உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Fathima Roja J/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பசுமை வணிகம்(Green Business) என்பது இன்றைய உலகில் வேகமாக வளரும் தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் மனித வாழ்க்கை எளிதாகி வருகிறது. ஆனால் இதன் விளைவாக சுற்றுச்சூழல் பாதிப்பு, காற்றுமாசு, நீர் மாசு, காலநிலை மாற்றம் போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன . இந்நிலையிலிருந்து வெளிக்கொணர்வதற்கான முக்கியமான வழிகளில் ஒன்று "பசுமை வணிகம்".[1]

பசுமை வணிகம் என்பது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் இயங்கும் வணிகம் ஆகும். அதாவது உற்பத்தி, விநியோகம், பயன்பாடு போன்ற அனைத்து நிலைகளிலும் இயற்கைக்கு ஆதரவாக செயல்படுவது இதன் நோக்கம். இதனை "சுற்றுச்சூழல் நட்பு வணிகம் ". என்றும் அழைக்கலாம்.

  • இயற்கை வளங்களை வீணாக்காமல் பயன்படுத்துவது
  • மறுசுழற்சி மற்றும் மீள்பயன்பாடு ஊக்குவிப்பது
  • கார்பன் வெளியீட்டைக் குறைப்பது
  • சுத்தமான , சுறுசுறுப்பான பசுமையான தொழில் சூழலை உருவாக்குதல்[2]

அமெரிக்கா, ஜெர்மனி , ஜப்பான் இந்தியா போன்ற நாடுகள் பசுமை  வணிகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.இந்தியாவில் சூரிய ஆற்றல் மிஷன்மற்றும் இந்தியா இயக்கம் (Green India Mission) போன்ற திட்டங்கள் நடைமுறையில் உள்ளது

இன்றைய  இளைஞர்கள் பசுமை வணிகத்தில் ஈடுபட்டால் , எதிர்காலத்தில் நமது பூமி மேலும் பசுமையாக மாறும். அதனால் நாமும் பசுமையைப் பேணும் வணிகத்தைத் தேர்ந்தெடுத்து "பசுமை பூமி  நலமான வாழ்க்கை" என்ற இலக்கை  அடைய வேண்டும்.

மேற்கோள்கள்

  1. "What is Considered a Green Business? - Greenly". greenly.earth (in ஆங்கிலம்). Retrieved 2025-12-20.
  2. "Green Business Ideas to Consider". Business News Daily (in ஆங்கிலம்). Retrieved 2025-12-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Fathima_Roja_J/மணல்தொட்டி&oldid=4431482" இலிருந்து மீள்விக்கப்பட்டது