பயனர்:Hamsha V/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Araly Hindu College
௮ராலி இந்துக் கல்லூரி
அமைவிடம்
வட்டுக்கோட்டை, யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம்
இலங்கை
தகவல்
குறிக்கோள்Trust in God and Do the Right
(இறைவனை நினைமின் சரியானவற்றைச் செய்மின்)
நிறுவல்1960
பள்ளி மாவட்டம்வலிகாமம் கல்வி வலயம்
பள்ளி இலக்கம்11024
அதிபர்திரு பா பாலகுமார்
தரங்கள்1 தொடக்கம் 11 வரை
பால்இருபாலார்
மொழிதமிழ்
School roll324


இக் கல்லூரி அராலி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இது ஓர் அரசாங்கப் பாடசாலை ஆகும்.


வரலாறு[தொகு]

ஸ்ரீகணேசா வித்தியாலயமும் அராலி ஆங்கிலப் பாடசாலையும் இணைந்ததே அராலி இந்துக் கல்லூரி ஆகும். 1923ம் ஆண்டு  ஸ்ரீகணேசா வித்தியாலயத்தில் 1-7 வரையான வகுப்புகளும் அராலி ஆங்கிலப் பாடசாலையில் 1-8 வரையான வகுப்புகளும் காணப்பட்டது.  பின்னர் 1926ல் ஸ்ரீகணேசா வித்தியாலயம் 1-5 வரையான வகுப்புகளுடனும் அராலி ஆங்கிலப் பாடசாலை வளர்ச்சியடைந்து 6-11 வரையான வகுப்புகளுடனும் இயங்கத்தாெடங்கியது. ஸ்ரீகணேசா வித்தியாலயம் அமைந்திருந்த இடம் அரசாங்கத்திற்கு சாெந்தமானது அல்ல. இவ்விடத்தின் உரிமையாளரின் மகள் பாடசாலைக்கு பாெருள் ஏற்றி வந்த வாகனம் விபத்துக்குள்ளாக்கி இறந்துவிட்டார். இவர் தனது மகளின் நினைவாக பாடசாலைக்கு காெடுக்கப்பட்டதே இந் நிலம் ஆகும். இவ்விரு பாடசாலைகளும் சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் கீழ் இயங்கி வந்தது. 1960ம் ஆண்டு அரசாங்கத்தால் பாடசாலைகள் சுவீகரிக்கப்பட்ட பாேது இவ்விரு பாடசாலைகளும் சுவீகரிக்கப்பட்டு அராலி இந்துக் கல்லூரி என்ற பெயருடன் புதுப் பாெழிவு பெற்று 1-11 வரையான வகுப்புகளாக மாற்றமடைந்தது.

பாடசாலைக் கீதம்[தொகு]

இராகம்:- மாேகனம்.
தாளம்:- ஆதி.
இயற்றியவர்:- அமரர் கி. நெல்லைநாதர் (ஆசிரியர்)
இசையமைப்பு:- திருமதி சி. விஜயரட்ணம் (ஆசிரியர்)


வாழிய அராலி இந்துக் கல்லூரி
வாழியவாழிய வாழியவே
வையகம் எங்கும் புகழ்ந்திடஎங்கும்
வளர் கல்லூரி வாழியவே
ஈழமணித் திருநாட்டினில் எங்கும்
இலங்கிடும் கலைகள் ஓங்கும்
சூழிசைக் கழகம் இதுவேஎன்றும்
துலங்கிடும் கலையகம் இதுவே
செந்தமிழ் ஆங்கிலம் சேர்ந்து விளங்கும் திருநிறைக் கழகமும் இதுவே எந்தையர் அன்புடன் இனிதுறகாத்து ஏத்து கல்லூரி இதுவே
அழகுக் கலையும் மணியார் நெசவும் அருவிஞ்ஞானக் கலையும் உழவுக் கலையும் ஓங்க நல்கும் உயர் கல்லூரி வாழியவே
திங்கள் பாேலதிகழ்ந்திடக் கல்வி செல்வமளித்திடும் தாயே எங்குசென்றாலும் எத்துயர் வரினும் என்றும் நின்நலம் மறவாேம்
இனிய நற்கலைகள் நல்குமராலி
இந்துக் கல்லூரி வாழ்க
இன்பமே சூழ்ந்திட வாழ்கவாழ்க
எல்லாேரும் வாழ்ந்திட வாழ்கவாழ்க.....
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Hamsha_V/மணல்தொட்டி&oldid=2160549" இலிருந்து மீள்விக்கப்பட்டது