பயனர்:ஆர்.தட்சிணாமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி

பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி (BHARATHIYAR VIDYALAYAM HIGER SECONDARY SCHOOL) என்பது தூத்துக்குடி மாநகரில் அமைந்துள்ள ஒரு தமிழ்நாடு அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியாகும்.

1944 ஆம் ஆண்டு உயர்திரு.சுப்பையா நாடார் அவர்களின் பெயரில் சுப்பையா வித்யாலயம் உயர் துவக்கப்பள்ளியாக அரும்பி ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் இப்பள்ளி சுப்பையா வித்யாலயம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியாக மலர்ந்தது.

1956 ஆம் ஆண்டு இப்பள்ளி வ.உ.சி. கல்விக்குழுவின் பொறுப்பிற்கு மாற்றப்பட்டு வ.உ.சி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் (V.O.C College of Education) மாதிரிப் பள்ளியாக பணி செய்து வாடா மலராக மணம் பரப்பி வருகிறது. அந்தப் பெருமை வ.உ.சி.கலைக்கோயில்களின் தந்தை உயர்திரு.A.P.C.வீரபாகு B.A அவர்களையே சாரும்.

1956 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இப்பள்ளியின் புதுக்கட்டிடத்திற்கான அடிக்கல் அப்போதைய தமிழக முதலமைச்சர் திரு.K.காமராஜ் அவர்களால் நிறுவப்பட்டது. புதுக்கட்டிடம் 1960 ஆம் ஆண்டு ஜூலை 26 ம் நாள் அப்போதைய மாநில அமைச்சர் திரு. R.வெங்கட்ராமன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

2005 ஆம் ஆண்டு முதல் மகாகவி பாரதியின் பெயரால் பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு மாணவ, மாணவியர் சேர்ந்து பயிலும் (Co-Education) பள்ளியாக சிறப்பாக செயல்படுகிறது.

அமைவிடம்

தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம் , தமிழ்நாடு

தகவல்

குறிக்கோள்: அன்பு, அறிவு, அறம்

தொடக்கம்: 1956

பால்: இருபாலர் பள்ளி

வகுப்பு: 6 முதல் 12 வரை

கல்விமுறை: தமிழ்நாடு மாநிலப் பள்ளி கல்வித்திட்டம்