு வாரிய அடுக்குமாடி வீடுகள், கிழக்கே மலைகள் உட்பட சேர்த்துள்ள இரயில் நிலையம் புக்கிட் கோம்பாக் இரயில் நிலையமாகச் செயல்படுகிறது. எஸ்.எம்.ஆர்.டி. பேருந்து சேவை 945 புக்கிட் பாதோக்கிலிருந்து இப்பகுதியின் உட்புறங்களுக்குப் பயணிக்க உதவுகிறது.
  அண்டைப் பகுதிகள்
      புக்கட் கோம்பாக்கின் அண்டைப் பகுதிகளாகக் கியட்டின் ஹாங், தெக் வாய், பிரிக்‌வொர்க்ஸ், புக்கிட் பாஞ்சாங் குய்லின், ஹில்வியூ பால் பண்ணை ஆகியவை உள்ளன.
இடங்கள்
சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சின் தலைமையகம் இங்குள்ளது. மேலும், இங்கு 3000 பேர் அமரும் விளையாட்டு அரங்கமும் உள்ளது. கிரேஸ் அஸ்ம்பிளி என்று ஒரு தேவாலயம் உள்ளது. புக்கிட் பாத்தோக் நகரப் பூங்கா, ஏரி லிட்டில் குய்லின் (சீன: 小 桂林; பின்யின்: Xiǎo குய்லின்) ஆகியவை இயற்கையை ஒத்த காட்சிகளைக் கொண்டுள்ளன. ஆனால், பரப்பளவு அதிகம் உள்ள பகுதி இப்பகுதியாகும். இது திருமணப் புகைப்படங்கள் எடுக்கப் பிரபலமான இடமாக உள்ளது.
தொடக்கப்பள்ளிகள்
லியான்ஹுவா தொடக்கப்பள்ளி
செயின்ட் அந்தோணி தொடக்கப்பள்ளி
உயர்நிலைப்பள்ளிகள்
ஹில்குரோவ் உயர்நிலைப்பள்ளி
சுவிஸ் காட்டேஜ் உயர்நிலைப்பள்ளி
தனியார் குடியிருப்புகள்
   குய்லின் காண்டோமினியம், "மெடீரா" காண்டோமினியம் ஆகியவை புக்கிட் கோம்பாக் ரயில் நிலையத்தின் அருகே அமைந்துள்ளன. 
மித்ரா பாலமுருகன் (2E1)
யூனிட்டி உயர்நிலைப்பள்ளி
Mithra Balamurugan (2E1)
Unity Secondary School
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mithra4321/மணல்தொட்டி&oldid=2251134" இலிருந்து மீள்விக்கப்பட்டது