உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:தி.சதானந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான் தில்லைநாதன் சதானந்தன் கல்லடியைப்பிறப்பிடமாகவும் வளர்ப்பிடமாகவும் கொண்டுள்ளேன். ஆரம்ப காலத்தில் மண்டூரில் வசித்த நான் எனது ஆரம்பக்கல்வியை மட்டக்களப்பு மண்டூர் மகாவித்தியாலயத்தில் கற்றதுடன் பின்பு மட்டக்களப்பு புனித் மிக்கேல் கல்லூரியில் க.பொ.த சாதாரணம் வரை பயின்று பின்னர் உயர்தரக்கல்வியை கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் கல்வி கற்றேன்.

தற்போது இலங்கை கிழக்குப்பல்கலைக்கழத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தில் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி திணைக்களத்தில் விரிவுரையாளராக பணியாற்றிவருகின்றேன். நான் இப்பீடம் ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரையுள்ள ஒரு மூத்தஉறுப்பினர் என்பதில் பெருமையடைகின்றேன்.

நான் எனது விஞ்ஞானமாணி வேதியியல் சிறப்புப்பட்டத்தினை இலங்கை கிழக்குப்பல்கலைக்கழகத்தில் பெற்றேன். பின்பு இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வியியல் டிப்ளோமா பட்டத்தினையும் கல்வியியலில் முதுமாணிப்பட்டத்தினை இலங்கை கிழக்குப்பல்கலைக்கழத்திலும் பெற்றேன். அத்துடன் இலங்கை திறந்தபல்கலைக்கழகத்தில் சட்டமாணிப்பட்டத்தினையும் பெற்றுள்ளேன்.

எனது தந்தையார் சைவப்புலவர் திரு. எஸ்.தி்ல்லைநாதன் தாயார் திருமதி தவமணி தி்ல்லைநாதன் ஆவர். எனது மனைவி திருமதி சிவேந்திராதேவி சதானந்தன் ஆவார். இவர் இலங்கை கிழக்குப்பல்லைக்கழகத்தில் கணிதப்பிரிவு விரிவுரையாளராக கடமையாற்றுகின்றார். எனது சேசகி எனும் புத்திரியும் சேசாங்கன் எனும் புத்திரனும் உள்ளனர்.


இப்பயனர் சைவ சமயி ஆவார்.
இப்பயனர் இலங்கையராவார்.


இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 13 ஆண்டுகள், 11 மாதங்கள்,  1 நாள் ஆகின்றன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:தி.சதானந்தன்&oldid=824557" இலிருந்து மீள்விக்கப்பட்டது