பயனர்:Abkaleel

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்காவில் புகழ்ப்பெற்ற பரங்கிப்பேட்டை என்ற நகரத்தில் 1975ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 02ம் தேதி (ஹிஜ்ரீ 1395ம் ஆண்டு புனித ரமழான் மாதம் பிறை 27) வியாழக்கிழமை மாலை வெள்ளிக்கிழமை இரவு அ.க. அப்துல் பாரீ, சா. ஸஹர்வான் பீவி தம்பதியருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார்.

இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள், ஒரு இளைய சகோதரி. ஒரு சகோதரர் சிறு வயதில் மரணமடைந்த விட்டார். தனது திருக்குர்ஆன் கல்வியை கிழுர் நபி பள்ளிவாசல் மதரஸாவில் பயின்றார்.

பள்ளிக்கல்வியை பெரியத் தெருவில் அமைந்திருந்த அரசு முஸ்லிம் பாடசாலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆரம்பக் கல்வியையும், அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு (SSLC) வரை உயர்கல்வியையும் கற்துத் தேர்ந்தார். ஒரு வருடம் தேசிய மாணவர் படை (NCC - National Cadet Corps)பயிற்சியும் பெற்றார். பயிற்று மொழியாக தமிழை எடுத்துப் படித்த இவர் உருதூ மொழிப்பாடத்தையும் படித்தார்.

பத்தாம் வகுப்பு முடித்தவுடன் பெற்றோரின் விருப்பத்திற்காகவும், தனது இலட்சியத்திற்காகவும் இஸ்லாமிய மார்க்ககல்வியை கற்க முடிவெடுத்து 1990ம் ஆண்டு புதுச்சேரி அருகிலுள்ள விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகரில் அமைந்துள்ள அல் -ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக்கல்லூரில் மவ்லவீ ஆலிம் பட்டப்படிப்பில் சேர்ந்தார். முதல் இரண்டு வருடங்கள் அடிப்படைக் கல்வியை அக்கல்லூரியில் கற்றுத் தேர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள அதிராம்பட்டிணம் என்ற பேரூரில் அமைந்துள்ள ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரியில் 3ம் ஆண்டு படிப்பில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து வேலூர் நகரில் அமைந்துள்ள நூற்றாண்டைக் கடந்த புகழ்ப்பெற்ற அல் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் அரபிப் பல்கலைக்கழத்தில் தொடர்ந்து ஐந்தாண்டுகள் கல்வி பயின்று 1997ம் ஆண்டு வகுப்பில் முதல் நபராக தேர்வு பெற்று மவ்லவீ ஆலிம் என்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர் பட்டத்தை பெற்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Abkaleel&oldid=1486448" இலிருந்து மீள்விக்கப்பட்டது