பயனர்:DHAZEEBA B.S/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுக்பன்சு கவுர் பிந்தர் (Sukhbans Kaur Bhinder) (1943-2006) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக ஆறு முறை தேர்வு செய்யப்பட்ட ஒரே பெண் இவரே ஆவார். இதில் ஐந்து முறை மக்களவையிலும் ஒரு முறை மாநிலங்களவையிலும் உறுப்பினராக இருந்துள்ளார்.[1] 1980, 1985, 1989, 1992 மற்றும் 1996 இல் பஞ்சாப்பில் குர்தாஸ்பூரிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

அர்ஜன் சிங்கின் மகளான சுக்பன்சு, செப்டம்பர் 14, 1943 அன்று பைசலாபாத் (லாயல்பூர்) நகரில் பிறந்தார் (இப்போது பாக்கித்தானில்) உள்ளது. இவர் முசோரியிலுள்ள ஜீஸஸ் அன்ட் மேரி கான்வென்ட் பள்ளிகளில் படித்தார். பின்னர் சண்டிகரிலுள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் பட்டம் பெற்றார்..[2]

தொழில்[தொகு]

சுக்பன்சு ஒரு விவசாயியாகவும், அரசியல்வாதியாகவும்,சமூக சேவகராகவும் இருந்தார். 1980இல் ஏழாவது மக்களவைஏழாவது க்களவைக்கு]] முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985ஆம் ஆண்டில் எட்டாவது மக்களவை|எட்டாவது மக்களவைக்கு]] இரண்டாவது முறையும், பின்னர் 1989இல் ஒன்பதாவது மக்களவைக்கும், 1992இல் பத்தாவது மக்களவைக்கும், 1996இல் பதினொன்றாவது மக்களவைக்கும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] 1997ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது பாஜகவின் உறுப்பினராக மாறிய நடிகர் வினோத் கண்ணாவால் இவர் தோற்கடிக்கப்பட்டார்.[3] இவர் 2005இல் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[3]

வரதட்சணை தடையை ஆராய்வதற்கான கூட்டுக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். மேலும், 1961 ஜூலை முதல் 1996 மே வரை சுற்றுலாத் துறையில் மத்திய மாநில, பொதுமக்கள் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை கூட்டுக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.[2]

இவர் சமூகப் பணிகளிலும் பெண்களின் முன்னேற்றத்திலும் ஆர்வம் காட்டினார். இவர் இந்தியச் சுற்றுலாத் துறை வளர்ச்சிக் கழக உணவகங்களிலும், ஈஸ்ட் இந்தியா உணவகங்களிலும் நிர்வாகியாகவும் பாரிஸில் உணவக நிர்வாகியாகவும் பயிற்சி பெற்றுளளார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

அக்டோபர் 12, 1961 அன்று சுக்பன்சு முன்னாள் இந்தியக் காவல் பணி அதிகாரியான பிரீதம் சிங் பிந்தரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.[1] இவர், பஞ்சாப்பில் உள்ள குர்தாஸ்பூரில் வசித்து வந்தார்.[2] பல மாதங்களாக இரைப்பை நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் டிசம்பர் 15, 2006 அன்று தனது 63 வயதில் இறந்தார்.[3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Mrs Bhinder only woman to become MP six times". news.webindia123.com. பார்க்கப்பட்ட நாள் 2017-07-29.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "lspn05". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 2017-07-29.
  3. 3.0 3.1 3.2 "Congress` Rajya Sabha MP Sukhbans Kaur Bhinder dead" (in en). Zee News. 2006-12-15. http://zeenews.india.com/home/congress-rajya-sabha-mp-sukhbans-kaur-bhinder-dead_342269.html. 
  4. "Former Cong leader Bhinder cremated" (in en). www.hindustantimes.com/. 2006-12-16. http://www.hindustantimes.com/india/former-cong-leader-bhinder-cremated/story-K2MbpGtbQC2icjgOsah5MI.html. 
  5. "The Tribune, Chandigarh, India – Main News". www.tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2017-07-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:DHAZEEBA_B.S/மணல்தொட்டி&oldid=3372645" இலிருந்து மீள்விக்கப்பட்டது