பயனர்:Abirami Shankar

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

                                            சிங்கப்பூர் நாணய மாற்று விகிதம் 

சிங்கப்பூரின் மாற்று விகிதம் உலகத்திலேயே வலுவானதான ஒன்றாகும்.  இந்த வலுவான நாணய மாற்று விகிதத்தைக் கடைப்பிடிப்பதில், சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு ஒரு முக்கிய நோக்கம் உண்டு. அதாவது, சிங்கப்பூரின் பொருளாதாரத்தில் வெளிநாட்டு வர்த்தகம் பெரிய பங்கை ஆற்றுகிறது. ஆகையால், வலுவான மாற்று விகிதம் வெளிநாட்டு பொருட்களை மலிவான விலையில் இறக்குமதி செய்வதற்கு உதவுகிறது. அதுமட்டுமில்லாமல்,  வலுவான மாற்றுவிகிதமாக இருப்பதோடு, சிங்கப்பூரின் மாற்று விகிதம் மிகவும் நிலையான மாற்று விகிதமாகவும் அமைகிறது. இது, அன்னிய நாடுகள் சிங்கப்பூரில் முதலீடு செய்வதை அதிகரிக்கிறது.

சிங்கப்பூரின் ஸ்திரமான மாற்று விகிதத்திற்குக் காரணம், அதன் அரசாங்க வங்கி செயல்படுத்திய சட்டத்திட்டங்கள் ஆகும். உதாரணத்திற்கு, சிங்கப்பூரின் மாற்று விகிதம் மிகவும் வலுவாகவோ அல்லது, மதிப்புக்குறைவதானதாகவோ ஆனால், சிங்கப்பூரின் மத்திய வங்கி,அதற்கேற்றாற்போல், தேவையான நடவடிக்கைகளில் உடனே ஈடுப்பட்டு, மாற்று விகதத்தை மேம்படுத்தி விடும்.இதனால், சிங்கப்பூரின் மாற்று வகிதம் பல நாடுகளைக் காட்டிலும், உன்னதமான நிலையில் உள்ளது.  

ஹசீம் ஓஸ்மான்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Abirami_Shankar&oldid=2250853" இலிருந்து மீள்விக்கப்பட்டது