பயனர்:Aadava

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என்னைப் பற்றி[தொகு]

எனது புனைப்பெயர் ஆதவன். இணையத்தில் பெயரும் முகவரியும் கொடுக்கும் வழக்கத்தை நிறுத்திக் கொண்டபிறகு யாரிடமும் மறந்தும் பெயரைக் கொடுப்பதில்லை. கோவையை அடுத்த திருப்பூரில் வசித்து வருகிறேன். கல்வித் தகுதி போதுமான அளவில் இருக்கிறது. பின்னலாடை வடிவமைப்பாளராக தொழில் புரிகிறேன்.

தமிழுக்கும் எனக்குமான நெருக்கும் சிறுவயதிலிருந்தே தொடங்கிவிட்டது. தாய்மொழி தெலுங்கு என்றாலும் எழுதப்படிக்கத் தெரியாது. தமிழார்வம் மிகுந்து இலக்கியம் சார்ந்த நூல்களைப் புரட்ட ஆரம்பித்தேன். கற்றது துளியளவு என்ற கோட்பாடின் படி மேலும் கற்கும் நோக்கத்தில் இணையம் புகுந்தேன் எனலாம். இருபத்தி மூன்று வயதான எனக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. என்னுடன் பிறந்தவர்கள் இருவர், சகோதரியும் சகோதரனுமாவார்கள்.


விக்கிபிடியாவில் நான்[தொகு]

தேடல்தான் மனித வளர்ச்சிக்கான முதுகெலும்பு. அப்படிப்பட்ட தேடலாலே விக்கியும் எனக்கு அறிமுகமானான். ஆரம்ப காலத்தில் விக்கிபிடியாவில் ஆங்கிலம் மட்டுமே என்று தவறாக நினைத்துக் கொண்டிருந்தேன். பின்னர்தான் தெரிந்தது அது பல மொழிகளை உள்ளடக்கி எவரும் பதியும் இலவசமான நண்பன் என்று. அப்படியொரு சூழ்நிலையில் விக்கிபிடியாவில் பல கட்டுரைகள் தமிழில் மொழிபெயர்க்கப்படாமல் இருந்ததைக் கவனித்தேன். பெரும்பாலும் தமிழார்வம் மிகுந்த எனக்கு இது சற்றே கவலையும் தந்தது. ஆங்கிலம் அறியாத தமிழ் நண்பர்கள் எங்ஙனம் அறிவைப் பெருக்க இயலும் என்ற கேள்வி எழுந்தது. சிறிது நாட்களாகவே நாமும் விக்கியில் பங்கெடுத்து தமிழ்படுத்தினால் என்ன என்ற கேள்வியும் உடன் எழுந்தது.

விக்கியில் தமிழ்படுத்தும்போது, தட்டச்சில் எனக்கு எந்த பிரச்சனையுமில்லை. ஆனால் அவற்றை எப்படி ஒழுங்குபடுத்துவது என்ற கேள்வி அவ்வப்போது எழுகிறது. மணல்தொட்டியை அடிக்கடி உபயோகம் செய்து பார்த்தேன். ஓரளவு தெளிந்துவிட்டேன் என்ற நம்பிக்கையில் எனது பயனர் பக்கத்தையும் தட்டச்சினேன். இன்னும் சிற்சில குழப்பங்கள் இருப்பினும் அவை மெல்ல மெல்ல விலகிவிடும் என்பது எனது நம்பிக்கை.

தமிழ் விக்கிபிடியா தற்சமயம் பதினையாயிரம் கட்டுரைகள் இருக்கின்றன. இதன் அளவு மேலும் அதிகரிக்கவேண்டும். எனது நோக்கமே விரைவில் ஆயிரம் கட்டுரைகள் தொகுக்க வேண்டும் என்பதே. எந்தக் கட்டுரையை விரித்துப் பார்த்தாலும் அதில் தமிழ் மொழியும் இருக்கவேண்டும்.


விருப்பங்கள்[தொகு]

இலக்கியம் சார்ந்த உரையாடல்களில் அதிக விருப்பம் எனக்கு. எனது தந்தை ஒரு ஓவியர் என்பதால் சிறிது ஓவியக்கலையும் கற்றிருக்கிறேன். தோட்டக்கலையில் தற்சமயம் ஆர்வம் பெருக்கெடுக்கிறது. கணிணி விளையாட்டிலும், கிரிக்கெட், சதுரங்கம், கேரம், ஆகியவற்றிலும் விருப்பம் அதிகம். கவிதைகள், கதைகள், நகைச்சுவைகள், சிற்சில குறுங்கட்டுரைகள் என சொந்த கற்பனைகள் மிகுந்த படைப்புகளை படைப்பதிலும் அதீத ஆர்வம்.


வெளியே[தொகு]

தமிழ் எழுதக் கற்றுக் கொடுத்தது பள்ளிக்கூடம் என்றால் , தட்டச்சக் கற்றுக் கொடுத்தது இணைய பள்ளியான 'தமிழ்மன்றம்' ஆகும். பல்வேறு துறை சார்ந்த படைப்புகள் மிகுந்த தளமாக இருந்ததால் அங்கே எழுதிக் கொண்டிருந்தேன். சுமாய் எட்டாயிரம் பதிவுகள் எழுதியிருந்தாலும் விக்கிபிடியா போன்று அதிக நபர் சார்ந்து செல்லவில்லை.

அவ்வப்போது எனது வலைத்தளத்திலும் எழுதிவருகிறேன். சில இலக்கிய இணைய இதழ்களான கீற்று, வார்ப்பு, திண்ணை போன்ற இதழ்களிலும் எனது படைப்புகள் வந்திருக்கின்றன. சமீப காலமாக தமிழ் சார்ந்த குழுக்களிலும் எழுதிவருகிறேன்.


இக்கட்டுரை மேலும் விரிவாக்கம் செய்யப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Aadava&oldid=285000" இலிருந்து மீள்விக்கப்பட்டது