பயனர்:Beviston

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இளமைப்பருவம்[தொகு]

பாஸ்டர். பெவிஸ்டன் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியை சேர்ந்தவர். இளம் வயதிலிருந்தே இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். மாவட்ட மாநில அளவில் பல்வேறு கட்டுரை போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்றவர். இந்தியாவின் முன்னனி பத்திரிகைகளில் பல ஆண்டுகள் பங்களிபை தொடர்ந்து வழங்கி வந்தார்.

கிறஸ்தவ இறைப்பணியில்[தொகு]

இவர் அங்கிகரிக்கப்பட்ட தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சம்மேளனத்தில் உறுப்பினராகவும், மனித உரிமைகள் கழகத்தின் இளைஞர் அணி கிளை செயலாளராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேவன் தம்முடைய முழு நேர இறைச்சேவைக்கென்று அழைத்தபோது, அழைப்பிற்கு கீழ்ப்படிந்து, இவரது தந்தை அருட்திரு. Rev. A. பெமிலிட்டன் அவர்களிடமும்,  ஆறுமுகநேரி தலைமைபோதகர் அருட்திரு. Rev. A. தேவபிச்சை (லேட்) அவர்களிடமும் ஊழிய பயிற்சி பெற்று, பின்னர் B.Th., M.Div, M.A in Christian Counseling ஆகிய இறையியல் கல்வியினை பயின்றார்.


      தற்பொழுது தமிழ் பிரதேச தேவ சங்க ஸ்தாபனத்தில் இணைந்து, பரமன்குறிச்சியிலுள்ள பூரண கிருபை ஏ.ஜி சபையில் தனது தகப்பனார் அருட்திரு.பெமிலிட்டன் அவர்களுக்கு உதவியாக இறைப்பணி செய்து வருகிறார். சமூக தீமைகள், பிரகாசமான வாழ்வு, உன்னுடன் ஒருவர், கிறிஸ்தவம் காட்டும் பாதை, மாணவர்களின் மன உளவியல், நூறு குழு விளையாட்டுகள், சிறுவர்கள் நடுவில் நற்செய்தி ஊழியம் என பல்வேறு நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் பல்வேறு கிறிஸ்தவம் சார்ந்த பத்திரிக்கைகளில் பல தரப்பட்ட மக்களுக்காக பல்வேறு கோணங்களில் தனது இலக்கிய சேவையினை வழங்கி வருகிறார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Beviston&oldid=2977474" இருந்து மீள்விக்கப்பட்டது