பயனர்:மதனாஹரன்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உடோர்சியாலும் ஒப்பந்தக்காரரான புளோரியன் வெபராலும் உருவாக்கப்பட்ட துவிட்டரின் முதலாவது மாதிரியானது, ஓடியோ ஊழியர்களுக்கான ஓர் அகச்சேவையாகப் பயன்படுத்தப்பட்டது.[1] துவிட்டரின் முழுமையான பதிப்பானது, சூலை 15, 2006 அன்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடப்பட்டது.[2] 2006 அட்டோபரில் பிசு தோன், இவான் வில்லியமிசு, உடோர்சி ஆகியோரும் ஓடியோவின் ஏனைய உறுப்பினர்களும் இணைந்து ஒபுவியசுக் கூட்டுநிறுவனத்தை அமைத்து, ஓடியோவையும் odeo.com, twitter.com உள்ளடங்கலான அதன் சொத்துகளையும் முதலீட்டாளர்களிடமிருந்தும் பங்குக்காரர்களிடமிருந்தும் பெற்றுக்கொண்டனர்.[3] வில்லியமிசு, கிளாசை வேலையிலிருந்து நீக்கினார். துவிட்டரின் தொடக்கத்தில் கிளாசின் பங்களிப்புக் குறித்து 2011 வரை வில்லியமிசு எதனையும் தெரிவிக்கவில்லை.[4] 2007 ஏப்பிரலிலிருந்து துவிட்டரானது தனிநிறுவனமாக இயங்கத்தொடங்கியது.[5] 2013இல் அளித்த ஒரு நேர்காணலில், துவிட்டரின் தொடக்கக் காலத்தில் இருந்த தடுமாற்றம் குறித்து வில்லியமிசு பின்வருமாறு கூறுகின்றார்.

With Twitter, it wasn't clear what it was. They called it a social network, they called it microblogging, but it was hard to define, because it didn't replace anything. There was this path of discovery with something like that, where over time you figure out what it is. Twitter actually changed from what we thought it was in the beginning, which we described as status updates and a social utility. It is that, in part, but the insight we eventually came to was Twitter was really more of an information network than it is a social network.

துவிட்டர் என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை. அவர்கள் அதனைக் குமுக வலையமைப்பு என்றழைத்தார்கள், குறுவலைப்பதிதல் என்றழைத்தார்கள், ஆனால், அதனை வரையறுப்பது கடினமானதாக இருந்தது. ஏனெனில், அது எதனையும் பதிலிடவில்லை. இவ்வாறான பாதையில் கண்டறிதல் அமைவதுண்டு. காலஞ்செல்லும்போதுதான் அது என்னவென்று தெரிந்துகொள்ளமுடியும்.

  1. Nicholas Carlson (13 ஏப்ரல் 2011). "The Real History Of Twitter". Business Insider. பார்க்கப்பட்ட நாள் 31 சூலை 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; techcrunch என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. Om Malik (25 அக்டோபர் 2006). "Odeo RIP, Hello Obvious Corp". GigaOM. பார்க்கப்பட்ட நாள் 31 சூலை 2016.
  4. Alexis C. Madrigal (14 ஏப்ரல் 2011). "Twitter's Fifth Beatle Tells His Side of the Story". The Atlantic. பார்க்கப்பட்ட நாள் 31 சூலை 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. Andrew (12 பெப்ரவரி 2009). "A Conversation With Twitter Co-Founder Jack Dorsey". The Daily Anchor. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)