பயனர்:Anoraj neervely

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


Anoraj / அனோராஜ் [1]

செப்டம்பர்  மாதம் 19 ம் நாள் 1989 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள நீர்வேலி [2]கிராமத்தில் பிறந்தார்.இவரின் தந்தையார் இரத்தினேஸ்வரன்,தாயார் விக்கினேஸ்வரி.இவர்களின் மூத்த மகனே அனோராஜ் [3]ஆவார்.இவருக்கு ஒரு தம்பியும், ஒரு தங்கையும் உள்ளனர்.இவர் தன்னுடைய ஆரம்பக் கல்வியை நீர்வேலி தமிழ் கலவன் பாடசாலையிலும்,தரம் ஐந்து தொடக்கம் சாதாரண தரம் வரை உரும்பிராய்  இந்துக் கல்லூரியிலும், தனது உயர்தரக்  கல்வியை கோப்பாய்  [4]கிறிஸ்டியன் கல்லூரியிலும் கற்று உயர்தரத்தில் சித்தி பெற்றார்.


கல்லூரி படிப்பினை நிறைவு செய்த அனோராஜ் தனது மீதிப்படிப்பினை ஊடகக் கல்வியில் செலுத்துவதற்கு முன் வந்தார். அந்த வகையில்  MRTC ( ஊடகத்துறை ), Multi media (Degree)  என்பவற்றைக் கற்று பட்டப்படிப்பினை நிறைவு செய்தார்.


வாழ்க்கையில் எதிர்பார்க்காத தருணத்தில் நிகழ்ந்த இவருடைய தந்தையின் இழப்பானது இவரின் தனிப்பட்ட வாழ்க்கைப் போக்கினை மிகவும் புரட்டிப் போட்டது என்று சொன்னால் மிகையாகாது. குடும்பத்தின் மூத்த மகனாய் குடும்பச் சூழலை தன் கருத்தில் கொண்டு தன்னால் ஆன உதவியை செய்வதற்காக குடும்பப் பொறுப்பை தன் பொறுப்பாய் ஏற்று தொழில் துறைக்குள் தன்னை உட்படுத்திக் கொண்டார்.


தன் தொழில் துறையின் அடித்தளமாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வரையான தனது van  சேவையினை செயல்படுத்தத்  தொடங்கி பின்னர் தன் அயராத முயற்சியினால் பெற்றுக் கொண்ட


MRTC ஊடகக் கல்வியின் பட்டத்தினை பெறுவதற்காக தனது பட்டமளிப்பு விழாவினை மையமாகக் வைத்து தனது பயணத்தை கொழும்புலிருந்து இந்தியாவிற்கு மேற்கொண்டார்.அங்கு சென்ற சமயம் இந்திய தொலைக்காட்சிகளில் ஒன்றான "MEGA தொலைக்காட்சியில் பயிலுனராக" சேவை செய்யும் வாய்ப்பும் இவரைத் தேடி வந்தது..அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரபல்யமான "உதயன் பத்திரிகையில் Editoriyar ஆகவும் பின்னர் Reporter ஆகவும்" சேவை செய்வதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.


பத்திரிகை துறையில் இவர் காட்டிய ஈடுபாடானது "DAN தொலைக்காட்சியில் Editoriyar" ஆக சேவை செய்வதற்கான வாய்ப்பை வித்திட்டது.அதனைத் தொடர்ந்து மோட்டார் திணைக்களத்தில் பயிற்சிவிற்பாளராக மூன்று வருடங்கள் சேவை செய்வதென்று இவருடைய தொழில் துறையின் வளர்ச்சியானது பல துறைகளில் தன்னை நிலைநிறுத்தி வெற்றிப் பாதையை அமைத்து மென் மேலும் முன்னேறுவதற்கு ஏதுவாக அமைந்தது.


இவ்வாறு பல துறைகளில் கால் பதித்திருந்தாலும் தனது தொழிலை சிறந்த முறையில் நிலையான ஒன்றில் நிறுத்தும் நோக்கில் இலங்கையின் சர்வதேச கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்து அம்பாந்தோட்டை,ரத்னால, பிரான்ஸ் என பல இடங்களில் மாற்றங்கள் பல பெற்று இன்று கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சுங்கத்திணைக்கள அதிகாரியாக ( Immigration Officer)    சேவையாற்றி வருகின்றார்.


  1. "anoraj - Google தேடல்". www.google.com. பார்க்கப்பட்ட நாள் 2019-08-24.
  2. "anoraj - Google தேடல்". www.google.com. பார்க்கப்பட்ட நாள் 2019-08-24.
  3. "anoraj - Google தேடல்". www.google.com. பார்க்கப்பட்ட நாள் 2019-08-24.
  4. "anoraj - Google தேடல்". www.google.com. பார்க்கப்பட்ட நாள் 2019-08-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Anoraj_neervely&oldid=2791547" இலிருந்து மீள்விக்கப்பட்டது