பயனர்:Bervinsuthar/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எல்கை:

தமிழ் நாட்டில் கன்னியாகுமாரி மாவட்டம் விளவன்கோடு தாலுகா கிள்ளியூர் சட்டமன்றம் பாலப்பள்ளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஊர் சகாய நகர். சகாய நகர், படுவூர் , கொட்டன்காச்சி விளை , ஆயினி விளை , காடு , கல்லு தரை , கயதன் கரை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பகுதி ஆகும்.

சகாய அன்னை ஆலயம் :

சகாய அன்னை ஆலயம் சகாய நகர் ஊரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. சந்தோஸ் நாதர் குருசடி அன்னை வேளாங்கண்ணி குருசடி புனித அந்தோனியார் திருத்தலம் ஆகியவைகளும் அழகுற அமைந்த பகுதி. அமைதி அரங்கம் இந்த ஊரின் மைய பகுதியில் அமைந்துள்ளதோடு திருமணம் மற்றும் பொது நிகழ்வும் இங்கு நடைபெறும்.

நீர் நிலைகள்:

புங்கன் குளம் தெக்குகுளம் ஆலுவிலைகுளம் செட்டிகுளம் பொட்டை குளம் மற்றும் பாம்பூரி வாய்க்கால் ஆகிய நீர் நிலைகள் உள்ளது.

ஊர் மக்கள்:

கிட்ட தட்ட 450 குடும்பங்கள் பூர்வ குடி மக்களாக வாழ்கின்றனர். வெளி ஊரை சேர்ந்த ஒருவர் கூட இந்த ஊரில் இல்லை என்பது வியப்பே. இவர்கள் அனைவருமே கத்தோலிக்க கிருஸ்தவர்கள் என்பது இந்த ஊரின் சிறப்பு. கல்வி அறிவில் மிகவும் முன்னேறிய ஊர். ஆசிரியர், பத்திர பதிவுஅலுவலகம் , தொலைபேசி அலுவலகம் பஞ்சாயத்து அலுவலகம் பொறியாளர், வழக்குரைஞ்சர் மற்றும் அரசு அலுவலகங்களில் பணி புரியும் பலர் இந்த ஊரில் உள்ளனர். ஒப்பந்த கட்டட பணி மர வியாபாரம் மர அறுவை மில் போன்ற தொழிலும் இங்குள்ளவர்கள் செய்கின்றனர். ஆயுர்வேத நாட்டு வைய்தியம் செய்யும் சிறந்த நாட்டு மருத்துவர்கள் (வைய்தியர்கள்) உள்ளனர். பனை ஏறும் தொழிலும் விவசாயமும் முன்னர் சிறப்பாக செய்த ஊர். பனை தென்னை வாழை மா பலா மரிசினி போன்ற வை இந்த ஊரின் ஒரு அடையாளம்.

ஜாண் ஜேக்கப் :

முன்னாள் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜாண் ஜேக்கப் அவர்கள் இந்த மண்ணின் மைந்தர் என்பது இந்த ஊருக்கு கிடைத்த சிறப்பு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Bervinsuthar/மணல்தொட்டி&oldid=2956666" இலிருந்து மீள்விக்கப்பட்டது