பயனர்:Jagadeeswarann99/விஷ்ணுராம் (ஓவியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஷ்ணு ராம் என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரையைப் சேர்ந்தவர்.[1] இவர் கோட்டோவியங்கள், கணினி ஓவியங்கள் வரைகிறார்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில், தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம் போன்ற கோயில்களையும், சோழர்கால சிற்பங்களையும் வரைந்துள்ளார். [1]

இவர் பள்ளிப் படிப்பை மதுரை ஆயிர வைசிய பள்ளியிலும், காமதேனு கலை அறிவியல் கல்லூரியிலும் படித்தார். இவர் பல்லவர், சோழர், பாண்டியர் கால மக்களின் ஆடைகள், ஆபரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.[1]

இவர் பாண்டிய மன்னர்களான ஜடாவர்ம சுந்தரபாண்டியன், சோழன் தலை கொண்ட வீரபாண்டியன் பல பாண்டிய மன்னர்களுக்கு ஓவியம் மூலம் உருவம் கொடுத்துள்ளார். [1] பாண்டியன மன்னர்களின் ஓவியங்களை கால வரிசைப்படி வெளியிடும் பணி செய்துகொண்டுள்ளார்.

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 [இயல்பின் கம்பீரம் - இந்து தமிழ் திசை தீபாவளி மலர் பக்கம் 100]

வெளி இணைப்புகள்[தொகு]