பயனர்:பெ.நாயகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெ.நாயகி

அறிமுகம்: பெ.நாயகி என்னும் புனை பெயரில் எழுதி வரும் தமிழ் எழுத்தாளர் பெ.நா.மாறன், அடிப்படையில் ஓர் இயந்திரவியல் பொறியாளர். மதுரையில் 1966-ல் பிறந்து, வளர்ந்து, மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் இளங்கலை இயந்திரவியல் பட்டம் பெற்று மூன்று ஆண்டுகள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அதன் பிறகு எண்ணெய் எரிவாயு கழகத்தில் (ONGC) சேர்ந்து தற்போது முதன்மைப் பொறியாளராகப் (CHIEF ENGINEER) பணியாற்றி வருகிறார்.

படைப்புகள்: முதல் சிறுகதை (“நீங்கள் காதலித்திருக்கிறீர்களா?”) ஆனந்த விகடனில் 11.07.1982-ல் வெளி வந்தது. தொடர்ந்து பல்வேறு தமிழ்ப் பத்திரிகைகளிலும், நாளிதழ்களிலும், சிறுகதைகள், கவிதைகள், குறுநாவல்கள், நாவல்கள், தொடர்கதை, கட்டுரைகள் என்று பல்வேறு படைப்புகளைத் தந்திருக்கிறார். 1998 ஆம் ஆண்டு ஆனந்தவிகடனில் வெளிவந்த இவருடைய சிறுகதை (போதைமரம்) இலக்கியச் சிந்தனை விருது பெற்றது.

நூல்கள்:

கங்கை புத்தக நிலையம், திருவரசு புத்தக நிலையம், பாவை பதிப்பகம் முதலிய பதிப்பகங்களின் வெளியீடாக வெளி வந்துள்ளன. சிறுகதைத் தொகுப்புகள்: 1.தூண்டில் 2.ஈரச்சருகுகள் 3.உறவு என்றொரு சொல் இருந்தால் 4.நந்தவனக் கனவுகள் 5.விதிக்கு ஒரு விதி 6.நிலாச் சோறு 7.தேவை ஒரு மாற்றம் நாவல்கள்: 1.கனவிலிது கண்டேன் 2.நிழல் யுத்தம் 3.பிடித்த கவிதை நீ கட்டுரை: 1.தீர்வுகள் நமக்குள்ளே

வலைப்பூ: http://rathnesh.blogspot.com

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:பெ.நாயகி&oldid=408083" இருந்து மீள்விக்கப்பட்டது