பயனர்:Akash8825/மணல்தொட்டி
துஃபானி சரோஜ் | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 10 மார்ச்சு 2022 | |
| முன்னையவர் | தினேஷ் சவுத்ரி |
| தொகுதி | கெரகாட் |
| இந்திய மக்களவை உறுப்பினர் | |
| பதவியில் மே 2009 – மே 2014 | |
| முன்னையவர் | உமாகாந்த் யாதவ் |
| பின்னவர் | ராம் சரித்ர நிஷாத் |
| தொகுதி | ஜான்பூர், உத்தரபிரதேசம் |
| பதவியில் அக்டோபர் 1999 – மே 2009 | |
| முன்னையவர் | பிஸாய் சோங்கர் சாஸ்திரி |
| பின்னவர் | தொகுதி ஒழிக்கப்பட்டது |
| தொகுதி | சைத்பூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 2 சூலை 1956 வாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா |
| அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி |
| துணைவர் | முன்னி தேவி |
| பிள்ளைகள் | 5 including பிரியா சரோஜ் |
| வாழிடம் | ஜான்பூர், உத்தரபிரதேசம் |
| கல்வி | பட்டமளிப்பு |
| முன்னாள் மாணவர் | தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம் |
| தொழில் | வேளாண்மை |
| இணையத்தளம் | http://www.samajwadiparty.in |
துஃபானி சரோஜ் (Tufani Saroj) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். [1]இவர் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள மச்லிசாகர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தியவர். 13வது, 14வது மற்றும் 15வது மக்களவைகளில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.[2][3][4][5]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]துஃபானி சரோஜ் 2 சூலை 1956 அன்று உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் ஜாங்கி மற்றும் முலானா தேவி தம்பதியருக்கு பிறந்தார்.[6] 8 மே 1986 அன்று முன்னி தேவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.இவர் வாரணாசி நகரில் உள்ள பால்தியோ பட்ட கல்லூரியில் இளங்கலைக் கலைப் பட்டம் பெற்றார்.[7][8][9][10]
அரசியல் வாழ்க்கை
[தொகு]துஃபானி சரோஜ் சமாஜ்வாடி கட்சியின் முக்கிய உறுப்பினராக உள்ளார்.1999, 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தல்களில் முறையே:
- சைத்பூர்
- காஜிபூர்
- மச்லிசாகர் (ஜான்பூர்)
மக்களவைத் தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[11][12]
2014 மக்களவைத் தேர்தல்
[தொகு]2014 ஆம் ஆண்டு நடைபெற்ற 16வது மக்களவைத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சி மீண்டும் மச்லிசாகர் தொகுதியில் இவரை வேட்பாளராக நிறுத்தியது.ஆனால் அந்நேரத்தில் ஏற்பட்ட “மோடி அலை” காரணமாக இவர் தோல்வியடைந்தார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராம் சரித்ர நிஷாத் இவரை தோற்கடித்தார்.இந்தத் தேர்தலில் துஃபானி சரோஜ் 1,91,387 (19.18%) வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றார்.[13][14][15]
தேர்வு பதிவுகள்
[தொகு]| முதல் | வரை | முடிவு | |
|---|---|---|---|
| 1. | 1999 | 2004 | முதல் முறையாக 13வது மக்களவை தேர்ந்தெடுக்கப்பட்டார். |
| 2. | 1999 | 2000 | உறுப்பினர், தகவல் தொழில்நுட்பக் குழு |
| 3. | 2000 | 2001 | உறுப்பினர், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் நலக் குழு |
| 4. | 2001 | 2002 | உறுப்பினர், துணைச் சட்டமியற்றல் குழு |
| 5. | 2004 | 2009 | 2வது முறையாக 14வது மக்களவை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். |
| 6. | 5 ஆகஸ்ட் 2004 | 2009 | உறுப்பினர், மனிதவள மேம்பாட்டுக் குழு |
| 7. | 1 ஆகஸ்ட் 2007 | 2009 | உறுப்பினர், மதிப்பீட்டுக் குழு |
| 8. | 5 ஆகஸ்ட் 2007 | 2009 | உறுப்பினர், தகவல் தொழில்நுட்பக் குழு |
| 9. | 7 ஆகஸ்ட் 2007 | 2009 | உறுப்பினர், எம். பி. லேட்ஸ் குழு |
| 10. | 2009 | 2014 | 15வது மக்களவை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் (3வது முறையாக) மச்சிலி ஷார், ஜான்பூர் தொகுதியில் இருந்து |
| 11. | 6 ஆகஸ்ட் 2009 | 2014 | உறுப்பினர், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் நலக் குழு (2009-2010) |
| 12. | 31 ஆகஸ்ட் 2009 | 2014 | உறுப்பினர், தகவல் தொழில்நுட்பக் குழு |
| 13. | 7 அக்டோபர் 2009 | 2014 | உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குழு உள்ளாட்சி மேம்பாட்டுத் திட்டம் |
| 14. | 10 மார்ச் 2022 | 18வது உத்தரப்பிரதேச சட்டப்பேரவை கெராகட். |
மேலும் காண்க
[தொகு]- Official biographical sketch in Parliament of India website
- http://loksabhaph.nic.in/Members/memberbioprofile.aspx?mpsno=401&lastls=13
- http://loksabhaph.nic.in/Members/memberbioprofile.aspx?mpsno=401&lastls=14
- http://loksabhaph.nic.in/Members/memberbioprofile.aspx?mpsno=401&lastls=15
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tufani Saroj". PRSIndia (in ஆங்கிலம்). 2016-10-25. Retrieved 2020-07-21.
- ↑ "Tufani Saroj". PRSIndia (in ஆங்கிலம்). 2016-10-25. Retrieved 2020-07-23.
- ↑ "#Jaunpur | मृतकों के परिजनों को 20-20 लाख रूपये मुआवजा दिया जाय : तूफानी सरोज". Jaunpur24.Com (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-05-01. Retrieved 2020-07-24.
- ↑ फाउंडेशन, राष्ट्रीय जनहित मीडिया (2020-05-02). "बरसठी थाना अंतर्गत सरसरा गांव के मृतक परिजनों से मिलने पहुचे पूर्व सांसद तूफानी सरोज :- रिपोर्टर ब्युरोचीफ मनीष श्रीवास्तव(देश की उपासना)". सच्ची खबर (in ஆங்கிலம்). Retrieved 2020-07-24.
- ↑ "पूर्व सांसद तूफानी सरोज के नेतृत्व में किया गया पत्रक वितरित". Tejas Today (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-07-05. Retrieved 2020-07-24.
- ↑ "गंगा सफाई के दावेदार वरुणा के लिए भी सोचें". Amar Ujala (in இந்தி). Retrieved 2020-07-21.
- ↑ "द्वारका में पूर्व सांसद तूफानी सरोज के गले से चेन झपटकर बदमाश फरार". Navbharat Times (in இந்தி). Retrieved 2020-07-21.
- ↑ "दूसरे राज्यों में फंसे मजदूरों को लाने की पहल करे सरकारः तूफानी सरोज". samadhannews365. Retrieved 2020-07-24.
- ↑ "#Jaunpur | दूसरे राज्यों में फंसे मजदूरों को लाने की पहल करे सरकारः तूफानी सरोज". Jaunpur24.Com (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-05-04. Retrieved 2020-07-24.
- ↑ "जौनपुर: दूसरे राज्यों में फंसे मजदूरों को लाने की पहल करे सरकारः तूफानी सरोज - उम्मीद". www.aapkiummid.com. Retrieved 2020-07-24.
- ↑ "UP Assembly polls: credibility of bigwigs at stake". Hindustan Times (in ஆங்கிலம்). 2007-04-20. Retrieved 2020-07-21.
- ↑ Yadav, Krishna Kumar (2013-07-12). "डाकिया डाक लाया: झलकियाँ : मडियाहूँ मुख्य डाकघर, जौनपुर का प्रोजेक्ट एरो के तहत लोकार्पण". डाकिया डाक लाया. Retrieved 2020-07-21.
- ↑ "जौनपुर: दूसरे राज्यों में फंसे मजदूरों को लाने की पहल करे सरकारः तूफानी सरोज - उम्मीद". www.aapkiummid.com. Retrieved 2020-07-21.
- ↑ नेटवर्क, नया सवेरा. "जौनपुर : मनुवादी व रूढ़िवादी विचारधारा वाले कोरोना से भी खतरनाकः तूफानी सरोज | #NayaSabera". Naya Sabera | नया सबेरा - Hindi News, India News Hindi, National News in Hindi, Hindi News Portal. Retrieved 2020-07-21.
- ↑ "jaunapur: mulaayam sinh yaadav hamesha samaajavaad jeevan jiyeh toophaanee saroj "जौनपुर: मुलायम सिंह यादव हमेशा समाजवाद जीवन जियेः तूफानी सरोज"" [Jaunpur: Mulayam Singh Yadav should always live a socialist life: Tufani Saroj]. www.aapkiummid.com (in Sanskrit). 2020. Retrieved 2020-07-21.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link)