பயனர்:Jataayu1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜடாயு
பிறப்புசங்கரநாராயணன்
1971
திருநெல்வேலி,தமிழ்நாடு,இந்தியா
இருப்பிடம்பெங்களுர்
தேசியம்இந்தியா
பணிஎழுத்தாளர்,பொறியாளர் -கணினி சில்லுகள் வடிவமைப்பு
பிள்ளைகள்2

ஜடாயு(பிறப்பு 1971) ஒரு இந்திய எழுத்தாளர். இவரது இயற்பெயர் சங்கரநாராயணன். இவரது படைப்புகளம் ஆங்கிலத்திலும்[1] பெரும்பான்மை தமிழிலும் [2]இந்து மதம், கலாசாரம், இலக்கியம், சமகால சமூக அரசியல் போக்குகள் என விரிந்து கிடக்கிறது. இணையத்தில் [3]தொடர்ந்து எழுதியும், விவாதித்தும் வருபவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

1972ம் ஆண்டு பிறந்த ஜடாயு, திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டவர். சென்னையில் மின்னணு மற்றும் தொலைதொடர்புப் பொறியியல் (B.E, Electronics & Communication Engg.) பயின்றார். தற்போது பெங்களூரு நகரில் கணினி, செல்போன் உள்ளிட்ட பல மின்னணு சாதனங்களில் பயன்படும் சில்லுகளை வடிவமைக்கும் (Chip Design) தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகிறார்.

படைப்புகளம்[தொகு]

ஜடாயு இணையத்தில் தொடர்ந்து எழுதியும், விவாதித்தும் வருபவர். திண்ணை.காம்[4], தமிழ்ஹிந்து.காம் மற்றும் பல இணைய தளங்களில் பல கட்டுரைகளை எழுதி வருகிறார். தமிழ்ஹிந்து இணையதளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர். மரபிலக்கியம், நவீனத் தமிழிலக்கியம், சம்ஸ்கிருதம், இந்து தத்துவங்கள், சமயம், வரலாறு தொடர்பான விஷயங்களில் கட்டுரைகளையும் ஆக்கங்களையும் அளித்து வருகிறார் .

செவ்விலக்கிய ஈடுபாடு[தொகு]

ஜடாயு சமஸ்க்ருதம்,தமிழ் செவிலக்கியங்களில் பெரும் கல்வியும்,ஈடுபாடும் உடையவர். பலவருடங்களாக குறிப்பாக கம்ப ராமாயணத்தில் மிகுந்த பற்றுகொண்டவர் 2000ங்களின் தொடக்கமாய் பலவருடங்களாக நவீன மற்றும் கம்பராமயண இலக்கிய சுவைபரப்பும் குழுவை நடத்துகிறார். கம்பராமாயண சொற்பொழிவுகளை தொடர்ச்சியாக குழுவின் வாசிப்பு கூட்டங்களின் மூலமாகவும் இணையம்(யூடுயுப்) மூலமாகவும் பயிலரங்குகளின் மூலமாகவும் சிறப்பு ஆர்வமூட்டும் வாசிப்பு, விரிவுரை மற்றும் கம்பனை பயில 66 பாடல்களை மட்டும் கொண்ட பயிலக அரிசுவடி ஏடு மூலமாகவும் ஒர் கம்பராமாயண வாசிப்பு அறிமுக பணிகளை செய்கிறார்.

ஒலிவடிவில் பாரதியின் கீதையினை வாசித்து இலவசமாக இணையத்தில் தரவிறக்கும் வகையில் படைத்துள்ளார் . இவ் ஒலிப்புத்தகம் பாரதியின் கீதை வியாசரின் படைப்போடு எப்படி ஒத்துள்ளது என்பதையும் ஒரு மேடைவாசிப்பிற்க்கும் பயிலக நாடக பாணி (ஏற்ற இறக்க) வாசிப்பிற்க்கும் ஏற்ற வடிவில் பாரதியால் எப்படி ஒத்து செய்யப்பட்டுள்ளது என்பது உணர்த்தும் வகையில் ஒலிவடிவ வாசிப்பு நன்கு செய்யப்பட்டுள்ளது.

படைப்புகள்(நூல்கள்)[தொகு]

வருடம் தலைப்பு நூல் வெளியிட்டாளர்/ பதிப்பாளர் ISBN
2009 பண்பாட்டைப் பேசுதல் தமிழ்ஹிந்து வெளியீடு (தொகுப்பில் இவரது பல கட்டுரைகள் உள்ளன).
2010 சாதிகள் ஒரு புதிய கண்ணோட்டம்(இணையாசிரியர் அரவிந்த நீலகண்டன்) தமிழ்ஹிந்து வெளியீடு 9788191050912
2015 கம்பராமாயணம் 66 இலவச மின் புத்தகம் -கம்ப ராமாயணத்திற்கான முதல் ஏடு
2015 காலம்தோறும் நரசிங்கம் (பண்பாட்டு கட்டுரைகளின் தொகுதி) தடம் பதிப்பகம் வெளியீடு

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

தொடர்புள்ள பக்கங்கள்[தொகு]

அரவிந்த நீலகண்டன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jataayu1&oldid=2521406" இலிருந்து மீள்விக்கப்பட்டது