பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2021 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்த தேர்தல் அறிக்கையில் பொதுமக்கள் நலனுக்கான 505 தேர்தல் வாக்குறுதிகள் அறிவித்தது. தேர்தல் வாக்குறுதிகளின் பட்டியல் பின்வருமாறு[1]:

  1. மாநில சுயாட்சியை பெற்றிட இந்திய அரசை வலியுறுத்தும்.
  2. பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தும்.
  3. இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு பதிலாக தமிழ்நாட்டிற்கு தனிக் கல்விக் கொள்கையை வகுக்கும்.
  4. அனைத்து இந்திய மொழிகளையும் ஆட்சி மொழிகளாக அமையவும், அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தமிழ் மொழியில் நடத்தவும் இந்திய அரசை வலியுறுத்தும்.
  5. இந்திய உச்ச நீதிமன்றத்தின் தென் மண்டலக் கிளையை தமிழ்நாட்டில் அமைக்க இந்திய அரசை வலியுறுத்தும்.
  6. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை தன்னாட்சி நிறுவனமாக அமைய இந்திய அரசிடம் வலியுறுத்தல். மேலும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தல்.
  7. பன்னாட்டுப் பல்கலைகழங்களில் தமிழ் மொழிக்கான இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுத்தல்.
  8. அனைத்து மாநகராட்சிகளில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும்.
  9. உலகப் புகழ்பெற்ற நூல்களை தமிழில் மொழிபெயர்த்தல் மற்றும் புகழ்பெற்ற தமிழ் நூல்களை பிற மொழிகளில் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுத்தல் மற்றும் இணையத்தில் ஆவணப்படுத்துதல்.
  10. நடைமுறையில் தமிழில் புழங்கும் கிரந்த எழுத்துக்களை பயன்படுத்துவதை தடுக்க சட்டம் இயற்றுதல்.
  11. இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடைபெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை மேற்கொள்ள இந்திய அரசை வலியுறுத்தல்.
  12. இலங்கைத் தமிழர்களுக்கு முழு அரசியலமைப்பு உரிமையை வழங்க, இலங்கை அரசை வலியுறுத்த, இந்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும்.
  13. இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இந்திய அரசிடம் வலியுறுத்தல்.
  14. வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனை முன்னிட்டு தமிழ்நாடு அரசில் தனித்துறை நிருவப்படும்.
  15. லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவுதல்.அதன் மூலம் ஊழல் முறைகேடுகளில் ஈடுபடும் சட்டமன்ற உறுப்பினர்கள் & நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரித்து, தண்டனை வழங்குதல். மேலும் மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்தல்.
  16. தமிழ் மொழியை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக வலியுறுத்தும்.
  17. அதிமுக போன்று அல்லாமல் திமுக ஊழல் அற்ற ஆட்சியை வழங்க நடவடிக்கை எடுக்கும்.
  18. முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா மரணச் சர்ச்சை குறித்து விசாரணை ஆணையம் நிறுவப்படும்.
  19. மாவட்ட ஆட்சியர், வட்டாச்சியர், வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியோரின் வலைதளங்களில், சட்டமன்ற & நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் மனுக்களை ஆவணப்படுத்தி, குறைகளை களைய நடவடிக்கை எடுத்தல்.
  20. அரசிடமிருந்து பொதுமக்கள் கோரும் சாதி சான்றிதழ், வாரிசு சான்றிதம்,புதுப்பட்டா & பட்டா பெயர் மாற்றம், வருவாய் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதியோர் மற்றும் இதர ஓய்வூதியங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் கிடைக்க வகை செய்யும் சேவை உரிமைச் சட்டம் இயற்றப்படும்.
  21. அரசு நிர்வாகத்தில் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு செலவினங்கள் கட்டுப்படுத்தப்படும்.
  22. ரூபாய் 9 இலட்சம் கோடியாக உள்ள தமிழக அரசின் கடன் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  23. நட்டத்தில் இயங்கும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களை சீர்செய்ய உயர் நிலை வல்லுநர் குழு அமைக்கப்படும்.

விவசாயிகள் & கிராம கைவினைஞர்கள்[தொகு]

  1. மத்திய அரசு கொண்டு வர உள்ள வேளாண்மைக் கொள்கையை, திமுக அரசு அமைந்தவுடன் நீக்க நடவடிக்கை எடுக்கும்.
  2. காவேரி வடிநிலப் பகுதிகளில் மத்திய அரசு மீண்டும் எரிவாயு எடுக்க முயற்சித்தல், அதனை திமுக அரசு தடுக்கும்.
  3. வேளாண்மைக்கு என தனியே ஆண்டு தோறும் வரவு-செலவு திட்டம் தயாரிக்கப்படும்.
  4. சிறு, குறு விவசாயிகள் மற்றும் கிராமப்புற கைவினைநர்களின் உற்பத்திப் பொருட்களை விற்க, நகர்புறங்களில் விற்பனை சந்தைகள் நிறுவப்படும்.
  5. வேளாண் விற்பனை வருவாயை அதிகரிக்க புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  6. சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
  7. சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வேளாண்மை சங்கங்களில் பெற்றுள்ள பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
  8. வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும்.
  9. இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த வேளாண்மைத் துறையில் தனியாக ஒரு பிரிவு அமைக்கப்படும்.
  10. மறைந்த வேளாண் அறிஞர் கோ. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆய்வு மையம் தொடங்கப்படும்.
  11. இயற்கை வேளாண்மை செய்பவர்களுக்கு இடுபொருளுக்கு மானியம் வழங்கப்படும்.
  12. தோட்டக் கலையை மேம்படுத்த கொடைக்கானல்]] மன்னவனூரில் 390 ஏக்கர் நிலத்தில் மண்டல தோட்டக் கலை ஆய்வு மையம் அமைக்கப்படும்.
  13. அதிகபட்சம் 5 ஏக்கர் வரை சொட்ட நீர்ப்பாசான முறையை ஊக்குவிக்க அனைத்து விவசாயிகளுக்கு 90% மானியம் வழங்கப்படும்
  14. 100 நாள் ஊரக வேலைத் திட்டம்த்தை. 150 நாட்களாக உயர்த்தப்படும். தினக்கூலி 300 ஆக உயர்த்தி வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தை பேரூராட்சிப் பகுதிகளில் விரிவு படுத்தப்படும்.
  15. வேளாண்மை நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  16. மின் இணைப்பு கோரிய அனைத்து விவசாயிகளுக்கும் தடையின்றி இருமுனை மின் இணைப்பு வழங்கப்படும். ஏழை விவசாயிகளுக்கு மின் மோட்டர் வாங்க மானியம் வழங்கப்படும்.
  17. 3 ஏக்கர் வரை வேளாண்மை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டர் வாங்க ரூபாய் 10,000 மானியம் வழங்கப்படும்.
  18. குறு, சிறு விவசாயிகள் 10 பேர் இணைந்து கூட்டுப்பண்ணை முறையில் விவசாயம் செய்தால் வேளாண் கருவிகளுக்கு 10% மானியம் வழங்கப்படும்.
  19. கணவனை இழந்த அல்லது கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் 10 பேர் இணைந்து ஆடு அல்லது கோழிப் பண்ணை வைப்பதற்கு ஆகும் செலவில் 30% மானியம் வழங்கப்படும்.
  20. 12ஆம் வகுப்பு படித்த கிராமப்புற மகளிர் இணைந்து தொழிற் கூட்டுறவு சங்கங்கள் அமைத்தால் 25% மானியம் வழங்கப்படும்.
  21. நீர் ஆதாரம், நில வளம், தட்ப வெப்பம், இயற்கை பாதிப்புகள் கருத்தில் கொண்டு விவசாயிகள், அரசு அதிகாரிகள் மற்றும் சுற்றுச் சூழல் வல்லுநர்கள் கொண்ட மண்டலக் குழுக்கள் அமைக்கப்படும்.
  22. ஊராட்சி ஒன்றியங்கள் தோறும் தானிய சேமிப்பு கிடங்கிகள், உலர்களங்கள் மற்றும் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.
  23. காட்டுப் பகுதிகளில் யானைகளால் மிதிபட்டு இறப்பர்வர்களுக்கு அரசு இழப்பீடு தொகை 5 இலட்சம் உயர்த்தி வழங்கப்படும்.
  24. தமிழ்நாட்டில் வேளாண் துறையில் மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை தமிழ்நாட்டில் புகுத்துவதை எதிர்க்கும்.
  25. கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூரில் 360 ஏக்கர் பரப்பளவில் தோட்டக் கலைப் பல்கலைக்கழகம் நிறுவப்படும்.
  26. மதுரையில் வேளாண்மைப் பல்கலைக்கழகம் நிறுவப்படும்.
  27. சத்துணவு மையங்கள், அரசு உணவு விடுதிகள் மற்றும் அரசு மாணவர் விடுதிகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் மட்டுமே கொள்முதல் செய்யப்படும்.
  28. பனை வெல்லம் காய்ச்சும் தொழிலாளர்களுக்கு சிறப்புக் கடன் வசதி வழங்கப்படும். பனை வெல்லத்தை அரசு நியாய விலைக் கடைகளில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  29. இயற்கை சீற்றத்தால் அழிந்த ஒரு குறிப்ப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் பயிர் காப்பீட்டு உரிமை வழங்கப்படுவது போல், ஒரு தனி நபரின் பயிருக்கு இழப்பு ஏற்பட்டாலும் பயிர் காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும்.
  30. ஏரி, கண்மாய்கள் மற்றும் அணைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் மற்றும் மட்பாண்டம் செய்வோர் இலவசமாக அள்ளிச் செல்ல அனுமதி வழங்கப்படும்.
  31. தமிழகத்தில் பல பகுதிகளில் மூலிகைத் தோட்டங்கள் அமைக்கப்படும்..
  32. திருப்பத்தூர் மாவட்டம், காவலூரில் மூடப்பட்ட மூலிகைத்தோட்டம் மீண்டும் திறக்கப்படும்.
  33. தேவையான மாவட்டங்களில் பட்டுக்கூடு விற்பனை மையங்கள் அமைக்கப்படும்.
  34. தென்னை மரத்திலிருந்து நீரா பானம் எனும் பதநீர் விற்பனை செய்தலை ஊக்குவிக்கப்படும்.
  35. தென்னை விவசாயிகளின் நலன் கருதி ஊக்கத் தொகை வழங்கப்படும். வண்டுகளால் முற்றிலும் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.
  36. கொப்பரைத் தேங்காய்களை அரசின் தென்னை நல வாரியத்தின் மூலம் கொள்தல் செய்தல் மற்றும் அரசே விலை நிர்ணயம் செய்யும்.
  37. அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வட்டார வேளாண்மை அலுவலகங்களில் மண் பரிசோதனை ஆய்வு மையம் அமைக்கப்படும்.
  38. நியாய விலைக் கடைகளில் சிறு தானியங்கள், செக்கு எண்ணைய், நாட்டுச் சக்கரை மற்றும் வெல்லம் விற்கப்படும்.
  39. விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களை நடமாடும் உழவர் நண்பன் ஊர்திகளில் கொண்டு சென்று, மானிய விலையில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  40. உயிரி தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் பயன்படுத்தி வேளாண்மை செய்பவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.
  41. வேளாண்மையைப் பாதிக்கும் கடரோல இறால் பண்ணைத் தொழில் முறைப்படுத்தப்படும்.
  42. 1000 ஏக்கர் பரப்பளவில் இருந்த, தற்போது செயலிழந்த குடுமியான் மலை அண்ணா வேளாண் ஆய்வு மையத்தை தரம் உயர்த்தி மீண்டும் திறக்க நடவடிக்க எடுக்கப்படும்.
  43. காவேரி வடிநிலப் பகுதிகளில் அனைத்து நீர் பாசானக் கால்வாய்களில் தூர் வாருதல் மற்றும் கரைகளை பலப்படுத்தல்.
  44. நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு 2500 ஆக உயர்த்தப்படும். அதே போல் கரும்பிற்கு குறைந்த பட்ச ஆதார விலையாக ரூபாய் 4000 வழங்கப்படும்.
  45. வேளாண் இயந்திரங்கள் வாங்கி, வாடகைக்கு விடுவதற்கு மாநிலம் முழுவதும் 500 வேளாண் தொழிநுட்பக் கூட்டுறவு அமைப்புகள் உருவாக்கப்படும். இக்கூட்டுறவு அமைப்புகள வேளாண்மை இயந்திரங்கள் வாங்க அரசு கடன் உத்தரவாதம் வழங்கும்.
  46. அனைத்து ரக விதை நெல்களுக்கும் மானியம் வழங்கப்படும்.
  47. ஈரோட்டில் நவீன மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும்.
  48. ஈரோட்டில் அரசு வேளாண் கருவிகள் உற்பத்தி தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
  49. தூத்துக்குடி, வேலூர், கரூர், தருமபுரி மாவட்டங்களில் பேரீச்சை வேளாண்மைக்கு மானியத்துடன் கூடிய சிறப்பு நிதியுதவி வழங்கப்படும்.
  50. மலைப்பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைக்க தடை விதிக்கப்படும்.
  51. தாலுகா அளவில் வேளாண் பயிர்கள் நோய் தடுப்பு நிலையம் அமைக்கப்படும்.

நீர் மேலாண்மை[தொகு]

  1. காவேரி ஆறு-குண்டாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும். இதே போன்று தாமிரபரணி ஆறு-கருமேனி ஆறு-நம்பியாறுகள் இணைக்கப்படும்.நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் 40,000 ஏக்கர் நிலத்தை வளப்படுத்த கன்னிகா மதகுக் கால்வாய் சீரமைக்கப்படும்.
  2. பொதுப்பணித்துறையிலிருந்து, நீர் பாசான துறையை பிரித்து புதிதாக நீர் வள ஆதாரங்கள் துறையை அமைக்கப்படும்.
  3. மற்ற மாநிலங்களிலிருந்து கிடைக்கக்கூடிய நீரின் அளவை உறுதி செய்ய நீர் மேலாண்மை ஆணையம் அமைக்க சட்டம் இயற்றப்படும்.
  4. திருச்சி, மதுரை, திருநெல்வேலி நகரங்களில் காவேரி ஆறு, வைகை ஆறு மற்றும் தாமிரபரணி ஆற்றாங்கரைகளில் பூங்காக்கள் அமைக்கப்படும்.
  5. கிராமபுறங்களில் உள்ள தரைப்பாலங்களை, மேம்பாலங்களாக மாற்றி அமைக்கப்படும்.
  6. முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் ரூபாய் 10,000 கோடி செலவில் மாநிலம் முழுவதும் நீர் மேலாண்மை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  7. மாநிலம் முழுவதும் ரூபாய் 2000 கோடி செலவில் 200 தடுப்பணைகள் கட்டப்படும்.
  8. ரூபாய் 3,000 கோடியில் கல்லணை அருகே விசுவந்தட்டை, விளாங்குடி, வீராமாங்குடி, குடிதாங்கி, வாழ்க்கை உயர்மட்ட மேம்பாலங்களுடன் 5 கதவணைகள் கட்டப்படும்.
  9. தமிழகப் புவியியலில் நில மட்டங்கள் மற்றும் நீர் மட்டங்களை புதிதாக அளவிட்டு நீர் மேலாண்மை செய்யப்படும்.
  10. சென்னை பெருநகர வெள்ளத் தடுப்பு மேலாண்மைக் குழு அமைத்தல். சென்னை வெள்ளத் தடுப்புக்கு ரூபாய் 5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  11. புயல் காலங்களில், ஏரி நீர் சென்னை நகரத்தில் தேங்குவதை தடுக்க, சென்னை மற்றும் சென்னை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளில் தூர் வாரப்படும்.
  12. நிலத்தடி நீர் மேலாண்மையை நிர்வகிக்க, நிலத்தடி நீர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்படும்.
  13. கல்லணை நீரை நீர்பாசானத்திற்கு கடைமடை வரை கொண்டு செல்ல நீரோடை வழித்தடங்கள் உருவாக்கப்படும்.
  14. ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பாலாறு-தாமிரபரணி போன்று, பிற ஆற்றுப் படுகைகளை மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.
  15. தென்னக நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.
  16. பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின் கீழ் ஆனைமலையாற்றில் அணை கட்ட கேரளரா அரசுடன் பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்படும்.
  17. மேல் நீராற்றிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைத்து அதன் மூலம் நல்லாறு-திருமூர்த்தி அணைக்கு நீர் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
  18. பெரியாறு-வைகை பிரதான கால்வாயிலிருந்து சாத்தையாறு அணைக்கு புதிய கால்வாய் அமைக்கப்படும்.
  19. பேச்சிப்பாறை அணை தூர் வாரப்பட்டு சீரமைக்கப்படும்.
  20. நொய்யல் ஆறு சீரமைக்கப்பட்டு, பவானி ஆறு-நொய்யல் ஆறு- அமராவதி ஆறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
  21. வரதமா ஆறு, சண்முகா நதி, அமராவதி ஆறு ஆகியற்றின் உபரி நீரை ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி பகுதிகளுக்கு கால்வாய் அமைத்து கொண்டு சென்று நீர் மேலாண்மையை மேம்படுத்தப்படும்.
  22. காவேரி ஆறு-குண்டாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றி, விருதுநகர் மாவட்டத்தின் நீர் வறட்சி நீக்கப்படும்
  23. கொளத்தூர் தோணிமடுவுத் திட்டம் நிறைவேற்றப்படும்.
  24. சேலம் சாணார்பட்டி-மூலக்காடு சாம்பல் நீரேற்றுத் திட்டம் நிறைவேற்றப்படும்.
  25. அத்திக்கடவு-அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும்.
  26. கிருஷ்ணகிரி மாவட்டப் பகுதிகளில் உள்ள ஏரிகள் இணைக்கப்படும்.
  27. கடலூரில் வெள்ளத் தடுப்புக்கு அரிவாள் மூக்கு வடிகால் திட்டம் மேற்கொள்ளப்படும்.
  28. சேது சமுத்திர திட்டம் நிறைவெற்றப்படும்.
  29. கச்சத் தீவை தமிழ்நாட்டுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மீனவர் நலன்[தொகு]

  1. அனைத்து மீனவர் சமுதாயங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படும்.
  2. தமிழ்நாடு-இலங்கை கடல் மீனவர்களின் பிரச்சனையை தீர்க்க சிக்கல் தீர்க்கும் மையங்கள் உருவாக்கிட இந்திய அரசை வலியுறுத்தும்.
  3. மீனவர் வீட்டு வசதி வாரியம் மூலம் மீனவர்களுக்கு 20 இலட்சம் புது வீடுகள் கட்டித்தரப்படும்.
  4. மீனவர் நலன் காக்க தேசிய மீனவர் நல ஆணையம் அமைத்திட இந்திய அரசை வலியுறுத்தும்.
  5. தமிழக மீனவர்களுக்கு எதிரான, மீனாகுமாரி குழு பரிந்துரைத்த ஆழ்கடல் மீன்பிடிக் கொள்கையை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
  6. மீனவர் கூட்டுறவு சங்கங்களின் பிரமாண வாக்கு மூலம் அடிப்படையில், நடுக்கடலில் இறந்த மீனவர்களின் இறப்புச் சான்றிதழ் 7 மாதம் காத்திராமல் உடனடியாக வழங்கப்படும்.
  7. மீனவர்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, மீன் வளத்துறை அமைச்சர் தலைமையில் கடலோரா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குறை தீர் கூட்டம் நடத்தப்படும்.
  8. புதிய மீன்வளக் கல்லூரிகள், கடல்சார் கல்லூரிகள் உருவாக்கப்படும்.
  9. மீனவர் பகுதிகளில் புதிய பள்ளிக்கூடங்கள் தொடங்கப்படும். மீனவர் பகுதிகளில் உள்ள ஆரம்ப மற்றும் நடுத்தரப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.
  10. .மீன்பிடித் தடைக்காலத்திற்கான நிவாரணத் தொகை ரூபாய் 8,0000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  11. மழைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு ஐந்தாயிரத்திலிருந்து 6,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்
  12. விசைப்படகுகளுக்கு மானிய விலை டீசல் 1800 லிட்டரிலிருந்து 2000 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும். மேலும் கட்டுமரம், பைபர் படகுகளுக்கு மானிய விலை டீசல் 300 லிட்டரிலிருந்து 400 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.
  13. மீனவர்களுக்கு தேவையான தளவாடங்கள் வாங்க மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும். உள்நாட்டு மீனவர்கள்
  14. பரிசல் மற்றும் வலைகள் வாங்க 50% மானியத்துடன் கடன் வழங்கப்படும்.
  15. படகுகளை மீட்டெடுக்க டிராக்டர்கள் குறைந்த வாடகையில் வழங்குதல்.
  16. நாட்டுப் படகு மீனவர்களுக்கும், மீன் விற்பனை செய்யும் பெண்களுக்கும் ஐஸ் பெட்டிகள் மானிய விலையில் வழங்கப்படும்.
  17. படகுகளில் மோட்டார் இஞ்சின் பயன்படுத்தும் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தி வழங்கப்படும்.
  18. தென் மாவட்ட மீனவர்கள் விசைப்படகின் வெளிப்புறத்தில் பொருத்தும் வெளிநாட்டு இயந்திரங்களை ஆண்டுக்கு 750 எண்ணிக்கையில் இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  19. அனைத்து மீனவ கிராமங்களில் மீன் உலர்த்தும் தளங்கள் அமைத்து தரப்படும்.
  20. மீன் பிடிக்கச் சென்று காணாமல் போன நாட்டுப் படகு மீனவர் குடும்பத்திற்கு நாள் தோறும் ரூபாய் 250 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்குவது போல், பெரிய படகான தோணி மீனவர்களுக்கும் இத்திட்டம் விரிவாக்கப்படும்.
  21. கடற்கரை மீனவ கிராமங்களில் மண் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு தடுப்புச் சுவர் அமைக்கப்படும்.
  22. அனைத்து மீன்பிடி துறைமுகங்களை நவீன முறையில் சீரமைத்து, குளிர்பதன சேமிப்பு கிடங்கிகள் கட்டப்படும்.
  23. குளச்சலில் மீன்பிடிப் படகுத் தொழிற்சாலை நிறுவப்படும்.
  24. ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களில் தொலைதொடர்பு வசதிகாக கடற்கரைகளில் உயர் கோபுங்கள் அமைத்தல்.

நெசவாளர்கள் நலன்[தொகு]

  1. காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா நினைவு பட்டுப்பூங்காவை மீண்டும் தொடங்குதல்.
  2. நெசவாளர்களுக்கு என தனி கூட்டுறவு வங்கி அமைத்து, அடையாள அட்டை வழங்குதல்
  3. தமிழக கூட்டுறவு நெசவாளர்கள் சங்கங்களுக்கு மட்டுமே தமிழக அரசின் இலவச வேட்டி & சேலைகள் நெய்ய அனுமதி வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் சீருடையை நெய்ய தமிழக விசைத்தறியாளர்களிடம் மட்டும் வழங்கப்படும்.
  4. நெசவாளர்களுக்கு தடையின்றி நூல் கிடைக்க தமிழக அரசே நூல் கொள்முதல் செய்து, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கும்.
  5. கைத்தறி நெசவாளர்கள் மட்டுமே நெய்யக்கூடிய துணிகள் பட்டியலை மறுசீராய்வு செய்யப்படும்.
  6. ஜவுளித் துறையை மேம்படுத்த ஜவுளி ஆணையம் அமைக்கப்படும்.
  7. பட்டு நூலை முறுக்கேற்ற இயந்திரங்களை அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும்.
  8. தேசிய கைத்தறி வளர்ச்சிக் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பட்டு & பருத்தி நூலுக்கு மானியம் 10% இருந்து 15% ஆக உயர்த்து வழங்கப்படும்.
  9. கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் இரண்டு மாத இலவச மின்சாரம் 200 யூனிட்டிலிர்ந்து 300 யூனிட்டாக உயர்த்தப்படும்.
  10. விசைத்தறி நெசவாளர்களுக்கு இரண்டு மாத இலவச யூனிட் 750 யூனிட்டிலிருந்து 1000 ஆக உயர்த்தப்படும்.
  11. நெசவாளர்கள் வீடு கட்ட மானியத் தொகை 4 இலட்சம் ஆக உயர்த்தித் தரப்படும். இத்திட்டம் நகர்புற நெசவாளர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
  12. நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் வழங்கப்படும் கடன் தொகைக்கான வட்டி 12% வசூலிப்பதை 8%ஆக குறைக்கப்படும்.
  13. நெசவாளர்கள் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை ரூபாய் 1000 பதிலாக ரூபாய் 2000 ஆக உயர்த்தப்படும்.
  14. அனைத்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு நிலுவையாக உள்ள தமிழக அரசு தரவேண்டிய தள்ளுபடித் தொகை உடனடியாக வழங்கப்படும்.

தொழிலாளர் நலன் & அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள்[தொகு]

  1. அமைப்புசாரா தொழிலாளர் வாழ்வு மேம்படவும், எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு 36 வகையான தொழிலாளர்களுக்கு தனித்தனி நலவாரியங்கள் அமைத்து, மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம், கல்வி, திருமண உதவி போன்ற சமூகப் பாதுகாப்பு வழங்கப்படும்.
  2. தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிறுவன ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருதல்.
  3. அரசு உதவி பெறும் அரசு சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப் பரிசீலனை செய்யப்படும்..
  4. அதிமுக ஆட்சியின் போது போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்.
  5. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் சொந்தமாக ஆட்டோ கடன் வாங்க ரூபாய் 10,000 அரசு மானியம் வழங்கப்படும்.
  6. மழைக்காலத்தில் உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை ரூபாய் 5,000 வழங்கப்படும்.
  7. பீடி உற்பத்தி தொழிலாளர்கள் அதிகம் வாழும் பகுதிகளில், 50 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
  8. உள்ளாச்சிப் பகுதிகளில் சலவைத்துறை கட்டித்தரவும், தேவையான கருவிகள் வழங்கிட ஆவண செய்யப்படும்.

கல்வி[தொகு]

  1. கல்லூரிக் கல்வி மற்றும் உயர் படிப்புகளுக்கு பெற்ற வங்கிக் கடனை செலுத்த இயலாத, 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் கல்விக் கடனை அரசே திருப்பிச் செலுத்தும்.
  2. நீட் தேர்வு ரத்து செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும்.
  3. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் மாணவர்கள் இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும்.
  4. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும்.
  5. பள்ளி இறுதிப் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். அனைத்து கல்வி நிலையங்களுக்கு இலவச இணைய (வை-பை) வசதி செய்து தரப்படும்.
  6. மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
  7. பொறியியல், மருத்துவம், வேளாண்மை போன்ற உயர் படிப்புகளில் ஒற்றைச் சாளர முறையில் தேர்வு செய்யப்படும் முதல் தலைமுறை ஏழை மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும்.
  8. வெளி நாட்டு வேலைவாய்ப்பு பொருட்டு மாணவர்களுக்கு அனைத்துக் கல்லூரிகளில் ஆங்கிலம், பிரான்சு, சீனம், அரபு, ஜப்பான், ஜெர்மனி மொழிகள் இலவசமாக கற்றுத் தரப்படும்.
  9. ஐஐடி, என் ஐ டி, எய்ம்ஸ், ஐ ஐ எம் போன்ற உயர் கல்வி நிலையங்களில் சேர்தவற்கான நுழைவுத் தேர்வுகளில் அதிக அளவு மதிப்பெண் பெற, மாவட்டத் தலைநகரங்களில் உயர்சிறப்புப் பயிற்சிகள் நடத்தப்படும்.
  10. மத்திய அரசு நடத்தும் இந்திய ஆட்சிப் பணி போன்ற தேர்வுகளுக்கும், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் தொகுதி 1, 2 மற்றும் இரயில்வே, வங்கிகள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்க சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை ஆகிய நகரங்களில் பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்.
  11. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பால் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
  12. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநில அரசுப் பட்டியலில் கொண்டு வர முயற்சிக்கப்படும்.
  13. அரசு பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
  14. பள்ளி மாணவர் பாடத்திட்டத்தில் சுற்றுச் சூழல் மற்றும் வேளாண்மையை ஒரு பாடமாக வைக்கப்படும். வாரம் மூன்று பாடவேளை உடற்பயிற்சி கல்விக்கு ஒதுக்கப்படும்.
  15. பள்ளிகளில் மொழிச் சிறுபான்மையோர் மாணவர்கள் உருது, கன்னடம், இந்தி, தெலங்கு கற்க வசதிகள் ஏற்படுத்தப்படும்.
  16. அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும்.
  17. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை புதுப்பொலிவுடன் புனரமைக்கப்படும்.
  18. நூலகக் ஆணைக் குழுவின் இயங்கும் அனைத்து நூலகங்களில் நூல்கள் வாங்க வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படும்.
  19. 2013ம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வுகளை தேர்ச்சி பெற்று, இன்னும் வேலை வாய்ப்பு பெறாதவர்களுக்கு வேலை வழங்கப்படும். ஆசிரியர் தேர்வுக்கான தகுதிச் சான்றிதழை ஆயுட்காலத் தகுதிச் சான்றிதழாக வழங்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  20. கிராமங்களில் பணிபுரியும் ஊர்ப்புற நூலகர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கப்படும்.
  21. மாவட்டம் தோறும் பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.
  22. பள்ளிக் கல்வித்துறையில் பகுதி நேர ஆசிரியர்களாகப் பணிபுரியும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  23. மாவட்ட நூலகங்கள் மற்றும் கிராமப்புற நூலகங்கள் அனைத்தும் புனரமைப்பு செய்து, புதிதாக நூல்களும், செய்தித்தாள்களும் வழங்கப்படும்.
  24. தமிழ்த்தொண்டாற்றிய ஆ. கார்மேகக் கோனார், த. வே. உமாமகேசுவரன், ந. மு. வேங்கடசாமி நாட்டார், உ. வே. சாமிநாதையர் ஆகியோர் பிறந்த ஊர்களில் அவர்கள் பெயரில் நூலகங்கள் நிறுவப்படும்
  25. கவிஞர் பட்டுக்கோட்டை அழகிரி பிறந்த ஊரில் நினைவு மண்டபம் நிறுவப்படும்.

வேலை வாய்ப்பு & சிறு, குறு தொழில் / கடனுதவி[தொகு]

  1. வேலை வாய்ப்பை பெருக்க மாநில திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்க நிறுவனம் உருவாக்கப்படும். வேலை வாய்ப்பு அலுவலகங்கள் பயிற்சி மையங்களாக செயல்படும். இதன் மூலம் புகுமுகத் தொழில் முனைவோர் அமைப்புகள் வேலை வாய்ப்புகள் பெருக்கப்படும்.
  2. ஆதரவற்ற சிறார்களுக்கு வேலை வாய்ப்பு தகுதி ஏற்படுத்திட திறன் வளர்ச்சி உரிமைச் சட்டம் நிறைவேற்றி, அதன் மூலம் வேலை வாய்ப்பு அல்லது தொழில் முனைவோராக பயிற்சி வழங்கப்படும்.
  3. தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 3.50 இலட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.
  4. தமிழகத்தில் அனைத்து வகையான நீர் வளங்களையும், வனம் மற்றும் இயற்கை வளங்களையும் பாதுகாத்திட 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 75,000 இளைஞர்கள் பணி அமர்த்தப்படுவர்.
  5. 75,000 சாலைப் பணிபாளர்கள் நியமிக்கப்படுவர். அதில் 30 ஆயிரம் இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
  6. திருக்கோயில்கள் மற்றும் கோயில் அறநிலையச் சொத்துக்களை பாதுகாக்க 25,000 பேர் பணியாளர்களாக நியமிக்கப்படுவர்.
  7. அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகம் கட்டுப்பாட்டில் 25,000 மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.
  8. கொரனா நோய்த் தொற்று காலத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகள் மீண்டும் இயக்கிட ரூபாய் 15,000 கோடி ஒதுக்கப்படும்
  9. தொழில் வளர்ச்சிக்கு புதிய கொள்கைகள் வகுக்கப்படும்.
  10. நிதி நிறுவங்களுடன் இணைந்து சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதியுதனை ஏற்பாடு செய்ய ஒரு அமைப்பை நிறுவப்படும்.
  11. தமிழகத்தில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் 75% வேலை வாய்ப்பு தமிழ்நாட்டவர்களுக்கே கிடைக்க சட்டம் இயற்றப்படும்.
  12. நலிவடைந்த சிறு, குறு நிறுவங்களை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
  13. அனைத்து தொழிற்சாலைகளுக்கு தங்குதடையற்ற மின்சாரம் வழங்க சிறப்பு மின்பாதைகள் அமைக்கப்படும்.
  14. புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க ஒற்றைச் சாளர முறை மேம்படுத்தப்படும்.
  15. தமிழக கனிம வளத்தை காத்திட புதிய கனிம வளங்கள் மற்றும் சுரங்கங்கள் அமைச்சகம் நிறுவப்படும்.
  16. தமிழ்நாடு அரசு மினரல்ஸ் நிறுவனம் மூலம் அரிய வகை கனிமங்கள் சுரண்டி எடுத்து, அரசின் வருவாய் பெருக்கப்படும்.
  17. கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டத் தோட்டத் தொழிலாளர்கள் நலன் கருதி ரப்பர் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் நிறுவப்படும்.
  18. மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள தொழில் வழித்தடத்தில் புதிய தொழில்கள் நடவடிக்கை எடுக்கப்படும்.
  19. முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரிகளுக்கு தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படும்.
  20. தொழில் நகரங்களில் புதிய தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.
  21. வேலையில்லா பட்டதாரிகள் புதிய குறுந்தொழில்கள் தொடங்க, ஆண்டுக்கு 25 பேருக்கு குறைந்த வட்டியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் ரூபாய் 20 இலட்சம் கடன் வசதி வழங்கப்படும்.
  22. இந்திய வார்ப்பட நிறுவனத்தின் கிளை கோயம்புத்தூரில் நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  23. சேலம் உருக்காலையை விரிவு படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  24. தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் குறைந்த அழுத்த மின் அளவு 150 எச்.பி-யிலிருந்து 200 எச். பி-யாக உயர்த்தப்படும்.
  25. நாடா இல்லாத விசைத்தறிக்களுக்கு குறைந்தபட்ச மின்கட்டணம் தனி விகிதப்படி விதி !!! ஏ !-ல் வசூலிக்கப்படும்.
  26. திண்டுக்கல், வேலூர் மற்றும் சென்னையில் தோல் பொருட்கள் பூங்கா அமைக்கப்படும்.
  27. கோழிப்பண்ணை அமைக்க வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் மட்டுமே அனுமதி பெற்றால் போதும் என்ற நிலை மீண்டும் கொண்டு வரப்படும்.
  28. 10 இலட்சம் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பட்டாசுத் தொழிற்சாலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  29. சிதம்பரத்தில் கவரிங் நகை சிறப்புத் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

ஆலைக்கழிவு சுத்தரிகரிப்பு பொது வசதிகள்[தொகு]

  1. ஆலைக் கழிவுகளை முறையாக அகற்றி, சுற்றுச்சுழலை பாதுகாக்க, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், வேலூர், அருப்புக்கோட்டை போன்ற நகரங்களில் பொது சுத்திரிகரிப்பு ஆலைகள் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும்..
  2. மேற்படி ஆலைக்கழிவு பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சலுகை கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படும்.

இளைஞர் நலன்[தொகு]

  1. 12ம் வகுப்பு & தொழிற்கல்வி படித்த இளைஞர்குழுக்களுக்கு சிறு, குறு தொழில் செய்ய முதலீட்டில் 10% செலுத்தினால், அரசு 25% மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற்றுத் தரப்படும்.
  2. பட்டாசு, பூட்டு, மிக்சி, கிரைண்டர் போன்ற சிறு, குறு தொழில்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், ஏற்றுமதி செய்வதற்கும் அரசு தேவையான உதவிகள் வழங்கும்.
  3. நாமக்கல்லில் குளிரூட்டப்பட்ட முட்டை சேமிப்பு கிடங்கி அமைக்கப்படும்.

மின்சாரம்[தொகு]

  1. மின் கட்டணம் ஒவ்வொரு மாதமும் கணக்கிட்டு வசூலிக்கப்படும்.
  2. மின்சாரக் கட்டணத்துடன் ஒவ்வொரு முறையும் வசூலிக்கப்படும் நிலைக்கட்டணம் ரூபாய் 50 வசூலிப்பதை நிறுத்தப்படும்.
  3. மின் கட்டணத்தை மின் கணக்கீட்டாளரே வசூலிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும்.
  4. அனைத்து சர்க்கரை ஆலைகளில் மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  5. அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் கோயில்களில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
  6. வேளாண் திடக்கழிவிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
  7. காற்றாலை மின்சாரத்தை இழப்பின்றி கொண்டு செல்ல சிறப்பு மின்வழித்தடங்கள் அமைக்கப்படும்
  8. மின் திருட்டு & மின் இழப்பை தவிர்க்க அனைத்து நகரங்களில் நிலத்தடி புதைவட மின்சாரக் கம்பிகள் அமைக்கப்படும்.
  9. நீலகிரி மாவட்டத்தில் அனைத்து குடும்ப கடை அட்டைதாரர்களுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும்.
  10. உடன்குடி & செய்யூர் அனல் மின் நிலையத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
  11. தனியார் நிறுவனங்களிடம் நாள் ஒன்றுக்கு 20,000 மெகா வாட் சூரிய ஒளி மின்சாரம் & காற்றாலை மின்சாரம் கொள்முதல் செய்யப்படும்.
  12. காலாவதியான காற்றாலைகளை அப்புறப்படுத்தி புதிய காற்றாலைகள் நிறுவப்படும்.

பொது விநியோகத் திட்டம்[தொகு]

  1. புதிதாக குடும்ப அட்டை விண்ணப்பிபவர்களுக்கு 15 நாளில் ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படும்.
  2. குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் இலவசமாக 20 கிலோ தரமான அரிசி வழங்கப்படும்.
  3. பல துறைகளின் கீழ் செயல்படும் நியாய விலைக்கடைகளை இனி ஒரே துறையின் கீழ் கொண்டு வரப்படும்.
  4. நியாய விலைக்கடைகளில் அனைத்துப் பொருட்கள் இனி பாக்கெட்டுகளில் வழங்கப்படும்.
  5. மின் சேமிப்பை கருத்தில் கொண்டு அனைத்து அட்டைதாரர்களுக்கு 3 எல் இ டி பல்புகள் வழங்கப்படும்.
  6. சர்க்கரை 1 கிலோ வீதம் வழங்கப்படும். மீண்டும் உளுத்தம் பருப்பு வழங்கப்படும்.

சுற்றுலா[தொகு]

  1. மாமல்லபுரம், குற்றாலம், கொடைக்கானல், கன்னியாகுமரி, திருவரங்கம், காஞ்சிபுரம், செஞ்சி, திருவண்னாமலை, இராமேசுவரம், மதுரை, ஏற்காடு, ஏலகிரி உள்ளிட்ட சுற்றுலா தளங்களின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
  2. பழமையான அரண்மனைகள் செப்பனிப்படும்.

மகளிர் நலம்[தொகு]

  1. அரசு & அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு கால விடுமுறை 9 இருந்து 12 மாதங்களாக உயர்த்தி வழங்கப்படும்.
  2. புதிய சிறப்பு தாய்ச்சேய் நலத் திட்டம், முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் செயல்படுத்தப்படும்.
  3. பொது இடங்களில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட தனி இட வசதி செய்து தரப்படும்.
  4. அனைத்து அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இருந்து 40% ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  5. சட்டமன்றம் & நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தும்.
  6. பெண்களை பாதிக்கும் மார்பகப் புற்றுநோய், கர்ப்பை வாய் புற்றுநோய்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பரிசோதிக்கப்பட்டு உயர் மருத்துவம் வழங்கப்படும்.
  7. கைம்பெண்கள் & கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
  8. கைம்பெண்களின் நலனுக்காக கைம்பெண் மகளிர் நல வாரியம் அமைக்கப்படும்.
  9. டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பெறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ரூபாய் 24,000/- வழங்கப்படும். இதனை மூன்றாம் மாதம் முதல் எட்டு மாதத்திற்கு மாதம் 3000/- வீதம் வழங்கப்படும்.
  10. மாவட்டத் தலைமையிடங்களில் பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்படும்.
  11. பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான இணைய வழி குற்றங்களைத் தடுக்க அனைத்து மாவட்டங்களில் சைபர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.
  12. ஈ.வெ.ரா. மணியம்மை நினைவு திட்டத்தில், ஏழை கைம்பெண்களின் மகளுக்கு திருமண உதவித் தொகை ரூபாய் 25,000/-இருந்து ரூபாய் 30,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும். அத்துடன் 8 கிராம் தங்கத் தாலி வழங்கப்படும்.
  13. பட்டம் அல்லது பட்டயப் படிப்பு முடித்த பெண்களின் திருமண உதவித் தொகை 50,000/-இருந்து 60,000/-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  14. அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற மகளிர் திருமண நிதி உதவித் திட்டத்தின் தொகை 30,000/-ஆக உயர்த்துவதுடன், 8 கிராம் தங்கத் தாலி வழங்கப்படும்.
  15. மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூபாய் 25,000/-இருந்து ரூபாய் 30,000/-ஆக உயர்த்தி வழங்கப்படும். 8 கிராம் தங்கத் தாலி வழங்கப்படும்.
  16. 5ஆம் வகுப்பு வரை படித்த ஆதிதிராவிடர் பெண்களின் திருமண உதவித்தொகை ரூபாய் 25,000/-இருந்து 30,000 ஆக உயர்த்தி வழங்கப்படுவதுடன், 8 கிராம் தங்கத் தாலி வழங்கப்படும். அதே போன்று பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்பு முடித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகை 50,000/-இருந்து 60,000/-ஆக உயர்த்தி வழங்கப்படுவதுடன், 8 கிராம் தங்கத் தாலி வழங்கப்படும்.
  17. டாக்டர் தருமாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவி 25,000/-இருந்து 30,000 ஆக உயர்த்தி வழங்குவதுடன், 8 கிராம் தங்கத் தாலி வழங்கப்படும்.
  18. பட்டம் அல்லது பட்டயப் படிப்பு முடித்த விதவைப் பெண்களின் மறுமணத்திற்கு நிதியுதவி ரூபாய் 50,000/- இருந்து ரூபாய் 60,000 ஆக உயர்த்தி வழங்கப்படுவதுடன் 8 கிராம் தங்கத் தாலி வழங்கப்படும்.
  19. அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூபாய் 60,000/- மற்றும் 8 கிராம் தங்கத் தாலி வழங்கப்படும். (மணமக்களில் ஒருவர் ஆதிதிராவிடராக இருத்தல் வேண்டும்)
  20. மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் ஸ்டேஷனரி பொருட்களை அரசு அலுவலகங்கள் கொள்முதல் செய்யும். மேலும் உற்பத்திக் கருவிகளை வாங்க 25% மானியம் வழங்கப்படும்.
  21. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள் ஒரு இலட்சம் கிராமப்புற மகளிர்க்கு கால்நடை வளர்க்க, மண் பாணை செய்தல், மீன் பிடித்தல், வண்ண மீன் வளர்ப்பு போன்ற தொழில்கள் அல்லது வணிகம் செய்ய வட்டியில்லாக் கடனாக ரூபாய் 50,000/- வழங்கபடும்.
  22. 35 வயதிற்கு மேற்பட்ட, திருமணமாகத, ஆதரவற்ற பெண்களுக்கு, அவர்களது கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கப்படும்.
  23. மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்யப்படும். இக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பூமாலைத் திட்டம் செம்மைப்படுத்தப்படும்.

பிற்படுத்தப்பட்டோர் & மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன்[தொகு]

  1. மத்திய அரசு கொண்டு வந்த பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்ற பிரிவை நீக்க வலியுறுத்தப்படும். பிற்படுத்தப்பட்டவர்களில் மேல்நிலையினர் பொருளாதார சமூகவாய்ப்பு பெற்றவர்களின் ஆண்டு வருமான உச்ச வரம்ம்பு 25 இலட்சமாக உயர்த்த வலியுறுத்தப்படும்.
  2. தமிழ்நாடு அரசே இட ஒதுக்கீடு கொள்கையை நிர்ணயத்துக் கொள்ள மத்திய அரசை வலியுறுத்து.
  3. மத்திய அரசின் கல்வி & வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வலியுறுத்தும்.
  4. உச்ச நீதிமன்றம் & உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடஒதுக்கீடு அடிப்படையில் நியமிக்க வலியுறுத்தப்படும்.
  5. சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தும்.
  6. மத்திய அரசின் ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் ஆசிரியர் பணி நியமனத்தில் 27% இட ஒதுக்கீட்டை கடைபிடிக்க வலியுறுத்தும்.
  7. விசுவகர்மா சாதியை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்தும்.
  8. அனைத்துக் கோயில் அறங்காவலர் குழுக்களில் விசுவகர்மா சாதியினர் ஒருவர் உறுப்பினராக நியமிக்கப்படுவார்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்[தொகு]

  1. அரசுப் பணிகளில் ஆதி திராவிடர் & பழங்குடியினருக்கு பின்னடைவு காலிப்பணியிடங்கள் (Blaclog Vacancies) கணக்கிட்டு நிரப்பப்படும்.
  2. கிராமப்புறங்களில் வாழும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் முதல் தலைமுறை பெண் வாரிசு மருத்துவம் அல்லது பொறியல் படிப்பில் அரசுக் கல்லூரியில் சேர்ந்தால், அனைத்து செலவினங்களை அரசே ஏற்கும். முன்னேறிய வகுப்பினர், ஆதி திராவிடர் அல்லது பழங்குடிப் பெண்ணை திருமணம் செய்திருப்பின், அவர்களுடைய பிள்ளைக்கும் இத்திட்டம் பொருந்தும்
  3. மத்திய அரசின் உதவியுடன் செயல்படும் சிறப்புக்கூறு திட்டத்தை (Special Component Plan) பட்டியல் சமூகத்தவர் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும்.
  4. ஆதி திராவிடர் & பழங்குடியினர் நலத்துறை நடத்தும் மாணவர்கள் விடுதிகளை மேம்படுத்தி, உணவுக் கட்டணம் உயர்த்தி வழங்கப்படும்.
  5. ஆதி திராவிடர் & பழங்குடியினர் மாணவ-மாணவியருக்கு வருடாந்திர கல்வி உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும்.
  6. நரிக்குறவர், குருவிகாரர், வேட்டைக்காரர், லம்பாடி சமூகத்தினரை பட்டியல் பழங்குடியினர் வகுப்பில் சேர்க்க வலியுறுத்தப்படும்.
  7. திருவாரூர் போன்ற மாவட்டங்களில் வாழும் இருளர், கணிக்கர் சமூகத்தினர்களுக்கு, விசாரணை செய்து உரிய சாதி சான்றிதம் வழங்கப்படும்.
  8. பழங்குடி சாதியினர்களுக்கு 100 நாட்களில் உரிய சாதிச் சான்றிதழ் வழங்கப்படும்.

தூய்மைப் பணியாளர் நலன்[தொகு]

  1. அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும்.
  2. பணியில் இருக்கும் போது தூய்மைப் பணியாளர் உயிர் இழக்க நேரிட்டால், அவரது வாரிசுகளில் ஒருவருக்கு கல்வி அடிப்படையில் பணி வழங்கப்படும்.
  3. தூய்மைப் பணியாளர்கள் பணியில் இருக்கும் போது, 10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் தேர்ச்சி பெற்றால், அதே துறையில் பதவி உயர்வு வழங்கப்படும்.
  4. ஊராட்சிகள், அரசுப்பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், அரசு மாணவர் விடுதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் பணி, ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும்.

சிறுபான்மையினர் நலன்[தொகு]

  1. இந்து பட்டியல் சமூகத்தவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் போன்று, பட்டியல் சமூக கிறித்தவர்களுக்கும் வழங்க மத்திய அரசை வலியுறுத்தும்.
  2. சிறுபான்மையின பெண்களின் கல்வி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
  3. வக்ஃப் வாரியத்தின் கோரிக்கைகள் பரிசிலனை செய்து நிறைவேற்றப்படும்.

மாற்றுத் திறனாளிகள் நலன்[தொகு]

  1. மாற்றுத் திறனாளிகள் சலுகைக்கான உடல் குறைபாடு 60% இருந்து 40% குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  2. மாற்றுத் திறனாளிகளுடன் செல்லும் உதவியாளர்களுக்கும் அரசுப் பேரூந்துகளில் கட்டணமில்லா பயணச் சலுகை வழங்கப்படும்.
  3. மாற்றுத் திறனாளிக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
  4. மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர்களுக்கு 3 சக்கர வண்டி வழங்கப்படும்.
  5. அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு செய்யப்படும்.
  6. அரசு அலுவலகம், கல்வி நிலையம், மருத்துவ மனை, பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் சாய்தள வசதிகளும், கழிப்பறைகளும் செய்து தரப்படும்.
  7. மாற்றுத் திறனாளிகளுக்கு தொழிற் பயிற்சி வழங்கிடவும், தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும்.
  8. அரசு வீட்டுவசதி வாரிய வீடுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்படும்.

வணிகர் நலன்[தொகு]

  1. குறு தொழில் & வணிகம் செய்பவர்களுக்கு வட்டியில்லாக் கடன் ரூபாய் 15,000 கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும். கிராமப்புற வாரச் சந்தை, திருவிழா மற்றும் தெரு ஓர நடமாடும் கடைகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் கட்டணம் ரத்து செய்யப்படும்.
  2. சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்காது.
  3. வணிக வரி அதிகாரிகள் விதிக்கின்ற உத்தேச வரி விதிப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்பவர்கள், 25% வரியை செலுத்த வேண்டும் என்ற விதிமுறையை ரத்து செய்யப்படும்.
  4. பன்மடங்கு உயர்த்தப்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி கடைகளின் வாடகைகள் மறு ஆய்வு செய்யப்படும்
  5. வணிகர் நல வாரியம் சீரமைக்கப்படும்.
  6. மத்திய அரசு தீப்பெட்டி, பட்டாசு, மெழுகுவர்த்தி உள்ளிட்ட 21 பொருட்களை சிறு தொழில் உற்பத்தியிலிருந்து நீக்கியதை, மீண்டும் சிறு தொழிலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
  7. மதுரை, திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி நகரங்களில் வணிக மையங்கள் அமைக்கப்படும்.
  8. நலிந்து வரும் உப்பு, வெள்ளிக் கொலுசு, வெள்ளி விளக்கு, பாத்திரங்கள் தொழில்களை குடிசைத் தொழிலாக அறிவிக்கப்படும்.
  9. பட்டாசு உற்பத்தி தொழிலை குடிசைத் தொழிலாக அறிவிக்கப்படும்.

ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர் நலன்[தொகு]

  1. புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும்.
  2. மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 70 வயது நிறைந்தவுடன் 10% மற்றும் 80 வயது நிறைந்தவுடன் 20% ஓய்வுதிய உயர்த்தி வழங்கப்படும்.

இந்தியாவில் 1940 முதல் 2 சூன் 2023 முடிய நடைபெற்ற இரயில் விபத்துகளின் விவரம்:

  1. தமிழக அரசின் ஊழியர்களின் பணி தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க மாநில நிர்வாகத் தீர்ப்பாயம் மீண்டும் அமைக்கப்படும்.
  2. ரூ 8000/- தொகுப்பு ஊதியத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை, மற்ற ஆசிரியரகளுக்கு வழங்குவது போன்ற காலமுறை ஊதியம் வழங்கப்படும்.
  3. பணிக்காலத்தின் போது உயர் கல்வி முடித்த ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.
  4. பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடிய ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை காரணமாக ஏற்பட்ட ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வு முரண்பாடுகள் களையப்படும்.

அங்கன்வாடி மற்றும் சத்துனவு ஊழியர் நலன்[தொகு]

  1. சத்துணவு & அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக பணியமர்த்தி, காலமுறை ஊதியம் வழங்கப்படும். மேலும் குறைந்தபட்ச ஓய்வூதியம் & பணிக்கொடை வழங்கப்படும்.
  2. பணிக்காலத்தில் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் இறப்பின், அவர்களது குடும்பத்திற்கு ரூபாய் 3 இலட்சத்திலிருந்து 5 இலட்சம் உயர்த்தி வழங்கப்படும்.
  3. முந்தைய அரசால் பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் இயற்கை எய்திருந்தால், அவர்களது வாரிசுக்கு அரசு வேலையும், குடும்பத்திற்கு நிவாரணமாக ரூபாய் 5 இலட்சம் வழங்கப்படும்.
  4. பகுதி நேரமாக பணிபுரிந்த தொழிற்கல்வி ஆசிரியர்கள் அனைவருக்கும் 50% பகுதிநேரப் பணிக்காலத்தை ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
  5. கதர் கிராமத் தொழில்கள் வாரியத் தொழிலாளர்கள், சுகாதாரத் துறையில் கொசு ஒழிப்புப் பரிசோதகர்கள் மற்றும் வேளாண்மை விதை சுத்திகரிப்பு நிலையத் தொழிலாளர்களுக்கு பணி மற்றும் ஊதியம் தொடர்பான கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும்.
  6. அரசு ஊழியர் & ஆசிரியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் குடும்ப மருத்துவ செலவுகளை உயர்த்துவதுடன், அறுவை சிகிச்சைக்கு மட்டுமின்றி தனியார் மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சேர்ந்து சிகிச்சை பெறும் அனைத்து செலவினங்களும் காப்பீட்டுத் திட்டத்தில் அடங்குமாறு புதிய காப்பீட்டுத் திட்டம் கொண்டுவரப்படும்.
  7. ஓய்வூதியம் பெறும் கோயில் பணியாளர்களுக்கு ரூபாய் 5,000 ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும்.

திருநங்ககையர் நலன்[தொகு]

  1. திருநங்கைகள் பெறும் ஓய்வூதியம் ரூபாய் 1000 இருந்து 1,500 ஆக உயர்த்தப்படும்.
  2. குடிசை மாற்று வாரிய வீடுகள் ஒதுக்கப்படும்.

முதியோர் ஓய்வூதியம்[தொகு]

  1. முதியோர் ஓய்வூதியம் ரூபாய் 1000 இருந்து 1,500 ஆக உயர்த்தப்படும்.
  2. அனைத்து மாவட்டங்களில் ஆதரவற்றவர்களுக்கான முதியோர் இல்லம் அமைக்கப்படும்.
  3. அறநிலையத் துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள பெரிய மற்றும் நடுத்தரக் கோயில்களில் மூத்தகுடி மக்கள் இலவசமாக இறைவனை தரிசிக்க தினம் காலை & மாலை ஒரு மணி நேரம் தனி வரிசை ஏற்படுத்தப்படும்.
  4. அனைத்து மருத்துவமனைகளிலும் முதியோர்களுக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்படும்.
  5. பெண் சிசுக் கொலைகள் முற்றிலும் தடுக்கப்படும்.

சமூக நலன்[தொகு]

  1. குழந்தைத் தொழிலாளர்கள் சட்டம் கண்டிப்புடன் அமல்படுத்தப்படும்.
  2. கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், திருமணமாகாத 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், இலங்கைத் தமிழ் அகதிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உழவர் பாதுகாப்பு திட்டப் பயனாளிகளின் உதவித்தொகை ரூபாய் 1,000 இருந்து 1,500 ஆக உயர்த்தப்படும்.
  3. ஆதரவற்றவர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கிட கலைஞர் உணவகம் திட்டம் முதல் கட்டமாக 500 இடங்களில் நிறுவப்படும்.
  4. நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவக் கல்லூரிகளில் 2.5% இடஒதுக்கீடு வழங்கப்படும்.
  5. நடைமேடைகளில் வாழ்பவர்கள் நலன் கருதி இரவு நேரக் காப்பிடங்கள் அமைக்கப்படும்.
  6. மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் அவரவர் படித்த பள்ளிகளில் வழங்கப்படும்.
  7. கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டி & சாதி வெறிக் கொலைகளை தடுக்க உயர்நிலைக் குழு அமைக்கப்படும்
  8. பத்திரிக்கையாளர்களுக்கு குழு காப்பீடு & மருத்துவ காப்பீடு திட்டம் & ஓய்வூதியம் வழங்குதல். மேலும் குடும்ப நல நிதியை உயர்த்தி வழங்குதல்
  9. பணிக்காலத்தில் இயற்கை எய்துபவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 5 இலட்சம் வழங்கப்படும்.
  10. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை போன்ற நகரங்களில் குடியிருப்பு மனைகள் ஒதுக்கப்படும்.
  11. பத்திரிக்கையாளர்கள் மீதான் அவதூறு வழக்குகள் திரும்பப் பெறப்படும்.
  12. கொரானா தொற்று நோய் காலத்தில் மருத்துவப் பணியில் இருந்த மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், நகராட்சி மற்றும் அரசு அலுவலர்கள், காவலர்கள், முன்களப் பணியாளர்கள் இறந்தால் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.
  13. குறைந்த வருவாய் ஈட்டும் சிறுநீரக நோயாளிகளுக்கு, அரசு மாவட்ட மருத்துவமனைகளில் குறைந்த கட்டணததில் இரத்தம் சுத்திரிக்கப்படும் (Dialysis Centre) மற்றும் புற்றுநோய் சிகிச்சை வார்டுகள் நிறுவப்படும்.
  14. திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தொழிலாளர் காப்பீடு மருத்துவமனைகள் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும்.
  15. அனைத்து தாலுகா மருத்துவமனைகளில் இயன்முறை மருத்துவப் பிரிவு (Physiotheraphy) தொடங்கப்படும்.
  16. கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.
  17. மூன்றாண்டுகளுக்குள் கோவை, நெல்லை, திருச்சி மற்றும் கிருஷ்ணகிரியில் புதிய உயர் சிறப்பு மருத்துவமனைகள் கட்டப்படும்.
  18. 108 ஆம்புலன்ஸ் திட்டம் மூலம் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 6 வீதம் 2,000 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  19. மாவட்ட நெடுஞ்சாலைகளில் 50 கிலோ மீட்டருக்கு ஒரு அவசர மருத்துவமனை அமைக்கப்படும்.
  20. நீலகிரி, கொடைக்கானல், ஏலகிரியில் பல்நோக்கு மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
  21. இரத்த அழுத்த நோய் & சர்க்கரை நோயாளிகளுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு தொடங்கப்படும்.
  22. மூளைக்காய்ச்சல், வயிற்றுப் போக்கு, மஞ்சள் காமாலை & கோவிட்-19க்கு தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும்.
  23. தாம்பரம், சோழிங்கநல்லூர், மதுரவாயலில் புதிய அரசு நவீன மருத்துவமனைகள் கட்டப்படும்.
  24. அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை வசதிகள் தரப்படும்.
  25. அரசு மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்படுவதுடன், ஒப்பந்த மருத்துவர்கள் & செவிலியர்களின் பணி நிரந்தரம் செய்யப்படும்.
  26. மருத்துவம் சார்ந்த சான்றிதழ் & பட்டயப் படிப்பிற்கான கல்லூரிகள் (Para Medical Courses) தொடங்கப்படும்.
  27. ஆயுர்வேதம், சித்தா, யுனானி & ஹோமியோபதி பட்டம் பெற்ற மருத்துவர்களுக்கு அரசு உரிய அங்கீகாரம் வழங்கப்படும்.
  28. படிப்படியாக மதுவிலக்கை மேற்கொள்ளவும், மதுவுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து விடுவிக்க மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மறுவாழ்வு மையங்கள் நிறுவப்படும்.

சுற்றுச் சூழல்[தொகு]

  1. சென்னை பாயும் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய், மாம்பலம் கால்வாய், காட்டன் கால்வாய், ஓட்டேரி நல்லா, விராங்கல் ஓடைகளில் கழிவு நீர் கலப்பதை தடுத்து, சுத்திகரித்து ஆறுகளில் நீரை விடப்படும்.
  2. காவேரி, வைகை, தாமிரபரணி, தென்பெண்ணை, பாலாறு, வெள்ளாறு, குண்டாறு, சிறுவாணி, பம்பாறு, நம்பியாறு, கோதையாறு, நொய்யல், கெடிலம், பவானி, மணிமுத்தாறு, அமராவதி உள்ளிட்ட ஆறுகளில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்கப்படும்.
  3. அரசு கட்டிடங்களின் சுவர்களில் எழுதுதல், வரைதல் & சுவரொட்டி ஒட்டுதல் தடுக்கப்படும்.
  4. பழவேற்காடு, வேடந்தாங்கல், வடுவூர், சித்திரங்குடி, கூந்தங்குளம், வெள்ளோடு, வேட்டங்குடி போன்ற பறவைகள் சரணாலயங்களில் பறவை ஆய்வு மையங்கள் அமைக்கப்படும்.
  5. தமிழகம் முழுவதும் மரங்கள் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
  6. மாநகராட்சிகள் & நகராட்சி பகுதிகளில் எரிவாயு மூலம் பேருந்துகள் இயக்கப்படும்.
  7. காடுகள் வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
  8. காடு & காசு சார்ந்த பகுதிகளில் விலங்குகள்-மனித மோதல்களைத் தடுத்திட வன ஆணையம் அமைக்கப்படும். மேலும் தருமபுரி, தென்காசி, கோபிச்செட்டிப்பாளையத்தில் வன இயல் கல்லூரிகள் அமைக்கப்படும்.

விளையாட்டுகள் மேம்பாடு[தொகு]

  1. தமிழ்நாட்டை 4 மண்டலங்களாகப் பிரித்து, ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கான பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். பயிற்சி விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
  2. சென்னையில் மிகப்பெரிய விளையாட்டு நகரம் அமைக்கப்படும்.
  3. அரசு வேலையில் விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
  4. இந்திய அளவில் மற்றும் பன்னாட்டு அளவில் பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்.
  5. ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ. 1,000 தரப்படும்.

சட்ட மன்றம் & சட்ட மேலவை[தொகு]

  1. மீண்டும் சட்ட மேலவை அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
  2. சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பப்படும்.
  3. சட்டமன்றம் ஆண்டிற்கு குறைந்தது 100 நாட்கள் நடத்தப்படும்.
  4. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் பொதுமக்களிடமிருந்து மாவட்டந்தோறும் பெற்ற குறை தீர்வு மனுக்கள் மீது 100 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.
  5. ஐஏஎஸ் & ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டத்தில் சீரமைப்பு மேற்கொள்ளப்படும்.

புதிய மாவட்டங்கள் & உள்ளாட்சி அமைப்புகள்[தொகு]

  1. காஞ்சிபுரம்,
  2. பெரிய பேரூராட்சிகளை இரண்டாகப் பிரித்தல்.
  3. காஞ்சிபுரம், தாம்பரம், கடலூர், திருவண்ணாமலை, கும்பகோணம், கரூர், நாமக்கல், காரைக்குடி, தேனி, அல்லி நகரம், பெரியகுளம், புதுக்கோட்டை, விருதுநகர் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துதல்
  4. தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் வெள்ள நீர் வடிகால்கள் அமைத்தல்

காவல் துறை[தொகு]

  1. அனைத்து காவலர்களுக்கும் வாரம் ஒரு விடுமுறை வழங்குதல்
  2. பணியில் இறக்கும் காவலர்களுக்கு இழப்பீடு தொகை ரூபாய் 1 கோடி உயர்த்துதல்
  3. போலீஸ் ஆணையம் அமைத்தல்
  4. மாநில & மாவட்ட அளவில் காவலர்கள் குறைதீர்வு அமைப்பு ஏற்படுத்தல்
  5. மருத்துவப்படி, இடர்காலப் படி, உயர்த்தி வழங்குதல்
  6. 7 ஆண்டுகள் இரண்டாம் நிலைக் காவலர்களாக பணிபுரிந்தவர்களுக்கு 10 ஆண்டுகளில் முதல்நிலை காவலராக பதவி உயர்வும்; 20 ஆண்டு பணி முடித்த தலைமைக் காவலர்களுக்கு, 20 ஆண்டுகளில் சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கப்படும்.
  7. ஊர்காவல் படையினரின் எண்ணிக்கை அதிகரித்தும், பணி நாட்கள் உயர்த்தியும் வழங்கப்படும்.

நகர்புற மேம்பாடு[தொகு]

  1. சென்னை போன்ற நகரங்களில் நவீன அடுக்குமாடி கார் நிறுத்தும் வசதிகள் மேற்கொள்ளப்படும்
  2. பெருந்துறை, சேலம், சங்ககிரி, திருச்சி, திருச்செங்கோடு நகரங்களில் ஆட்டோநகர்கள் அமைக்கப்படும்
  3. சென்னை போன்ற முக்கிய நகரங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.

குடிநீர் வசதி[தொகு]

  1. சென்னை போன்ற நகரங்களில் புதிய குழாய்கள் பதித்து குடிநீர் வழங்கப்படும்.
  2. அனைத்து கிராமப்புறங்களில் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்படும்
  3. நரிப்பையூரில் கடல் நீர் குடிநீராக மாற்றும் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்
  4. நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் குழாய் இணைப்பு கோரிய 15 நாட்களில் இணைப்பு வழங்கப்படும்

வீட்டு வசதி[தொகு]

  1. கிராமப்புறங்களில் காங்கிரீட் வீடுகள் கட்ட மானியத் தொகை ரூபாய் 4 இலட்சம் வழங்கப்படும்.
  2. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் & குடிசை மேம்பாட்டு வாரியத்தில் வாங்கிய வீடுகளுக்கு கடனை அடைத்தவர்களுக்கு கிரயப் பத்திரம் உடனடியாக வழங்கப்படும்.
  3. பழைய சமத்துவபுரங்களை சீர் செய்து, புதிய சமத்துவபுரங்கள் கட்டப்படும்.
  4. ஆதிதிராவிடர்களுக்கான தொகுப்பு வீடுகளை சீரமைத்தோ அல்லது புதிதாக கட்டித்தரப்படும்.
  5. கிராம நத்தம் நிலங்களில் குடியிருப்போர்களுக்கு அடிமனை பட்டாக்கள் வழங்கப்படும். மேலும் ஆட்சேபனை இல்லா நகர்புற புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போர்களுக்கு இலவசமாக மனைப் பட்டா வழங்கப்படும்.
  6. பள்ளிக் குழந்தைகளுக்கு காலையில் பால் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
  7. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் உற்பத்தி பெருக்கப்படும்

இந்து சமய அறநிலையத் துறை[தொகு]

  1. திருத்தணி, சோளிங்கர், திருநீர்மலை, திருச்சி மலைக்கோட்டை, திருச்செங்கோடு போன்ற மலைக்கோயில்களுக்கு செல்ல கேபிள் கார் அமைக்கப்படும்.
  2. பூசாரிகள் நல வாரிய உறுப்பினர்களுக்கு ஊதியமாக ரூபாய் 2,000 வழஙகப்படும். ஓய்வூதியம் மாதம் ரூபாய் 4,000 வழங்கப்படும்.
  3. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் காங்கிரீட் சாலை அமைத்து, இருபுறங்களில் மரங்கள் அமைத்தும், தோட்டம் வளர்க்கப்படும்.
  4. திருவண்ணாமலையில் தோரோடும் சாலைகளில் புதைவட மின்கம்பித் தடங்கள் அமைக்கப்படும்.
  5. திருவண்ணாமலை மலைப்பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்படும்.
  6. அனைத்து கோயில் தெப்பக்குளங்கள் தூர் வாரப்படும்.
  7. கோயில்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.
  8. தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.
  9. குடமுழுக்கு நடத்தாத கிராமக் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த ரூபாய் 1,000 கோடி ஒதுக்கப்படும்.
  10. பகுதி நேரம் & ஒப்பந்தக் கோயில் பணியாளர்களை நிரந்தரம் ஆக்கி, காலமுறை ஊதியம் & ஓய்வூதியம் வழங்கப்படும்.
  11. 14 ஆண்டுகளாக காத்திருக்கும் 205 அர்ச்சகர்களுக்கு பணி நியமனம்.
  12. அனைத்து சாதியினரும் கோயில் அர்ச்சகர் ஆகலாம் எனும் திட்டம் செயல்படுத்தப்படும்.
  13. வள்ளலார் பெருமை போற்றும் வகையில் வடலூரில் பன்னாட்டு மையம் அமைக்கப்படும்.
  14. ஆன்மீகத் தலங்களில் பேருந்து நிலையங்கள், தங்குமிடங்கள் அமைக்கப்படும்.
  15. மசூதிகள், தேவாலயங்கள் சீரமைக்க, புதுப்பிக்க ஆண்டுக்கு ரூபாய் 2,00 கோடி ஒதுக்கப்படும்.

போக்குவரத்து[தொகு]

  1. சென்னை துறைமுகத்திலிருந்து மணலி-திருவெற்றியூர் சந்திப்பிற்கு கடல் வழி மேம்பாலம் கட்ட மத்திய அரசை வலியுறுத்தும்.
  2. அனத்துப் பயணியர் பேருந்துகளில் புவியிடங்காட்டி (ஜிபிஎஸ்) கருவிகள் பொருத்தப்பட்டு, சிறப்பு உதவிக்கான தொலைபேசி எண்கள் (எல்ப் லையைன்ஸ்) ஒதுக்கப்படும்.
  3. கொடைக்கானல்-பழனி மலைக்களுக்கிடையே கேபிள் கார்கள் அமைக்கப்படும்.
  4. அனைத்து உள்ளாட்சிகளின் பேருந்து நிலையங்களின் தரம் உயர்த்தப்பட்ட்டு, பெண் பயணிகள் தங்குமிடம், குளியல், கழிப்பறை, தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் போன்ற வசதிகள் செய்யப்படும்.
  5. கிராமங்களுக்கு தனியார் சிற்றுந்து சேவைகள் இயக்கப்படும்
  6. அரசு பேருந்து கட்டணங்கள் சீரமைக்கப்படும்.
  7. விபத்தில் சிக்கும் அரசு பேருந்து பயணிகளுக்கு காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்படும்.
  8. விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் நான்கு வழிச்சாலைத் திட்டம் மேற்கொள்ளப்படும்.
  9. முக்கிய இருவழிச்சாலைகள் நான்கு வழிச்சாலைகளாகவும்; 4 வழிச்சாலைகளை 6 வழிச்சாலைகளாக மேம்படுத்தப்படும்.
  10. தேவைப்படும் நகரங்களில் புறவழிச்சாலைகள் அமைக்கப்படும்.
  11. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை நகரங்களில் பறக்கும் சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
  12. சென்னை-கன்னியாகுமரியை இணைக்கும் கிழக்கு கடற்கரைச் சாலையை முழுமையாக நிறைவேற்றப்படும்.
  13. சென்னை-கன்னியாகுமரி இணைக்க, 6 வழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறையை வலியுறுத்தும்.
  14. பெருநகரங்களின் ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்கள் மற்றும் அவைகளை நகரங்களுடன் இணைக்க புறவழிச்சாலைகள் அமைக்கப்படும்.
  15. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்கள் அமைக்கப்படும்.
  16. திருவான்மியூர்-மாமல்லபுரம் வரை பறக்கும் இரயில் திட்டம் கொண்டு வரப்படும்.
  17. எண்ணூர்-சென்னை செண்டிரல் வரையிலும்; தீவுத் திடல் முதல் மாமல்லபுரம் வரையிலும் பக்கிங்காம் கால்வாய் சீரமைக்கப்படும்.
  18. சிறுசேரியில் வெளியூர் பேருந்து நிலையம் அமைக்கப்படும்.
  19. விஜயவாடா-சென்னை, எண்ணூர்; தூத்துக்குடி துறைமுகங்களுக்கு சரக்கு போக்குவரத்து நெடும்பாதை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும்.
  20. திண்டுக்கல்-கம்பம்-கூடலூர் இடையே புதிய இருப்புப் பாதை அமைக்க மததிய அரசை வலியுறுத்தும்.
  21. திருக்குவளை-நாகப்பட்டினம்; திருவாரூர்-திருத்துறைப்பூண்டி-காரைக்குடி; தஞ்சாவூர்-ஒரத்தநாடு-பட்டுக்கோட்டை; மன்னார்குடி-மதுக்கூர்-பட்டுக்கோட்டை; காரைக்குடி-இராமநாதபுரம்-தூத்துக்குடி; அரியலூர்-தஞ்சாவூர்; மதுரை-மேலூர்-காரைக்குடி இடையே புதிய இருப்புப் பாதைகள் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும்.
  22. ஐசிஎப்-ன் இரண்டாவது ஆலை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும்.
  23. ஆள் இல்லா இருப்புப் பாதை கடக்கும் இடங்களில் மேம்பாலங்கள் கட்ட மத்திய அரசை வலியுறுத்தும்.
  24. திரிசூலம்-வண்டலூர்; திருமங்கலம்-முகப்பேர்-அம்பத்தூர்; கத்திப்பாரா-பூந்தமல்லை வரையிலும் மற்றும் கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி நகரங்களில் மெட்ரோ இரயில் திட்டம் நிறைவேற்றப்படும்.
  25. சென்னை மெட்ரோ இரயிலில் மாணவர்கள் சலுகை கட்டணத்தில் பயணிக்க பரிசீலிக்கப்படும்.
  26. மதுரை பன்னாட்டு விமான நிலையத்தை முறைப்படி பன்னாட்டு விமான நிலையமாக அமைக்கவும்; சேலம் & தூத்துக்குடி விமான நிலையங்களை விரிவாக்க செய்திட மத்திய அரசை வலியுறுத்தும்.
  27. வேலூர், கரூர், ஓசூர், இராமநாதபுரம் நகரங்களில் விமான நிலையங்கள் அமைத்திட மத்திய அரசை வலியுறுத்தும்.

தொல்லியல் & பண்பாடு & சிலைகள் அமைத்தல்[தொகு]

  1. தொல்லியல் பொருட்களை காட்சிப்படுத்த தொல்லியல் அருங்காட்சியகங்கள் நிறுவப்படும்.
  2. கல்வி நிலையங்களில் நாட்டுப்புறக் கலைகள் பயிற்றுவித்தல், அரசு நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற நிகழ்ச்சிகள் நடத்துதல், ஆண்டுதோறும் அரசு சார்பில் நாட்டுப்புறக் கலை விழா நடத்தப்படும்.
  3. நாட்டுப்புற கலைஞர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதுடன்; ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும்.
  4. சென்னையில் திராவிட இயக்கத் தலைவர்கள் கோட்டம் எனும் வரலாற்று நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.
  5. இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை வேலு நாச்சியாருக்கு சிவகங்கையிலும்; பொல்லானுக்கு ஈரோட்டிலும் சிலை அமைக்கப்படும்.
  6. சென்னையில் மருது பாண்டியர்கள் & வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோர்களுக்கு சிலை வைக்கப்படும்.
  7. மெட்ராஸ் மாகாண முதலமைச்சர் பி. சுப்பராயனுக்கு சென்னையில் சிலை அமைக்கப்படும்.
  8. வேதநாயகம் பிள்ளைக்கு மயிலாடுதுறையில் சிலை அமைக்கப்படும்.
  9. தமிழகத்தின் புதிய தொல்லியல் களங்களில் தொல்லியல் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்.
  10. மைசூரில் உள்ள தமிழகத்தின் தொல்லியல் பொருட்களை தமிழ்நாட்டிற்கே கொண்டு வரப்படும்.

இயற்கைப் பேரிடர்கள்[தொகு]

  1. புயல், கன மழை, மழை வெள்ளம் போன்ற பேரிடர் தொடர்பான செய்திகளை அனைவருக்கும் குறுஞ்செய்திகள் & தொலைக்காட்சிகள் மூலம் பகிரப்படும்.
  2. கன மழை, புயல், மழை வெள்ளக் காலங்களில் பணிகளில் ஈடுபடும் காவல் நிலையங்கள். மருத்துவமனைகள், வருவாய் அலுவலகங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க ஜெனரேட்டர் வசதி செய்து தரப்படும்.
  3. பேரிடர் காலங்களில் மீட்புப் பணியில் ஈடுபடும் தன்னார்வ அமைப்புகளுக்கு ஊக்கமளிக்கப்படும்.

கிராமப் புற வளர்ச்சி[தொகு]

  1. அனைத்து கிராமங்களில் பொதுக் கழிப்பிடங்கள் அமைக்கப்படும்.
  2. கிராமப்புற மேம்பாட்டிற்கு தமிழ்நாடு கிராமப்புற மேம்பாடு நிதியம் அமைக்கப்படும்.
  3. கிராமப்புற இளைஞர்களுக்கு மின்சாரம், பிளம்பர் போன்ற தொழிற்பயிற்சி மற்றும் கால்நடை நோய்களுக்கு மருத்துவப் பயிற்சி வழங்கப்படும்
  4. தொலைதூர குக்கிராமங்களுக்கு சாலை, மின்சாரம், போக்குவரத்து, குடிநீர், கல்வி வசதிகள் செய்து தரப்படும்.
  5. அண்ணா மறு மலர்ச்சி திட்டம், நமக்கு நாமே போன்ற திட்டங்கள் மூலம் கிராமப்புற வேலையில்லா பட்டதாரிகளைக் கொண்ட சுய வேலைவாய்ப்புக் குழுக்கள் அமைக்கப்படும்.

கட்டுமானத் தொழில்[தொகு]

  1. மணல், செங்கல், சிமெண்ட், கம்பி போன்றவைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் கொண்டு வந்து, நியாயமான விலையில் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  2. வீட்டு மனை & கட்டிடங்கள் மதிப்பீடு செய்ய அரசு அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து இத்துறையில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும்.
  3. விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்படும். கட்டிட அனுமதிக் கட்டணம் சீரமைக்கப்படும். இரத்த சொந்தங்களுக்குள் சொத்துக்களை குறைந்த கட்டணத்தில் பதிவு செய்யப்படும்.
  4. கட்டிடத் தொழிலாளர்கள் & கட்டுமான பொறியாளர்களுக்கு தனி அமைப்பு உருவாக்கப்படும்.
  5. சொந்த இடத்தில் கட்டிடங்கள் கட்ட திட்ட ஒப்புதல் முறைகள் எளிதாக்கப்படும்.

நீதித் துறை[தொகு]

  1. வழக்கறிஞர் சேம நல நிதி 7 இலட்சம் இருந்து 10 இலட்சமாக உயர்த்தப்படும்.
  2. மாவட்ட நீதிமன்றங்களுக்கு வழக்கறிஞர்களுக்கு அலுவலக அறைகள் கட்டித்தரப்படும்.
  3. பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளை விரைவாக விசாரிக்க அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் நீதிமன்றங்கள் நிறுவப்படும்.
  4. பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்களை இரகசியமாக விசாரிக்க தனிப்பிரிவுகள் அமைக்கப்படும்.

முன்னாள் இராணுவத்தினர்[தொகு]

  1. முன்னாள் இராணுவத்தினரின் குறைகள் குறிப்பிட்ட காலவரைக்குள் களையப்படும். வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்

கால்நடை வளம்[தொகு]

  1. ஆம்புலன்ஸ் வாகன வசதிகளுடன் தேவையான இடங்களில் (புளு கிராஸ்) மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்
  2. அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
  3. சாலைகளில் வாகனங்களால் அடிபட்டு இறக்கும் கால்நடைகளுக்கு அரசு சார்பில் உரிய இழப்பீடு தொகை வழங்கப்படும்.
  4. காங்கேயம் காளைகள், இராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை வகை நாய்களை பாதுக்காக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  5. வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு மருத்துவ சோதனை அட்டைகள் வழங்கப்படும்.

பொது[தொகு]

  1. பொதுமக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் கண்காணிப்பு கேமாராக்கள் அமைக்கப்படும்.
  2. ஜனநாயக முறையில் போராடியவர்கள் மீதான பொய் வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
  3. அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தேர்வுகளில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
  4. கொரனாவால் மீண்டும் வரும் வரையில் சொத்து வரி உயர்த்தப்படாது.
  5. இரயில்களை தனியார் மயம் ஆவதை கைவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தும்.
  6. வங்கித் துறை & காப்பீடு நிறுவங்களை தனியார் மயம் ஆவதை கைவிடுமாறு மத்திய அரசசி வலியுறுத்தும்.
  7. எல் ஐ சி காப்பீடு நிறுவனத்தை தனியார் மயம் ஆவதை எதிர்க்கும்.
  8. மூத்த அமைச்சரின் கீழ் புதிய திட்டங்கள் செயலாக்கத் துறை நிறுவப்படும். இத்துறை மூலம் தேர்தல் நேரத்தில் பொதுமக்கள் கோரிக்கைகளை 100 நாட்களில் நிறைவேற்றுவதை கண்காணிக்கும். அரசு பதவி ஏற்ற 100வது நாளன்று முதலமைச்சர் ஊடகவியலாளர்களிடம் நேரில், நிறைவேற்றப்பட்ட பொதுமக்களின் குறைகளை தெரிவிப்பார். மாதத்தின் முதல் நாளன்று, தேர்தல் வாக்குறுதிகள் மீது எடுக்கப்பட்ட விரிவான ஆய்வை முதலமைச்சர் மேற்கொண்டு, அரசின் சாதனை அறிக்கையை (ரிப்போர்ட் கார்டு) ஊடகங்களுக்கு வழங்குவார்.
  9. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு மற்றும் தமிழகப் பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாய பாடமாக்கப்படும்.
  10. இராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஏழு பேரை விடுவிக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
  11. தமிழகத்தில் தமிழக இளைஞர்களின் 100% வேலை வாய்ப்ப்பு உறுதி செய்யப்படும்.
  12. பல்கலைக்கழகங்கள் இல்லாத முக்கிய மாவட்டத் தலைநகரங்களான காஞ்சிபுரம், ஈரோடு போன்ற நகரங்களில் புதிய பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்.
  13. 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு போக்குவரத்து கழகங்களில், தமிழ்நாட்டிற்குள் இலவசப் பயண வசதி வழங்கப்படும்.
  14. இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் இலங்கையை நான்காவது நாடாகச் சேர்த்து, ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டு.
  15. சிறீபெரும்புதூரில் 2,000 மெகா வாட் திரவ எரிவாயு மின் நிலையம் அமைக்கப்படும்.
  16. அனைத்து மகளிருக்கும் தமிழகம் முழுவதும் நகரப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகை வழங்கப்படும்
  17. கொரானா நிவாரண நிதியாக அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 4,000 வழங்கப்படும்.
  18. அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கு மாதாமாதம் ஒரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூபாய் 100 மானியம் வழங்கப்படும்.
  19. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 5ம்; டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 4ஆக குறைக்கப்படும்.
  20. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூபாய் 3 குறைக்கப்படும்.

மேற்கோள்கள்[தொகு]