பயனர்:லோகநாதன்.கி/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எனது கிராமம் நாகப்பட்டினம் மாவட்டம்,தலைஞாயிறு ஒன்றியம், திருக்குவளை வட்டம்,கச்சனகரம் ஊராட்சியில் அமைந்த ஒரு அழகிய சிற்றூர் முத்தரசோழபுரம். சிறப்பு பெயற்காரணம் இவ்வூர் சோழர்களால் ஆட்சி செய்யப்பட்ட்தாலும், முத்தரசன் என்னும் அரசன் அக்காலத்தில் ஆட்சிபுரிந்த்தாலும் இவ்வூர் முத்தரசோழபுரம் எனும் பெயர் பெற்றது.எனது கிராமத்தில் சுமார் 600 பேர் மக்கள் வசிக்கிறார்கள். முதன்மையான தொழிலாக விவசாயத் தொழில் விளங்குகிறது. இவ்வூரில் ஒரே ஒரு ஆரம்மப்பள்ளி மட்டுமே உள்ளது. ஆதலால் படித்தவர்கள் மிகவும் குறைவு.தற்பொழுது அந்த நிலைமாறி படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளனர்.இவ்வூரில் குடிநீர்வசதி,போக்குவரத்துவசதி,கல்வி வசதி மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தினாலும், எதிர்கால சமுதாயம் முன்னேற்றத்திற்காகவும், தங்களது குழந்தைகளின் எதிகாலத்திற்காகவும் இக்கிராமத்தில் உள்ள அறிஞர்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு நகரத்தை நோக்கி இடம்பெயர ஆரம்பிக்கிறார்கள். இது மிகவும் கவலை அளிக்கிறது.