பயனர்:Dhivyat raj

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. வி. எல் பவானி குமாரி

  கே. வி. எல் பவானி குமாரி,  ஆந்திர பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த பளுதூக்கும் போட்டியாளர்.  2020ஆம் ஆண்டு தாஷ்கண்ட், உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஆசியன் யூத் மற்றும் ஜூனியர் பளு தூக்கும் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களையும், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ கோடைகால ஒலிம்பிக்கில் தனக்கான இடத்தையும் பிடித்தார்.(1)

 

   பீகாரின் புத்தகயாவில் நடைபெற்ற 15வது இளைஞர் (துணை ஜூனியர் சிறுவர் மற்றும் பெண்கள்), 56வது ஆண்கள் மற்றும் 32வது பெண்கள் (ஜூனியர்) தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2019ல், இளைஞர் மற்றும் ஜூனியர் பிரிவுகளில் சிறந்த பளுதூக்குபவருக்கான விருதுகளை வென்றுள்ளார். அந்தப் போட்டியில் அவர் இளைஞர் பிரிவில் இரு தேசிய சாதனைகளை பெற்றுள்ளார்.(2)


தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணி


  பவானி குமாரி, மார்ச் 5, 2003 அன்று விசாகப்பட்டினம் மாவட்டத்தின் ஜி கோத்தப்பள்ளி கிராமத்தில், ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்ட சூழ்நிலையிலும் அவரது குடும்பத்தினர் பவானிக்கு முழு ஆதரவையும் கொடுத்து , அவரை விளையாட்டு துறையில் தொடர வேண்டும் என விரும்பினர். 2011ல் பவானியின் எட்டாவது வயதில் அவரது பெற்றோர் , ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கானா விளையாட்டு அகாடமியில் பவானியை சேர்த்தனர். தொடக்கத்தில், டி சீனிவாசன் என்பவரின் வழிகாட்டுதலை பெற, அவர் விளையாட்டில் ஆர்வத்தை உருவாக்க உதவினார். அதன்பின், பி மணிக்யல் ராவ், பவானியின் பயிற்சியாளராக பொறுப்பை ஏற்று இன்று வரை தொடர்கிறார்.(3)


   தெலுங்கானா ஸ்போர்ட்ஸ் அகாடமியில் தன்னை சேர்க்க பெற்றோர் எடுத்த முடிவு அவரது விளையாட்டு வாழ்க்கையை வடிவமைக்க உதவியதாகவும், தன் வெற்றிக்கு பெரும் பங்கு அகாடமியை சாரும் என்றும் பவானி தெரிவித்துள்ளார்.

தனது பயிற்சியை தொடங்க வேண்டும் என்பதற்காக அகாடமி விடுமுறை நாட்களில் ஊருக்கு செல்வதை தவிர்த்து , அருகில் வேறு தங்கும் இடங்களை கண்டறிந்து தங்கினார். (3)


  விளையாட்டு சாதனைகள்


   2019 விளையாட்டின் ஆரம்பமாக, பீகாரில் உள்ள புத்தகயாவில் நடைபெற்ற 15வது இளைஞர் (துணை ஜூனியர் சிறுவர் மற்றும் பெண்கள்),  56வது ஆண்கள் மற்றும் 32வது பெண்கள் (ஜூனியர்) தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் சிறந்த பளுதூக்குபவருக்கான விருது அமைந்தது. இளைஞர் பிரிவில் அவர் இரு புதிய பதிவுகளையும் அமைத்தார்.(2)


2020 உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடந்த ஆசிய இளைஞர் மற்றும் ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் சர்வதேச போட்டியில்,  இளைஞர் பெண்கள் மற்றும் ஜூனியர் பெண்கள் பிரிவுகளில் வெள்ளி பதக்கங்களை வென்றார்.(1)

  2021 டோக்கியோ கோடைகால ஒலிம்பிக்கில் தாஷ்கண்டில் தனது செயல் திறன் மூலம் இடம் வகித்த குமாரி, தற்போது ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே குறிக்கோளாக வைத்துள்ளார்.(3)


குறிப்பு

 

https://www.newindianexpress.com/sport/other/2020/feb/17/india-win-five-silver-six-bronze-medals-at-asian-youth-and-junior-weightlifting-championships-2104690.html [1]

https://telanganatoday.com/states-pavani-wins-gold-with-record-lifts [2]


பிபிசி கட்டுரை, இன்னும் வெளியிடப்படவில்லை[3]


தனிநபர் தகவல்


முழுப்பெயர் :  கே.வி.எல் பவானி குமாரி

தேசியம்       :      இந்தியர்

பிறப்பு              :     5 மார்ச் 2003 (அகவை 17)

பிறந்த இடம் : விசாகப்பட்டினம் ,ஆந்திர பிரதேசம்

விளையாட்டு : பளுதூக்குதல் எடைப்பிரிவு:  45 கிலோ பயிற்சியாளர் : பி மணிக்யல் ராவ்


இந்தியாவை முன்னிறுத்தி பதக்கங்கள்


  வெள்ளி:  2020 ஆசியன் இளைஞர் மற்றும் ஜூனியர் பளுதூக்கும் சாம்பியன்ஷிப், தாஷ்கண்ட், இளைஞர் பெண்கள் பிரிவு.

  வெள்ளி:  2020 ஆசியன் இளைஞர் மற்றும் ஜூனியர் பளுதூக்கும் சாம்பியன்ஷிப், தாஷ்கண்ட், ஜூனியர் மகளிர் பிரிவு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Dhivyat_raj&oldid=3105591" இலிருந்து மீள்விக்கப்பட்டது