பயனர்:1234Shriya

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜூகூன் (Joo Koon)

அறிமுகம்

     சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் ஜூரோங் பகுதி உள்ளது. ஜூகூன், ஜூரோங் வட்டாரத்தின் தொழிற்பேட்டை ஆகும். இங்கு அதிக அளவில் உற்பத்தித் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. 1960ஆம் ஆண்டுகளில் ஜூரோங் மேற்கு வட்டாரம் சதுப்பு நிலமாகவும் சிறிய குன்றுகளாகவும் அடர்ந்த காடுகளாகவும் இருந்தது. இவ்வட்டாரம் மிகப்பெரிய தொழிற்பேட்டையாக உருவாக்கப்பட்டது. பின்னாளில், அது புதிய நகரமாக விரிவுபடுத்தப்பட்டு ஒரு கவர்ச்சிகரமான பகுதியாக உருமாறியது. இப்பகுதி அனைவரும் கவரும் வகையில் உள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் வசதிகளும்

     ஜூகூன் தொழில் நகரத்தைச் சுற்றிப் பாசிர் லாபா இராணுவ முகாம், அரினா நகர்ப்புறக் கேளிக்கை விடுதி, சிங்கப்பூர் டிஸ்கவரி மையம், சாஃப்டி இராணுவ முகாம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த வசதிக்கூடங்கள் அமைந்துள்ளன. என் டி யூசி கூட்டுறவுச் சங்கத்தின் ஆகப்பெரிய பண்டகச்சாலை சங்கம் ஜூகூன் வட்டாரத்தில் அமைந்துள்ளது.

வீட்டு வசதிகள்

     வீடமைப்பு வளர்ச்சிக் கழக வாரியத்தின் புதிய அடுக்குமாடி வீடுகள் ஜூரோங் மேற்கு வட்டாரத்தின் நீட்டிப் பகுதியாக ஜூகூனைச் சுற்றி அமைந்துள்ளன. பச்சைப் பசேல் என்ற தாவர வளம் அதிகமாகவும் அடர்த்தியாகவும் இவ்வட்டாரத்தில் காணப்படுகிறது. அதனால், மக்கள் சுகாதாரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கிறார்கள். இராபில்ஸ் கோல்ப் கோர்ஸ் ஜூகூனுக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது.

போக்குவரத்து வசதிகள்

     ஜூகூன் தொழிற்துறைப் பேட்டைக்குக் கிழக்குப் பக்கத்தில் ஜூகூன் பெருவிரைவு இரயில் நிலையம் அமைந்துள்ளது. 2015ஆம் ஆண்டில் ஜூகூன் பேருந்து மாற்று நிலையம் திறக்கப்பட்டது. அப்பர் ஜூரோங், பெனாய், ஜலான் அகமது இப்ராஹிம் போன்ற பிரதான சாலைகள் ஜூகூனைச் சுற்றி அமைந்துள்ளன. மேற்குத் துரித இரயில் சேவையின் கடைசி முனையம் ஜூகூனில் அமைந்துள்ளது. தற்போதைய முனையம் எதிர்காலத்தில் துவாஸ் முனையத்துடன் இணையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

முடிவு:-

சிங்கப்பூர் துரித கடவு ரயில் ஜூ கூனைத் தாண்டி துவாஸ் லிங்க் வரை விரிவுபடுத்த படுவதால் இவ்வட்டாரத்தின் மக்கள் புழக்கம் இன்னும் பலமடங்கு அதிகமாகும்.

சங்கர் ராமன் ஸ்ம்ரிதி (2E1 )யூனிட்டி உயர்நிலை பள்ளி

Sankar Raman Smrithi (2E1) Unity Secondary School

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:1234Shriya&oldid=2256311" இலிருந்து மீள்விக்கப்பட்டது