பயனர்:Avgramraj

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

avgramraj முனைவர் வெ. இராம்ராஜ் , M.A., M.Phil., Ph.D.,


 இளங்கலை தமிழ் & முதுகலை தமிழ் முதல் நிலையில் தேர்ச்சி  ஆய்வியல் நிறைஞர் – முதல் நிலையில் தேர்ச்சி, முதல் பரிசு  ஆசிரிய ஆய்வாளராக முனைவர்பட்ட ஆய்வின்போது தேர்வு பெறுதல்.  UGC தகுதித் தேர்வில் (NET) இரு முறை தேர்ச்சி. 2010, 2012.  மாநிலத் தகுதித் தேர்வில் (SET) தேர்ச்சி. 2011.

பணி அனுபவம்  சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறையில் ஆசிரிய ஆய்வாளர் (Teaching cum Research Fellow-TRF) – 2013-2014.  19-06-2015 முதல் D.G. வைணவக் கல்லூரியின் தமிழ்த் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருத்தல்.

விருதுகள்  தமிழ்ச் சுடர் விருது - 2019  இளம் அறிஞர் விருது 2020 - 2020

நூல்கள் - 10  முல்லைப் பாட்டு, முல்லைக்கலி ஒப்பாய்வு – ISBN: 978-93-81992-53-1  பேராசிரியர் மு.வரதராசனார் படைப்புகள் – நுண்ணாய்வு - ISBN: 978-93-81992-96-8  பேராசிரியர் மு.வரதராசனாரின் உள்ளம் - ISBN: 978-93-81992-97-5  பொதுமை அறம் - ISBN: 978-93-81992-45-6  அறிவே தெய்வம் – ISBN: 978-93-81992-61-6  அறமே வெல்லும் – ISBN: 978-81-936440-8-9  ஞானநெறி - ISBN: 978-93-87882-39-3  திருக்குறள் பிழிவுரை, 2019 – ISBN: 978-93-87882-90-4  ஸ்ரீவல்லபாச்சாரியார் 2020 – ISBN: 978-81-945377-2-4  அனுபவக் களஞ்சியம் – ISBN: 978-81-945377-3-1

கட்டுரைகள் - ISSN - ISBN எண்ணுடன் 56 மற்றும்

 தமிழ்த் தட்டச்சு, முதல்நிலையில் தேர்ச்சி, த.நா. தொழில் கல்வித்துறை, ஆகஸ்ட், 2011.  சாரணர் பயிற்றுநர் பயிற்சி, பாரத சாரணர் அமைப்பு, தமிழ்நாடு, 6-12-2004 - 15-12-2004.  கணினி பயன்பாடு.  கோயில்களிலும் தமிழ் இலக்கிய அமைப்புகளிலும் தொடர்ந்து சொற்பொழிவு ஆற்றுதல்.  யூ டியூப் வளைதளத்தில் (Youtube - avgramraj) தரவேற்றப்பெற்றுள்ள சொற்பொழிவுகள்


avgramraj Dr. V. RAMRAJ, M.A., M.Phil., Ph.D.,


• B.Lit., Tamil, M.A., Tamil – First Class – University of Madras. • M.Phil., - Tamil – First Rank, International institute of Tamil studies, Taramani, Tamil University. • Selected to Teaching cum Research Fellow. (Ph.D.,) University of Madras • UGC – NET (Two Times - 2010, 2012) • SET (2011)

Experience

• Teaching cum Research Fellow – TRF - One Year (2013- 2014), Department of Tamil Language, University of Madras. • Working - Assistant Professor, Department of Tamil, DG Vaishnav College, Arumbakkam, Chennai – 600 106, from 19-06-2015.

Books - 10 • Mullaippattu, Mullai Kali Oppaivu – ISBN: 978-93-81992-53-1 • Perasiriyar Mu.Va., Padaippugal - Nunnaivu - ISBN: 978-93-81992-96-8 • Perasiriyar Mu. Varadharasanarin Ullam - ISBN: 978-93-81992-97-5 • Podumai Aram - ISBN: 978-93-81992-45-6 • Arivae Daivam - ISBN: 978-93-81992-61-6 • Arame Vellum - ISBN: 978-81-936440-8-9 • Gananeri - ISBN: 978-93-87882-39-3 • Thirukkural Pizhivurai – ISBN: 978-93-87882-90-4 • Sri vallabhachariyaar – ISBN: 978-81-945377-2-4 • Anubhava Kalanjiyam - ISBN: 978-81-945377-3-1

Awards • Tamil Sudar – 2019 • Elam Tamil Aringnar 2020 - 2020

Articles with ISSN - ISBN – 56 and • Junior Grade with distinction in Typewriting Tamil, Department of Technical education, Tamilnadu, August 2011. • Scout Masters Basic Training Course The Bharat Scouts and Guides, Tamilnadu. • Basic Computer Knowledge • Frequently presented Spiritual discourses in Temples, Tamil Literary Organizations and Centers. • Youtube Speeches


அனைவருக்கும் வணக்கம்.


அணிந்துரை

முனைவர் அரங்க. இராமலிங்கம் பேராசிரியர் & தலைவர் (பணிநிறைவு) தமிழ் மொழித்துறை, சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை – 600 005.

என்னுடைய மாணவர் திரு. வெ. இராம்ராஜ் அவர்களின் ஆய்வியல் நிறைஞர் பட்ட (M.Phil.,) ஆய்வேடான ‘முல்லைப்பாட்டு, முல்லைக்கலி – ஒப்பாய்வு’ என்ற ஆய்வேடு நூல் வடிவம் பெறுவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். முல்லைநில மக்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு கொண்ட நூலாசிரியர், முல்லைத்திணை குறித்து ஆய்வுநூல் வெளியிட்டிருப்பது பொருத்தமுடையதாகும். சங்க இலக்கியம் - முல்லைத்திணை குறித்த அறிமுகத்துடன் துவங்குகிறது இந்நூல். ஆயர்களுடைய வாழ்வை ஒரு தனி இயலில் முழுவதுமாக விளக்க முயன்றுள்ள நூலாசிரியரின் முயற்சி வரவேற்கத்தக்கது. தொல்காப்பியம் தொடங்கி பல்வேறு நூல்களை மேற்கோள்காட்டி விளக்கியிருக்கும் நூலாசிரியரின் திறன் பாராட்டுக்குரியது. ‘உலகம்’ என்ற சொல்லாட்சியை முதலாக வைத்தே, பழந்தமிழ் இலக்கியங்கள் தொடங்கப்பெற்றுள்ளன என்று எடுத்துக்காட்டியுள்ள நூலாசிரியர், அதை பல்வேறு தமிழிலக்கியங்களின் தொடக்கத்தை வைத்து நிறுவியுள்ளார். பல்வேறு மலர்களை முல்லைநில மக்கள் பயன்படுத்தியுள்ளதை எடுத்துகாட்டியுள்ளதிலிருந்து, நூலாசிரியர் இயற்கையின் மீது ஈடுபாடுள்ளவர் என்று அறிய முடிகிறது. புராண செய்திகள், நிமித்தம் பார்த்தல், அகம்-புறம் ஆகிய இருதிணைகளும் தம்முள் முரண்பட்டு வருவதற்கான பொருத்தப்பாடுகள் ஆகியவை எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன. முல்லை நிலத்திற்கே உரிய ஏறுதழுவுதல் குறித்து தற்போதைய களஆய்வுக் குறிப்புகளுடன் விரிவாக விளக்கப்பெற்றுள்ளது. முல்லைப்பாட்டிலும் முல்லைக்கலியிலும் உள்ள பொருத்தப்பாடுகளும், வேற்றுமைகளும் துல்லியமாக ஒப்பிட்டுக்காட்டப்பெற்றுள்ள திறம் நூலாசிரியரின் நுன்மாண்நுழைபுலத்தைக் காட்டுகிறது. நூலாசிரியர் திரு. வெ. இராம்ராஜ் அவர்கள் இதுபோன்ற ஆய்வுநூல்களை தொடர்ந்து படைக்க வேண்டும். அறிவும் உணர்வும் நிரம்பப் பெற்றச் சமுதாயம் உருவாக, தன்னம்பிக்கையோடும் திறமையோடும் தொடர்ந்து செயலாற்ற வேண்டும். என் மாணவராக, ஆய்வாளராக இருந்து நூலாசிரியராக உயர்ந்துள்ள இவருடைய முதல் முயற்சியை அனைவரும் வரவேற்று ஊக்குவிப்போம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Avgramraj&oldid=3399870" இலிருந்து மீள்விக்கப்பட்டது