பயனர்:பொன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெவில் மே க்ரய் (காணொளி விளையாட்டு)[தொகு]

டெவில் மே க்ரய் விளையாட்டு, எதிரிகளை ஊடுருவி, வெட்டி வீழ்த்தும் சாகச விளையாட்டு. இதை உருவாக்கி வெளியிட்ட நிறுவனம் காப்காம், வெளியிட்ட வருடம் 2001. இந்த அதிரடி விளையாட்டை முதன் முதலில் பிளேஸ்டேஷன் 2 ல் விளையாட தகுந்தாற்போல் வடிவமைத்தது. இந்த விளையாட்டு , வாள் சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. இதில் ஆட்டக்காரர் பல விதமான ஆயுதங்களை, ஒவ்வொரு பெரிய எதிரிகளிடம் இருந்து சண்டையிட்டு வெற்றி பெற்றதின் பரிசாக பெற்றுக்கொள்வார்.

இந்த விளையாட்டுக்களம் கற்பனையான மால்லட் தீவில் , நவீன காலத்தில் நடக்கும்படி அமைத்துள்ளார்கள். இந்த கதை தாந்தே என்னும் அரக்கர்களை அழிக்கும் வீரனை சுற்றியும், அவனின் தாய் மற்றும் சகோதரனின் சாவிற்கு பழித்தீர்க்க அரக்கர்களை கொல்வதை தன் தொழிலாக செய்வான். தன் பயனத்தில் ட்ரிஷ் என்னும் பெண்ணை சந்திப்பான், அவள் அரக்க அரசன் முண்டஸை அழிக்க உதவுவாள். இந்த கதைக்களத்தை, ரெசிடென்ட் ஈவில் கதைக்கு துனை கதையாக அமைக்க முடிவு செய்து, பின் கைவிடப்பட்டு, இந்த விளையாட்டை தனியாக கொண்டுவர முடிவு செய்து வெளியிட்டார்கள்.

இந்த விளையாட்டு, இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு பெற்று, பல மில்லியன் பிரதிகள் விற்று காப்காம் அளிக்கும் "பிளட்டினம் டைட்டில்" வென்றது. இந்த தொடரின் வெற்றி, மற்றும் பல துறையிலும் (காமிக்ஸ், நாவல்ஸ், அனிமேஷன் தொடர்கள்) இதனை பிரபலபடுதியது.

2014 வருடம் வரை நான்கு மூல விளையாட்டும், இரண்டு சிறப்பு பதிப்புகளும், வேரொரு நிறுவனம் இதை சார்ந்து மற்றொரு விளையாட்டையும் உருவாக்கி உள்ளது. மேலும் முதல் மூன்று தொடரை, உயர் நுட்ப தொகுப்பாக வெளியிட்டுள்ளது.

விளையாட்டு விளையாட[தொகு]

இந்த விளையாட்டு, அரக்கத்தனமாக சண்டையிட்டு, தொடர்ந்து எதிரிகளை தாக்கி வெற்றி பெறுவதே. ஒவ்வொரு தொடர் தாக்குதலுக்கும் தனிப்பட்ட சண்டை பாணிக்கான மதிபென்கள் வழங்கப்படும். இது அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்லும் போது உபயோகப்படும். இந்த மதிபென்கள் D,C,B,A,S என தரப்பட்டியல் கொடுத்து, அதற்கு ஏற்ப சிறப்பு சண்டை இயக்கங்கள் விளையாடுபவர்க்கு கொடுக்கப்படும். இதில் சில புதிர்களும் கொடுக்க, அதை தீர்த்ததும் புது சக்தி பெற உதவும்.

தாந்தேவிற்கு சில மணித் துளிகளுக்கு அரக்க சக்தி கொடுக்கும். இந்த சக்தி தற்போது ஏந்தி இருக்கும் ஆயுதத்திற்கு ஏற்றார்போலவும், தற்போது உள்ள பலத்திற்கும், வேகத்திற்கும் ஏற்றார்போலவும, சில புதிய இயக்கங்களுக்கும், உயிரை மெதுவாக மீட்கவும் பயன்படும். இதில் சிறப்பு, தாந்தே தன் உருவத்தை அரக்கனாக மாற்றும் போது தாக்கும், தடுக்கும் சக்தி அதிகமாகும்.

புதுமை படுத்துதல்[தொகு]

இந்த தொடரின் ஒவ்வொரு விளையாட்டிலும் புதுமை புகுத்திஉள்ளது.

எண் பெயர் புதுமை பயன்பாடு
1 டெவில் மே க்ரய் ஸ்டெய்ல் மீட்டர் மற்றும் ரான்கிங் தொடர்ந்து எதிரியை தாக்கவும், எதிரியின் தாக்குதலுக்கு அடிவாங்காமலும் விளையாட தூண்டும்.
2 டெவில் மே க்ரய் 2 காம்போ அட்டாக்ஸ் மற்றும் ஆயுதம் பறந்து தாவி அடிக்கவும், தப்பிக்கவும் செய்ய மற்றும் ஆயுதங்களை உடனுக்குடன் மாற்றவும் உதவும்.
3 டெவில் மே க்ரய் 3: தாந்தேவின் விழிப்பு தனித்தன்மை வாய்ந்த ஆயுதங்களும், சிறப்பு தாக்கும் பாணிகள் நான்கு அடிப்படை பாணிகளும், அதற்குறிய சக்திகளை கூட்டவும் உதவும்.
4 டெவில் மே க்ரய் 4 நீரோ'ஸ் "டெவில் ப்ரிங்கர்" ஆர்ம் தூரத்தில் உள்ள எதிரியை அருகில் இழுத்து தரையில் அடிக்கவும், தன் வாளை சக்திமிக்க தாக்குதலுக்கு உடன்படுத்தவும் உதவும்.

உருவாக்கம்[தொகு]

1998 ல் "ரெசிடென்ட் ஈவில் 2" உருவாக்கி முடிந்ததும், பிளேஸ்டேஷன் 2 விற்கான ரெசிடென்ட் ஈவில் தொடர் உருவாக்க, ஹிடேக்கி காமியா மற்றும் அட்சூசி இனாபா தலைமையில் குழு அமைத்து அதை "டீம் லிட்டில் டெவில்" என குறிப்பிட்டார்கள். ஆரம்ப கட்ட ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக இந்த குழு, ஸ்பெய்னிற்கு சென்று பல கோட்டைகளைப் பார்த்து, விளையாட்டின் பின்னணி சூழலுக்கு வடிவமைக்க எண்ணினார்கள். ஆனாலும், முன்மாதிரி நிலையில், இந்தக் கருப்பொருள், ரெசிடென்ட் ஈவில் கருப்பொருளுடன் இனையாததால், மொத்த திட்டத்தையும் கைவிடாமல் புது விளையாட்டாய் டெவில் மே க்ரய் என வெளியிட முடிவு செய்தனர்.

"த டிவைன் காமடி" , எனும் பிரபலமான கற்பனை கவிதைதான் (எழுதியவர் - த ஃப்லொரன்டைன் பொயட் தாந்தே அலிக்கேரி) இதற்கு ஊக்குவிக்கும் விதமாக அமைந்தது.

அக்டோபர் 2013 ல், டிராகன்'ஸ் தோக்மா இயக்குனர் ஹிடேக்கி இட்சுனோ, இதில் ஆர்வம் மிகுந்து இதே தொடரில் ஐந்தாம் பாகம் உருவாக்க நினைத்தார். ஆனால், டெவில் மே க்ரய் 4 ஸ்பெஷல் எடிசன் வர்தக ரீதியாக வெற்றி பெற்றால், ஐந்தாம் பாகம் உருவாக்கலாம் என்ற அவர் பிற்காலத்தில் மற்றொரு பேட்டியில் இனி டெவில் மே க்ரய் 4 ஸ்பெஷல் எடிசன் விற்பனை வைத்து, வரும் தொடர்களை வெளியிடும் முடிவுகளை எடுக்க மாட்டோம் என தெரிவித்தார்.

வரவேற்பு[தொகு]

  • டெவில் மே க்ரய், 2,00,000 பிரதிகள் யுனைட்டட் கிங்டமில் மற்றும் விற்றதால் என்டர்டைன்மன்ட் அண்ட் லெஸ்சர் சாஃப்ட்வேர் பப்ளிசர்ஸ் அசோசியேசன் "கோல்ட் சேல்ஸ் அவார்ட்" வழங்கியது.
  • ஜுலை 2006, டெவில் மே க்ரய் 1.1 மில்லியன் பிரதிகள் யுனைட்டட் ஸ்டேட்ஸில் விற்று $38 மில்லியன் ஈட்டியது.
  • நெக்ஸ்டு ஜனரேசன், தரவரிசை படி, அதிகமாக விற்பனை ஆகும் விளையாட்டில் இது 48வது வரிசையில் இடம் பெற்றுள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:பொன்ஸ்&oldid=2512018" இலிருந்து மீள்விக்கப்பட்டது