பயனர்:M Raja ram Pandian/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராமானுஜம் (மனநல மருத்துவர்)[தொகு]

படிமம்:Dr ramanujam
ராமானுஷம், மனநல மருத்துவர்

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் மனநல மருத்துவராகப் பணிபுரிகிறார். மருத்துவம் மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் ஈடுபாடு மிக்கவர். இயற்கை உணவுப் பிரியர். பழந்தமிழ் இலக்கியத்திலும் சமகால இலக்கியத்திலும் திளைப்பவர். இசைக் கலைஞர். பாடகர். மன வெளிப் பயணம் என்கிற தன் வலைப்பூவில் தொடர்ந்து எழுதிவருகிறார். தவிர, புதிய ஆசிரியன், செம்மலர், Bank Worker's Unity, தி இந்து (தமிழ்) உள்ளிட்டவற்றில் எழுதியிருக்கிறார். சமீபத்தில் வெளியான இவரது 'நோயர் விருப்பம்' வாசக வெளியில் சக்கைபோடு போடுகிறது.

நோயர் விருப்பம்[தொகு]

படிமம்:Book2 2303290f
நோயர் விருப்பம் (அட்டைப்படம்)

ஒரு நோயாளியாக இருந்து டாக்டரைப் பார்த்திருக்கும் நமக்கு டாக்டராக இருந்து நோயாளிகளைப் பார்த்த கோணத்தை நோயர் விருப்பம் நூலில் நகைச்சுவையாக, மனம் நோகாமல் சித்தரித்திருக்கிறார் ராமானுஜம். படிக்கும்போது மட்டுமல்ல தொழில் செய்யும்போதும் டாக்டர்களுக்கு இருக்க வேண்டிய நினைவாற்றல், மருத்துவத்தில் புகுந்து விளையாடும் மர்ஃபியின் விதிகள், டாக்டர்களின் பிரசித்தி பெற்ற கையெழுத்து, எண்களாலும் வேறு குறியீடுகளாலும் நாம் அழைக்கப்படும்போது சுயம் அழிவதையும், தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை வழங்குவதில் உள்ள சிக்கல்களையும் நோயாளியைப் பார்க்க வருகிறவர்கள் செய்கிற அலப்பறையையும் அச்சுஅசலாக வடித்திருக்கிறார்.

பின்னிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:M_Raja_ram_Pandian/மணல்தொட்டி&oldid=1927865" இலிருந்து மீள்விக்கப்பட்டது